அத்துருகிரிய பனாகொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
பனாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த யுவதியின் சகோதரனும் சகோதரனின் மனைவியும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக சமூகத்தில் முகங்கொடுக்கும் பல்வேறு சவால்களினால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த யுவதி தனது பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment