கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் 7 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து ஆஸ்திரேலியப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
51 வயதுடைய ஆஸ்திரேலியப் பிரஜையே உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் இந்தத் தொடர்மாடி குடியிருப்பில் தற்காலிகமாகத் தங்கியிருந்த நிலையில் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்காக 7 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment