This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, August 12, 2025

பரந்தன் சந்தியில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து நடந்தது என்ன?


 பரந்தன் சந்தியில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து நடந்தது என்ன?

நொடிப்பொழுது இழைக்கும் தவறு வாழ்வில் நீங்காத வடுக்களைத் தந்துவிடுகிறது

மேகங்கள் அங்கும் இங்கும் அலைமோதிக் கொண்டிருக்க சூரியன் தன் பிஞ்சுக்கரங்களை நீட்டிக்கொண்டு மெல்ல எழுந்தான். அன்றைய நாள் விடியல் எல்லோருக்கும் நல்லதாக அமைய வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும், அவ்வாறு தான் யதுகிரியின் எண்ணங்களும். வழமைபோல் தன் கனவுகளுடன் பல எண்ணங்கள் அவளது உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்க புறப்பட்டாள் யதுகிரி கனவாலும் நினைத்திருக்க மாட்டாள் இன்றுதான் தன் கடைசி நாள் என்று. வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்தவளை காலனவன் டிப்பர் வடிவில் வந்து பறித்தெடுத்தான் அவள் உயிரிழந்த செய்திகேட்டு பதறிய தாய் உள்ளம் கதறியபடி ஓடினாள் காலனை விரட்டி மகளின் உயிரை பறிக்க கிணற்றடிக்கு. அவரின் தாய்ப்பாசம் சொல்கிறது யதுகிரியின் வளர்ப்பைப் பற்றி

கிளிநொச்சி மாவட்டத்தின் இயற்கை அன்னையின் மொத்த அழகையும் தனக்குள் வைத்துள்ளது பரந்தன் எனும் அழகு தேவதை. அவ்வாறான எழில் கொஞ்சும் அழகிய பரந்தனின் குமரபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகரம் ஐயாவினுடைய மகளின் இறப்புச் செய்தி கேட்டு அவரின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளை, வீதியோரமாக ஒரு வயோதிபர் நடந்து செல்வதைக் கண்டு எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன். ஏனென்றால் எனக்கு வீடு இருக்கும் இடம் சரியாக தெரியாது அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம் என ஐயா நேற்று பரந்தன் சந்தியில் டிப்பர் அடிச்சு செத்த பிள்ளையின்ட வீடு எவடத்த எண்டு கேட்ட போது கலங்கிய கண்களோடு என்னை நிமிர்ந்து பார்த்தார். நானும் அங்குதான் செல்கின்றேன் என்று தன்னிலை மறந்து கதைகூற ஆரம்பித்தார். அவர் நிலைகண்டு என்னை மறந்த நான் மோட்டார் சைக்கிளில் வந்ததை மறந்து அவருடன் நடந்தேன். அப்போது அவர்மெதுவாக என்னிடம் கேட்டார் தம்பி செத்த பிள்ளைய உனக்கு தெரியுமோ என்று. இல்லை ஐயா நான் அவருடைய உறவினர் உடைய பழக்கத்தில் தான் அங்கு செல்கின்றேன் என்று கூறினேன்.

என்ன வாழ்க்கை அப்பு இது சாகும் வயதில் நானிருக்கின்றேன் வாழும் வயதில் யதுகிரி என்று மௌனமாக அவரது கண்கள் கண்ணீர் சொரிந்தன. அப்பன் இந்த 96ஆம் ஆண்டு இடம்பெயர்வில் இங்க இருந்து போய் வன்னியில இருக்கேக்க தான் இவள் பிறந்தவள். நான் நினைக்கிறேன் சந்திரசேகரனின்ட நான்காவது பிள்ளை 1996ஆம் ஆண்டு இவள் பிறந்து நான்கு வயது மட்டும்நடக்கவே மாட்டாள். அதுகள் வேண்டாத தெய்வம் இல்ல. நான்கு வயதுக்கு பிறகுதான் மெது மெதுவா நடக்கத் தொடங்கினாள் பிறகு இப்படியே 2002 ஆம் ஆண்டு இங்க வந்திட்டினம்.

நல்ல கெட்டிக்காரி விளையாட்டிலும்

சரி. படிப்பிலும் சரி பிறருக்கு உதவி செய்வதிலும் ஒரு வித்தியாசமானவள். இவளின் அளவில் யாரையும் நான் பாத்ததில்லை எல்லோருக்கும் அன்பை சரிசமமாக காட்டுபவள் சாப்பாட்டைத்தான் எள்ளானாலும் ஏழாப் பிரி’ என்பாள் இவள் காட்டும் கருணை, அன்பு. பாசம் யாவுமே சமனாக தான் இருக்கும் என்று கூறிக்கொண்டிருக்கும் போதே வீட்டிற்கு வந்துவிட்டோம். வீட்டிலிருந்து 100m தூரமளவு வரை பனர்கள் இருபுறமும் எனக்கு முதியவர் சொன்னதிற்கும் இதனை பார்த்ததிற்கும் தூக்கி வாரிப் போட்டது இப்படி ஒரு பிள்ளையா என்று அத்தனையும் உண்மை என உணரும் தருணமாக வானம் சிறுக சிறுக மழைத்துளிகளை பொழிந்தது. அந்த மழைத்துளிகள்பனர்களில் பட்டு கண்ணீர் சிந்துவது போல சிந்தின. அத்தனையும் பார்த்த நான் யதுகிரியின் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்திருக்கக் கூடாது கடவுளே என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்றேன்.

உள்ளே சென்றதும் யதுகிரியின் உடலுக்கு அருகில் தாயவள் அழுதுகொண்டிருந்தாள். எனக்கொரு வருத்தம் என்றால் என்னை பெற்றவள் போல் நான் பெற்ற செல்லம் என்னை பார்த்தாளே அவள் இங்கு மூச்சு பேச்சின்றி கிடக்கின்றாள் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. என் பிள்ளைக்கு சொந்த பந்தம் கூட்டி கல்யாணம் செய்ய ஆசைப்பட்டேன். கடைசியில் அவளது இறுதி ஊர்வலத்திற்கு எல்லோரையும் வரும்படியாக செய்துவிட்டதே விதி. சிறுவயதில் இருந்து பெருமையும் பேரும் வாங்கித்தந்த என் பிள்ளைக்கு கல்யாண மாலை போட முடியாமல் போய்விட்டதே என்பிள்ளைக்கு என்கையால் கருமாரிக்கு

மாலையிட வைத்துவிட்டாயே என புலம்பிய புலம்பல் எல்லோரதும் கண்களிலும் கண்ணீர் ஆறாக பாய்ந்தது. அந்த தாயின் அழுகுரல் எல்லோரது மனதையும் கண்ணாடி போல் சுக்குநூறாக உடைத்துவிட்டது.

அப்படியே போய் ஒரு ஓரமாக இருந்தேன் யாரைப் பார்த்தாலும் யதுகிரி அப்படி செய்தாள்.இப்படி செய்தாள் என்று. யதுகிரி இறந்து கிடக்கிறாள் என்பதை மறக்கும் அளவில் கதைத்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு எல்லோரும் கதைத்துக் கொண்டிருக்கும் போது யதுகிரியின் உறவினர் ஒருவர் பக்கத்தில் இருந்தவருக்கு கூறிக்கொண்டிருந்தார். யதுகிரி சிறு வயதிலிருந்து விளையாட்டிலும் சரி மற்றும் கலைகள் எல்லாவற்றிலும் சிறந்தவள். விளையாட்டு என்றால் முதலிடம் யதுகிரி. அதே போல் பாடசாலையில் ஏதும் நிகழ்வாக இருந்தாலும் விழாவாக இருந்தாலும் சரி யதுகிரியின் நிகழ்வு இருக்கும். அவள் இல்லாத நிகழ்வு இருக்காது. அவளின் திறமை எல்லாவற்றிலும் புறம்பானது அவளுக்கு அந்த திறன் பிறக்கும் போதே கடவுள்கொடுத்தவரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சிறு பறவைகள்.மரம்,செடிகள் என இயற்கையின் அழகை இரசிப்பதிலும் அவளைப்போல் யாரும் இல்லை. அவளின் இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இத்தனைக்கும் அவள் ஒரு பட்டதாரி கிழக்கு பல்கலைக்கழகம் சென்று பட்டபடிப்பு முடித்தவள். படித்து முடிய அரச வேலை கிடைக்கும் வரை தாமதிக்காமல் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்துகொண்டிருக்கிறாள். அங்கு செல்லும்போது தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று அவளை நினைத்து குமுறி அழுதார். அவரைச் சுற்றியுள்ள வர்கள் சமாதானம் செய்தனர்.

அவரைச் சமாதானம் செய்து கொண்டிருக்கும் போது எனக்கு பக்கத்தில் ஒருவர் வந்து அமர்ந்தார். நான் எதர்ச்சியாக அவரின் முகத்தைப் பார்த்தேன்.எனது நிறுவனத்தில் தான் யதுகிரி வேலை செய்கிறாள். எனது அனுபவத்தில் இப்படி ஒரு பிள்ளையை பார்த்ததில்லை அவரின் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை. கொஞ்ச நாளைக்கு முன்னால் வந்து நான் வேலையை விடப்போகிறேன் என்றாள். ஏன் என்று கேட்டேன் என் அம்மாவிற்கு கண் ஒப்ரேசன் செய்திருக்கு. நான் தான் அவரைப் பார்க்கவேண்டும் எனக்கு அம்மாவிற்கு பிறகு தான் எல்லாமே என்று கூறினாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏனென்றால் அவளின் திறமை,அவளின் ஆர்வம். வேலையில்

காட்டும் பற்றுணவர்வு இதுவரை யாரிலும் பார்த்தில்லை. அதனால் நீ வேலையை விட வேண்டாம் எத்தனை நாள் வேண்டுமானாலும் லீவு எடுத்துக்கொள் அம்ம்மாவிற்கு சுகமானதும் வேலைக்கு வா என்று கூறி அனுப்பினேன் எனக்கூறி அழுதார்.

இவ்வாறு ஒவ்வொருவராக யதுகிரியின் ஒவ்வொரு விடயங்களை புலம்பிக்கொண்டிருந்த போது கிளி/பரந்தன் இந்துக்கல்லூரி முதல்வர் கண்ணீர் அஞ்சலி உரை ஆற்றினார். அவர் உரை ஆற்றும் முன்பே அவரது கண்ணில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்திருந்தன. அவர் சொன்ன விடயங்கள் எல்லோரும் சொன்னதையும் கேட்டவையாக இருந்தாலும் திகட்டாதவையாக கேட்டுக் கொண்டிருந்தனர் அனைவரும். அப்போது அவர் ஒரு விடயம் சொன்னார். நான் ஒருநாள் யதுகிரியிடம் உனக்கு யதுகிரி என பெயர் வைத்தது யார் எனக் கேட்டேன். அதற்கு அவள் கர்வமாகவும் விளையாட்டாகவும் பதிலளித்தாள். என் அப்பாதான் வைத்தார் என்றாள் யதுகிரி. யதுகிரி என்றால் என்ன தெரியுமா உங்களுக்கு? பாரதிக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசான் தான் சேர் யதுகிரி. அவரின் பெயரைத்தான் அப்பா எனக்கு வைத்துள்ளார் என்றாள். அவள் கூறியது முற்றிலும் உண்மை அந்த பெயர் அவளுக்கு அவ்வளவு பொருத்தம் எனக்கலங்கினார்.

