This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, December 5, 2024

காதலிக்க மறுத்த 23 வயதான பெண் சிப்பாயை அடித்துக் கொன்ற இளைஞன்!! நடந்தது என்ன?


காதலிக்க மறுத்த 23 வயதான பெண் சிப்பாயை அடித்துக் கொன்ற இளைஞன்!! நடந்தது என்ன?

காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த 23 வயதுடைய முன்னாள் இராணுவ பெண் சிப்பாயை கொட்டனால் அடித்து கொன்ற, பாண் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை இரத்தினபுரி சிறிபாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவல, கிலிமலே வெலேகொட வீதியில் நேற்று முன்தினம் (04) காலை 7.30 மணியளவில் யுவதி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு தலைக்காதலன் கொட்டனால் யுவதியின் தலை மற்றும் உடம்பில் அடித்தான். யுவதி இரத்தக் காயங்களுடன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.எம். அஹிம்சா சமன்மாலி என்ற இந்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யுவதி நான்கு வருடங்கள் இராணுவத்தில் கடமையாற்றியவர்.

முச்சக்கரவண்டியில் நடமாடும் பாண் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் பலமுறை காதலிக்கக் கேட்டதாகவும், ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் யுவதியின் குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

யுவதி நடந்து சென்ற போது பின்னால் வந்து அவரது தலையில் தாக்கினார், மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடியை பொலிசார் கண்டுபிடித்தனர். தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலையுண்ட யுவதி இரத்தினபுரி நகரில் உள்ள வர்த்தக நிறுவனமொன்றில் அலமாரி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக பணம் செலுத்தியதாகவும், அதனை எடுத்து வருவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற வேளையில் சிறிபாகம சுதாகல வீதியில் வைத்து தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த யுவதி தனது பாட்டி வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்து விட்டு வீடு திரும்பியுள்ளார். உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை நேற்று (05) இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது. மாஜிஸ்திரேட் விசாரணையும் நேற்று நடந்தது.

யாழில் 3 வயதான சுஜித் கிணற்றில் தவறி வீழ்ந்து மரணம்


யாழில் 3 வயதான சுஜித் கிணற்றில் தவறி வீழ்ந்து மரணம்!!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை கிணற்றினுள் தவறி விழுந்து மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வல்லிபுரம் பகுதியை சேர்ந்த ரஜிவன் சுஜித் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

குழந்தை வீட்டு வளாகத்தில் விளையாடிக்கொன்டு இருந்ததாகவும் , திடீரென குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடிய நிலையில் , குழந்தை கிணற்றினுள் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

குழந்தையை உடனடியாக மீட்டு ,  பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டது என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார்

கிளிநொச்சியில் 14 வயதுச் சிறுவனுக்கு நிறை வெறி!! தாய் சடலமாக மீட்பு!! நடந்தது என்ன?


கிளிநொச்சியில் 14 வயதுச் சிறுவனுக்கு நிறை வெறி!! தாய் சடலமாக மீட்பு!! நடந்தது என்ன?

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் திட்டம் பகுதியில் குடும்பப்பெண் பரிதாப சாவைடைந்துள்ளார். உயிரிழந்தவரின் 14 வயதுடைய சிறுவன் அதித மது போதையில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.உயிரிழந்த தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக குறித்த மகன் மீட்டதாக ஆரம்ப விசரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயதுடைய சிறுவன் விசாரணைக்காக தர்மபுரம் பொலிசாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மரணத்தில் சந்தேகம் நிலவுகின்ற நிலையில் பூர்வாங்க விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்த நிலையில், முழுமையான விசாரணைக்காக பரிந்துரைத்துள்ளார்.இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மாட்ட நீதவானிற்கு அறிக்கை சமர்ப்பித்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த உயிரிழந்த தாய்க்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. பொலிஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 14 வயதுடைய சிறுவனும் அதிக மது போதையில் இருந்துள்ளார்.இந்த நிலையில் சிறுவர்கள் மது பழக்கத்துக்கு ஆளாவதாகவும், 16 சில்லறை மது பாண சாலைகள் திறக்கப்பட்டமை மாவட்டத்துக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.

மாவட்டத்தில் சிறுவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், மதுபானசாலைகளை மூட வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்ணியின் அலங்கோல வேலையால் மானம் போனது!! வெட்கத்தில் 19 வயது யுவதி மரணம்!!


அண்ணியின் அலங்கோல வேலையால் மானம் போனது!! வெட்கத்தில் 19 வயது யுவதி மரணம்!!

அத்துருகிரிய பனாகொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

பனாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

உயிரிழந்த யுவதியின் சகோதரனும் சகோதரனின் மனைவியும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சமூகத்தில் முகங்கொடுக்கும் பல்வேறு சவால்களினால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த யுவதி தனது பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அநுராதபுரத்தில் மொடலிங் செய்ய ஆசைப்பட்ட 23 வயது சிங்களத்தி வல்லுறவுக்குள்ளானது ஏன்?


அநுராதபுரத்தில் மொடலிங் செய்ய ஆசைப்பட்ட 23 வயது சிங்களத்தி வல்லுறவுக்குள்ளானது ஏன்?

முகநூல் விளம்பரம் மூலம் அறிமுகமான நபர் ‘போட்டோ ஷூட்டிங்கிற்கு பெண்களை தேடுவதாக’ கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை அடுத்து, மொடலாக ஆசைப்பட்டுச் சென்ற அழகுக்கலையில் ஈடுபடும் யுவதியொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக  அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ‘.

  அனுராதபுரம் நகருக்கு அருகில் வசிக்கும் 23 வயதுடைய அழகுக்கலையில் ஈடுபடும் யுவதி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

முகநூல் மூலம் அடையாளம் காணப்பட்ட நபர் அந்த யுவதியை தொடர்பு கொண்டு, ‘போட்டோ ஷூட்டிங்கிற்கு பெண்களை தேடுவதாக’ வும், யுவதி மொடலாக செயற்பட விரும்பினால், புகைப்பட கலையகமான தனது நிறுவனத்தின் தலைவர், யுவதியை சந்திக்க விரும்புவதாகவும், ‘புகைப்படம் குறித்த அனைத்து விவரங்களையும் அவரால் விவாதிக்க முடியும் என்றும் கூறினார்.

இதனை நம்பிச் சென்ற யுவதியை, அநுராதபுரம் திஹியாகம சந்தியில் இருந்து மல்வத்து ஓயாவை அண்மித்த ஹோட்டலுக்கு முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்ற சந்தேகநபர், ஹோட்டல் அறையில் வைத்து பலாத்காரம் செய்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த யுவதி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ் சுழிபுரம் விக்டோரியா கல்லுாரி மாணவன் சிறிபானுஜன் விபத்தில் பலி!! 15 வயது மாணவன் படுகாயம்!!


யாழ் சுழிபுரம் விக்டோரியா கல்லுாரி மாணவன் சிறிபானுஜன் விபத்தில் பலி!! 15 வயது மாணவன் படுகாயம்!!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை யாழ்ப்பாணம், சுழிபுரம் சந்திப்பகுதியில் இடம்பெற்றது. சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவனான முருகசோதி சிறிபானுசன் என்பவரே உயிரிழந்துள்ளார். அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த 15 மதிக்கத்தக்க மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பவத்தில் உயிரிழந்த மாணவனும், படுகாயமடைந்தவரும் மோட்டார் சைக்கிளில் மூளாய் நோக்கி பயணித்துள்ளார். சுழிபுரம் சந்தியில் வேகக்கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் 1990 அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தியபோதிலும், அம்புலன்ஸ் உரிய நேரத்துக்கு அங்கு வரவில்லை என்றும், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையைத் தொடர்பு கொண்டு அம்புலன்ஸ் அனுப்புமாறு கேட்ட போது அவர்கள் நேரங்கடத்தும் விதத்தில் பேசிக்கொண்டிருந்ததாகவும் அங்கு நின்றவர்கள் கூறினர்.

சம்பவம் பற்றிக் கேள்வியுற்ற விபத்துக்குள்ளான மாணவர்களின் உறவினர்களும், நண்பர்களும் சம்பவ இடத்துக்கு வந்த பின்னர் காயமடைந்த இருவரையும் பட்டா ரக வாகனமொன்றில் ஏற்றி அங்கிருந்து மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும் 17 வயது மாணவன் உயிரிழந்திருந்தார். மற்றைய மாணவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதேநேரம், விபத்து நடந்த இடத்துக்கு அம்புலன்ஸ் தாமதமாகவே வந்துள்ளது. அந்த நேரத்தில் விபத்துக்குள்ளாகிய மாணவனின் தாயார் மயங்கி விழுந்திருந்தமையால் அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உதவுமாறு அங்கிருந்தவர்கள் கேட்ட போதும், “அவரை ஏற்ற நாம் வரவில்லை அவரை வேறு வாகனத்தில் அனுப்புங்கள்” என்று சொல்லி விட்டு அம்புலன்ஸில் வந்தவர்கள் திரும்பிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.

சுழிபுரம் சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Wednesday, December 4, 2024

கனடாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களில் பல லட்சக்கணக்கானவர்கள் துரத்தப்படவுள்ளனர்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ


கனடாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களில் பல லட்சக்கணக்கானவர்கள் துரத்தப்படவுள்ளனர்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ

கனடாவில் அடுத்த வருடத்தின்(2025) இறுதியில் பாரிய அளவிலான புலம்பெயர்ந்தவர்கள் வெளியேறவேண்டிய நிலை ஏற்படுமென அந்நாட்டு புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் வெளியேற வேண்டிய நிலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் தற்காலிக அனுமதிகள் காலாவதியாக உள்ளமையே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற புலம்பெயர்தல் குழு முன் விளக்கமளித்த மார்க் மில்லர், தற்காலிக அனுமதிகள் காலாவதியாகும் பெரும்பாலானோர் கனடாவிலிருந்து தாமாகவே வெளியேறக்கூடும் என கூறிய நிலையில், கொன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரொம் , சுமார் 4.9 மில்லியன் பேரின் தற்காலிக அனுமதிகள் காலாவதி ஆகும் நிலையில், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை கனடா அரசு எப்படி உறுதி செய்ய உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மில்லர், நமது நாட்டுக்குள் வருவோரில் பெரும்பாலானோர் தற்காலிகமாக வந்துள்ளதால், அவர்களுடைய அனுமதிகள் காலாவதியானபின் இங்கு தங்க அவர்களுக்கு உரிமை இல்லை, ஆகவே அவர்கள் தாமாகவே வெளியேறிவிடுவார்கள் என்றார்.

அப்படி தாமாக வெளியேறாதவர்களை புலம்பெயர்தல் அமைச்சகம் எப்படி கையாளப்போகிறது என ரொம் விடாமல் கேட்க, அவர்களை வெளியேற்ற கனடா எல்லைப் பாதுகாப்பு ஏஜன்சிக்கு உரிமை உள்ளது என்றார் மில்லர்.

இந்த நிலையில் தற்காலிக அனுமதி பெற்று கனடாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாராய பார் அனுமதிப்பத்திரம் பெற்றவவர்கள் யார்? இன்று மாலை விபரங்கள் வெளியாகும்!!


சாராய பார் அனுமதிப்பத்திரம் பெற்றவவர்கள் யார்? இன்று மாலை விபரங்கள் வெளியாகும்!!

மதுபாண அனுமதி பட்டியல் பெற்றவர்களது விபரங்கள் இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக பார் அனுமதி பெற்றவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சபை உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்தகால அரசாங்கத்தில் சில முன்னாள் தமிழ் அரசியல்வாதிகள் மதுபான அனுமதி பெற்றதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடப்படத்தக்கது.

Tuesday, December 3, 2024

அரியாலையில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிப்பு !


அரியாலையில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிப்பு !   

தீடிர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த 
சம்பவம்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது  .

அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து   5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய்  ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று  செவ்வாய்க்கிழமை  மாலை 4-00 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

ஜீவராஜ்  ரேவதி வயது 38 என்ற தாயை இவ்வாறு உயிரிழந்துள்ளார் இச் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியாவிலிருந்து வந்தவர் கொழும்பு கொள்ப்பிட்டியில் 7 வது மாடியிலிருந்து குதித்து மரணம்!!


அவுஸ்ரேலியாவிலிருந்து வந்தவர் கொழும்பு கொள்ப்பிட்டியில் 7 வது மாடியிலிருந்து குதித்து மரணம்!!

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் 7 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து ஆஸ்திரேலியப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

51 வயதுடைய ஆஸ்திரேலியப் பிரஜையே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் இந்தத் தொடர்மாடி குடியிருப்பில் தற்காலிகமாகத் தங்கியிருந்த நிலையில் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்காக 7 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.