இங்கு நடைபெறும் ஒவ்வொரு விடயமும் எனக்குள் பல எண்ணங்களை எழுப்பின. ஒரு சாதாரண பெண்அவள். அவள் வாழ்ந்த வாழ்க்கை எல்லோர் மனதிலும் இப்படி இடம்பிடித்திருக்கின்றதே. கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரி, அதோடு ஒரு புகைப்பட கலைஞர். இலக்கிய வாதியாகவும் இருக்கிறாள். அதோடு ஊர்மக்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவளாக இருக்கிறாள். வேலை செய்யும் இடத்தில் ஒரு சிறந்த வழிகாட்டி ஒரு தந்தைக்கு ஒப்பாகப் பார்க்கப் படுகிறாள். ஒரு மனிதரால் இத்தனை யாகவும் எவ்வாறு இருக்க முடியும். இந்த சிறுவயதில் இயற்கை கூட விடை பெறமுடியாமல் தன் வருத்தம் தெரிவிக்கும் முகமாக மழைத்துளியாக தன் கண்ணீர் பூக்களை தெளிக்கின்றது.

இவ்வாறு வாழ வேண்டிய பிள்ளைகள் பலரின் உயிரை சர்வசாதாரணமாக எடுத்துவிடுகிறது வீதி விபத்து என்ற அரக்கன்.

சட்டங்கள் இறுக்கமடைந்தால் தவறுகள் குறைக்கப்படும் என்று கூறுவார்கள். வீதி விபத்தென்பது சாரதிகளின் கவனயீனத்தால் ஏற்படுவது.

ஒரு சாரதியின் சிறு கவனயீனம்ஒரு உயிரையே எடுக்கிறது எனின் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தற்போது அதிகளவான விபத்துக்கள் டிப்பர் போன்ற கனரக வாகனங்களால் நடைபெறுகின்றன.

எனவே வீதி விதிகளில் டிப்பர் போன்ற கனரக வாகனங்களின் மீதான சட்டங்கள் இறுக்க வேண்டும் இல்லையேல் இன்னும் பல யதுகிரிகளை எம் சமூகம் இழக்க வேண்டிவரும்.

கிளி குமார்

Monday, August 11, 2025

🔴 #வவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி..!


🔴 #வவுனியாவில் கிணற்றிலிருந்து 

சடலமாக மீட்கப்பட்ட மாணவி..!

வவுனியாவில் வைரவப் புளியங்குளத்திலுள்ள V.S.C தனியார் 

கல்வி நிலைய வளாகத்திலுள்ள 

கிணற்றில் இருந்து  உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் இன்று மாலை 

சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் 

தெரியவருவதாவது,

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது. குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகபிரிவு 2025 இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர்.

இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன், அக் கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார், மாநகர சபையினர், கிராம அலுவர், கிராம மக்கள், மாணவர்கள் எனப் பலரும் இணைந்து 40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்டு குறித்த மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்தனர்.

குறித்த சம்பவத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலம் வவுனியா வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Sunday, August 10, 2025

பலாங்கொடையில் கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியைத் தேடிச் சென்ற கணவன்!! வீட்டில் தீயில் கருகி பலியான 8 வயது சிறுவன்!


பலாங்கொடையில் கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியைத் தேடிச் சென்ற கணவன்!! வீட்டில் தீயில் கருகி பலியான 8 வயது சிறுவன்!

பலாங்கொடை, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீடு முற்றிலுமாக எரிந்து எட்டு வயது சிறுவன் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தந்தை, தாய் மற்றும் தாயின் காதலன் ஆகியோர் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் பலத்த தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக 08 திகதி இரவு மனைவி வேறொரு நபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதுடன், குறித்த பெண்ணின் கணவரும் மனைவியை தேடி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச் சமயத்தில் எட்டு வயது மட்டும் வீட்டில் இருந்துள்ளதுடன் அதிகாலையில் வீடு தீப்பிடித்து எரிந்ததுள்ளது. அதனை பார்த்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்ததுடன் அந்த நேரத்தில் கணவரும் வீடு திரும்பியிருந்தார்.

இது தொடர்பாக, இரத்தினபுரி குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் பலாங்கொடை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் மனைவிக்கு சிறிது காலமாக திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருந்ததும் அதன் காரணமாக தம்பதியினரிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதுடன் வீடு தீப்பிடித்தது தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Saturday, August 9, 2025

முத்தையன்கட்டில் இளைஞன் கொலைச் சம்பவம்!! 5 இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது!!


முத்தையன்கட்டில் இளைஞன் கொலைச் சம்பவம்!! 5 இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது!!

முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, குறித்த இளைஞனின் உடலை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்துச் செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.குறித்த இராணுவ முகாமிற்கு சென்ற ஐவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு நபருக்கு முதுகுப் பகுதிகளில் பலத்த அடிகாயங்கள் இருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, August 8, 2025

யாழில் 12 வயது மாணவன் நண்பிக்கு அனுப்பிய தனது குஞ்சு மணி வீடியோ!! மாணவியின் தாயார் பார்த்து அதிர்ச்சி!! பெற்றோரே அவதானம்!!

 


யாழில் 12 வயது மாணவன் நண்பிக்கு அனுப்பிய தனது குஞ்சு மணி வீடியோ!! மாணவியின் தாயார் பார்த்து அதிர்ச்சி!! பெற்றோரே அவதானம்!!


யாழில் தான் கல்வி கற்கும் ரியூசனில், தனது வகுப்பைச் சேர்ந்த மாணவியின் தாயின் வட்சப் இலக்கத்திற்கு தனது குஞ்சுமணியின் வீடியோவை அனுப்பியுள்ளான் 12 வயது மாணவன். குறித்த மாணவனும் மாணவியும் யாழில் உள்ள முன்னணி ஆண்கள், பெண்கள் பாடசாலையில் கற்று வருவதுடன் மாணவனின் தாயும் தந்தையும் அரச அதிகாரிகள் எனவும் மாணவியின் தந்தை வர்த்தகர் என்பதுடன் தாயாரும் அரச உத்தியோகத்தர் எனத் தெரிவருகின்றது.

ரியூசன் வட்சப் குறுாப்பில் காணப்பட்ட மாணவியின்  இலக்கத்திற்கு மாணவன் பல தடவைகள் தொடர்பு கொண்டு சற்றிங் செய்துள்ளதும் மாணவியும் அதற்கு பதிலளித்த பின் அந்த மெசேஜ்களை அழித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த மாணவன் 2 நிமிடங்கள் அடங்கிய தனது குஞ்சுமணியின் வீடியோவை மாணவிக்கு மதியம் 3 மணியளவில் அனுப்பியுள்ளான். மாணவி பாடசாலை வி்ட்டு வந்த பின்னர் ரியூசனுக்கு செல்லாத நேரங்களில் இவ்வாறான விளையாட்டுக்கள் தொடந்து நடந்துள்ளன. மாணவியின் தாயாரின் 2 தொலைபேசிகளில் ஒரு தொலைபேசி மாணவியின் பாவனையில் இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது, இந் நிலையில் மாணவியின் தாயார் தனது தொலைபேசியில் ஏற்பட்ட பழுது காரணமாக மாணவியின் தொலைபேசியை சிம் மாற்றி வி்ட்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போதே குறித்த மாணவன் தனது குஞ்சுமணியின் வீடியோவை வட்சப்பிற்கு அனுப்பியிருந்தார். இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் போதே இருவரது திருவிளையாடல்களும் பிடிபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இதையடுத்து மாணவனின் பெற்றோரிடம் தாயார் முறையிட்ட போது அவர்கள் மாணவியையும் தாயாரையும் தரக்குறைவாக விமர்சித்ததாகத் தெரியவருகின்றது. இதன் பொலிசாருக்கு செல்லும் நிலை ஏற்பட்டு, பின்னர்  மோதலை மாணவர்கள்  கற்கும் ரியூசன் நிர்வாகி தீர்த்து வைத்ததாகத் தெரியவருகின்றது.

சமூகவலைத்தளப் பயன்பாடு இளம் சமூகத்தில் எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். ஆகவே பெற்றோரே உங்கள் பிள்ளைகளை அவதானித்து வாருங்கள்.

Saturday, August 2, 2025

யாழில் கள்ளக் காதலனுடன் ஓடிய தாய் பிரதேசசெயலகத்தில் வைத்து மகளை நையப்புடைத்த போது வேடிக்கை பார்த்த உத்தியோகத்தர்கள்!!



யாழில் கள்ளக் காதலனுடன் ஓடிய தாய் பிரதேசசெயலகத்தில் வைத்து மகளை நையப்புடைத்த போது வேடிக்கை பார்த்த உத்தியோகத்தர்கள்!!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசசெயலகத்தில் வைத்து கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பப் பெண் ஒருவர் தனது மகளை அங்கு கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு முன் நையப்புடைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த குடும்பப் பெண் தனது கணவனைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவ்வாறு வாழ்ந்து வந்த போதும் கணவரையும் தனது பிள்ளைகளையும் வெறுப்பேற்றும் வகையில் கணவனின் தொலைபேசிக்கு வட்சப் மூலம் படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பி வந்துள்ளார். இதனால் கடுப்பான குறித்த குடும்பப் பெண்ணின் மகளான பாடசாலை மாணவி மருதங்கேணிப் பிரதேசசெயலகத்தில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த குடும்பப் பெண்ணை அங்கு வரவழைத்த உத்தியோகத்தர்கள் மகளின் முன் விசாரித்துக் கொண்டிருக்கும் போது அக் குடும்பப் பெண் தன்னைப் பற்றி முறையிட்டதற்காக குறித்த உத்தியோகத்தர்களுக்கு முன் தனது மகளைத் தாக்கியதாகத் தெரியவருகின்றது. இருப்பினும் இச் சம்பவம் தொடர்பாக உத்தியோகத்தர்கள் பொலிசாரிடம் முறையிடாமல் அம் மாணவி மற்றும் குறித்த பெண்ணை அங்கிருந்த அகற்றியதாகவும் இது தொடர்பாக அப்பகுதி கிராமசேவகருக்கு மாணவியும் தந்தையும் முறையிட்ட போது குறித்த குடும்பப் பெண் தாக்கியதற்கான வீடியோ ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பொலிசாரிடம் முறையிட முடியும் என கிராமசேவகர் கூறிய அவர்களை அங்கிருந்து வெளியேற்றியதாகவும் பிரதேசசெயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழில் பௌத்த பிக்கு சடலமாக மீ்ட்பு!!



யாழில் பௌத்த பிக்கு சடலமாக மீ்ட்பு!!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பௌத்த பிக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர்  என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சில இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் நாகவிகாரைக்கு சென்று அங்கு இரவு உறக்கத்திற்கு சென்றுள்ளார். மறுநாளான நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்

ரயில் கழிவறைக்குள் தொப்புள் கொடியுடன் பெண் சிசுவின் சடலம்!! தாயைத் தேடுகின்றது பொலிஸ்!!



ரயில் கழிவறைக்குள் தொப்புள் கொடியுடன் பெண் சிசுவின் சடலம்!! தாயைத் தேடுகின்றது பொலிஸ்!!

மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8346ஆம் எண் ரயிலின் மூன்றாம் வகுப்பு பெட்டியின் கழிப்பறையில் தொப்புள் கொடியுடன்  பெண் சிசுவின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சிசுவுக்கு வயது சுமார் மூன்று நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரவு பயணத்தை முடித்து புத்தளத்திலிருந்து கல்கிசை நோக்கி வந்த ரயில் மாளிகாவத்தை நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

அதைப் பராமரிக்கச் சென்ற தொழிலாளர்கள் குழுவினர், மூன்றாம் வகுப்பு பெட்டியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து சோதனை செய்தபோது, ஒரு பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

தெமட்டகொட பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அளுத்கம நீதவானும் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தையும் ரயில் பெட்டியையும் பார்வையிட்டார்.

சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,

சம்பவத்திற்கான காரணம் மற்றும் குற்றவாளியை கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Friday, August 1, 2025

ஆசிரியையான மனைவியுடன் உ டலு றவு கொண்ட வீடியோவை மனைவியிடம் கற்கும் மாணவிக்கு அனுப்பிய கணவன்!! கொழும்பில் நடந்தது என்ன?



ஆசிரியையான மனைவியுடன் உ  டலு றவு கொண்ட வீடியோவை மனைவியிடம் கற்கும் மாணவிக்கு அனுப்பிய கணவன்!! கொழும்பில் நடந்தது என்ன?

பாடசாலை மாணவிக்கு ஆ  பாச வீடியோ அனுப்பிய ஆசிரியையின் கணவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க நேற்று (31) உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர் அளித்த முறைப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரானபோது, பொலிஸ் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் அளித்த அறிக்கைகளை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆ  பாசப் படங்களுக்கு அடிமையானதாகக் கூறப்படும் சந்தேகநபர், தனது மனைவியுடன் உ டலு றவில் இருந்த தருணங்களை இரகசியமாகப் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், குடும்ப தகராறில் மனைவியிடம் கல்வி கற்கும் மாணவிக்கு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முறைப்பாடு அளித்த ஆசிரியையான மனைவிக்கும் அவரது கணவருக்கும் இடையில் அண்மையில் தகராறினால் ஆ  பாசப் படங்களை பகிர்ந்து சந்தேகநபர் பழிவாங்க எண்ணியமை நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மனச்சோர்வு எனப்படும் உளவியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது . இது ஆ  பாசப் படங்களுக்கு அதிகமாக அடிமையாகியிருப்பதால் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இட்ய்ஹனையடுத்து அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி பொலிஸ் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆணுறை அணிவது எப்படி என வட மாகாணசபை பெண் உத்தியோகத்தர்களுக்கு வகுப்பு எடுப்பது எதற்காக ?


சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….

அண்மையில் வெளிவந்த சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் வடமாகாணத்தின் கல்வித்தகைமையினையும் வடமாகாணசபையின் அதிகாரிகளது வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றிவைத்துள்ளது.
விருதுப்போட்டிகளில் ஏதோ முன்கூட்டியே சமாளிப்புக்களை செய்து விருதுகளை ஒருவாறாக பெற்றுக்கொள்ளும் வடமாகாண அதிகாரிகள் உண்மையில் வாழ்க்கையினை தீர்மானிக்கும் மாணவர்களிற்கான பரீட்சையில் கோட்டைவிட்டு தமது வண்டாளங்களை அம்பலப்படுத்திவிடுவது வழமையாகும்.

வடமாகாணசபையினை பொறுத்தவரையில் யாழப்பாணத்தில் குளிரூட்டிய அறையில் வேலை மற்றும் கைநிறைய காசு என்பதே அதிகாரிகளது கனவாகும்.முன்னாள் யாழ்.போதனாவைத்தியசாலை வைத்திய அதிகாரியும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான பவானந்தராசா தனது மனோ ஓட்டத்தை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் யாழ்ப்பாணத்திற்கு முன்னுரிமையென அவர் போட்டுடைத்திருந்தார்.

இந்நிலையில் வடமாகாணசபையின் கைதடி ஆச்சிரமத்தில் நாள் தோறும் அரங்கேறும் கூத்துக்கள் வடமாகாணத்தின் மானம் மரியாதையை நாறடித்துக்கொண்டிருக்கின்றது.சம்பளம், கிம்பளத்துடன் மதியம் மனுசியின் சாப்பாடு என்பது பெரும்பாலான கைதடி மாகாணசபை ஆச்சிரம உரிமையாளர்கள் பெரும்பாலானவர்களது கனவு.சிலரோ அதையும் தாண்டி விபரீத கனவுகளை கண்டுவிடுகின்றனர்.

உதவி செயலாளர் ஒருவர் ஆணுறை பயன்படுத்துவது பற்றி தனது பெண் பணியாளர்களிற்கு நேரடி பயிற்சி வழங்கிய செய்தி அனைவரையும் காறித்துப்ப வைத்துள்ளது.

ஏற்கனவே 2020ம் ஆண்டில் வடமாகாண சிறுவர் நன்னடத்தை பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஒருவர் அச்சுவேலியில் அநாகரிமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டையடுத்து ஒருவருடத்தினுள்ளாகவே பதவியிறக்கி கைதடி ஆச்சிரமத்திற்கு அனுப்பப்பபட்டிருந்தார்.இந்நிலையில் கைதடி ஆச்சிரமத்திலும் ஆணுறை பயன்படுத்துவது பற்றி வகுப்பெடுத்து குருவாகவும் பரனாகவும் அனைவரையும் நாறடித்துள்ளார் அந்த அதிகாரி.
அதற்காக அலுவலகத்தினுள் எவ்வாறு ஆணுறையென எவரும் அவதிப்படவேண்டாம்.தனது இரு கைவிரல்களில் எவ்வாறு ஆணுறையை பொருத்தி பயன்படுத்துவதென குருவான பரனாக அவர் காண்பித்த காணொளி பயிற்சி ஜனாதிபதி வரை சென்றுள்ளது.ஆனாலும் அலுவலக மேசை லாச்சியினுள் தயார் நிலையில் உள்ள ஆண் உறை ஏன் என்பது புரியவில்லையென அவரது அலுவலக பணியாளர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே உள்ளுராட்சி ஆணையாளர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமையெனவும் பாராது ஆளுநர் சாள்ஸ் அம்மணி சிபார்சில் கதிரை போய்விடுமென கைதடி ஆச்சிரமத்தில் உள்ளுராட்சி அமைச்சு செயலாளர் கதிரையில் குந்தியிருந்து நாறடித்த கதை பிரபலமானது. அவரது சகபாடியாக அதே அமைச்சில் குந்திக்கொண்ட நபரே தற்போது ஆணுறை சகிதம் அகப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஆளுநர் சாள்ஸ் சிபார்சில் வந்த செயலாளர் காற்றுப்போய் கைதடியில் மூலையில் அமர்த்தப்பட்டுள்ள போதும் ஆணுறை உதவி செயலாளரோ அனைவரையும் வெருட்டியவாறே திரிவதாக பெண் உத்தியோத்தர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய வீடியோ சான்றில் பகிர்ந்துள்ளதாக தெரியவருகின்றது. தன்னையே எப்போதும் 24 கரட் தங்கமென காட்டிக்கொள்ளும் அவர் எழுதிய கள்ளக்காணி உறுதி விபரங்களை வெளிப்படுத்த சக பெண் உத்தியோகத்தர்கள் சிலர் தயாராகியுள்ளதாக கிசுகிசுப்புக்கள் வெளிவந்துள்ளன.

முன்னதாக சிங்கக்கொடி மற்றும் மாகாணசபை கொடி சகிதம் கதிரையில் சாய்ந்தவாறு ஆணுறைக்கென அவர் வழங்கிய விளம்பரம் இன்னும் சில நாட்களில் சமூக ஊடகங்களில் காணக்கிடைக்குமென்கின்றன தகவல்கள் சில.
ஆனால் அதில் தங்கள் முகங்களும் அகப்பட்டுவிடுமோவென அச்சத்திலுள்ளனராம் சில அம்மணிகள்.