சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….
அண்மையில் வெளிவந்த சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் வடமாகாணத்தின் கல்வித்தகைமையினையும் வடமாகாணசபையின் அதிகாரிகளது வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றிவைத்துள்ளது.
விருதுப்போட்டிகளில் ஏதோ முன்கூட்டியே சமாளிப்புக்களை செய்து விருதுகளை ஒருவாறாக பெற்றுக்கொள்ளும் வடமாகாண அதிகாரிகள் உண்மையில் வாழ்க்கையினை தீர்மானிக்கும் மாணவர்களிற்கான பரீட்சையில் கோட்டைவிட்டு தமது வண்டாளங்களை அம்பலப்படுத்திவிடுவது வழமையாகும்.
வடமாகாணசபையினை பொறுத்தவரையில் யாழப்பாணத்தில் குளிரூட்டிய அறையில் வேலை மற்றும் கைநிறைய காசு என்பதே அதிகாரிகளது கனவாகும்.முன்னாள் யாழ்.போதனாவைத்தியசாலை வைத்திய அதிகாரியும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான பவானந்தராசா தனது மனோ ஓட்டத்தை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் யாழ்ப்பாணத்திற்கு முன்னுரிமையென அவர் போட்டுடைத்திருந்தார்.
இந்நிலையில் வடமாகாணசபையின் கைதடி ஆச்சிரமத்தில் நாள் தோறும் அரங்கேறும் கூத்துக்கள் வடமாகாணத்தின் மானம் மரியாதையை நாறடித்துக்கொண்டிருக்கின்றது.சம்பளம், கிம்பளத்துடன் மதியம் மனுசியின் சாப்பாடு என்பது பெரும்பாலான கைதடி மாகாணசபை ஆச்சிரம உரிமையாளர்கள் பெரும்பாலானவர்களது கனவு.சிலரோ அதையும் தாண்டி விபரீத கனவுகளை கண்டுவிடுகின்றனர்.
உதவி செயலாளர் ஒருவர் ஆணுறை பயன்படுத்துவது பற்றி தனது பெண் பணியாளர்களிற்கு நேரடி பயிற்சி வழங்கிய செய்தி அனைவரையும் காறித்துப்ப வைத்துள்ளது.
ஏற்கனவே 2020ம் ஆண்டில் வடமாகாண சிறுவர் நன்னடத்தை பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஒருவர் அச்சுவேலியில் அநாகரிமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டையடுத்து ஒருவருடத்தினுள்ளாகவே பதவியிறக்கி கைதடி ஆச்சிரமத்திற்கு அனுப்பப்பபட்டிருந்தார்.இந்நிலையில் கைதடி ஆச்சிரமத்திலும் ஆணுறை பயன்படுத்துவது பற்றி வகுப்பெடுத்து குருவாகவும் பரனாகவும் அனைவரையும் நாறடித்துள்ளார் அந்த அதிகாரி.
அதற்காக அலுவலகத்தினுள் எவ்வாறு ஆணுறையென எவரும் அவதிப்படவேண்டாம்.தனது இரு கைவிரல்களில் எவ்வாறு ஆணுறையை பொருத்தி பயன்படுத்துவதென குருவான பரனாக அவர் காண்பித்த காணொளி பயிற்சி ஜனாதிபதி வரை சென்றுள்ளது.ஆனாலும் அலுவலக மேசை லாச்சியினுள் தயார் நிலையில் உள்ள ஆண் உறை ஏன் என்பது புரியவில்லையென அவரது அலுவலக பணியாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே உள்ளுராட்சி ஆணையாளர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமையெனவும் பாராது ஆளுநர் சாள்ஸ் அம்மணி சிபார்சில் கதிரை போய்விடுமென கைதடி ஆச்சிரமத்தில் உள்ளுராட்சி அமைச்சு செயலாளர் கதிரையில் குந்தியிருந்து நாறடித்த கதை பிரபலமானது. அவரது சகபாடியாக அதே அமைச்சில் குந்திக்கொண்ட நபரே தற்போது ஆணுறை சகிதம் அகப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஆளுநர் சாள்ஸ் சிபார்சில் வந்த செயலாளர் காற்றுப்போய் கைதடியில் மூலையில் அமர்த்தப்பட்டுள்ள போதும் ஆணுறை உதவி செயலாளரோ அனைவரையும் வெருட்டியவாறே திரிவதாக பெண் உத்தியோத்தர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய வீடியோ சான்றில் பகிர்ந்துள்ளதாக தெரியவருகின்றது. தன்னையே எப்போதும் 24 கரட் தங்கமென காட்டிக்கொள்ளும் அவர் எழுதிய கள்ளக்காணி உறுதி விபரங்களை வெளிப்படுத்த சக பெண் உத்தியோகத்தர்கள் சிலர் தயாராகியுள்ளதாக கிசுகிசுப்புக்கள் வெளிவந்துள்ளன.
முன்னதாக சிங்கக்கொடி மற்றும் மாகாணசபை கொடி சகிதம் கதிரையில் சாய்ந்தவாறு ஆணுறைக்கென அவர் வழங்கிய விளம்பரம் இன்னும் சில நாட்களில் சமூக ஊடகங்களில் காணக்கிடைக்குமென்கின்றன தகவல்கள் சில.
ஆனால் அதில் தங்கள் முகங்களும் அகப்பட்டுவிடுமோவென அச்சத்திலுள்ளனராம் சில அம்மணிகள்.
0 comments:
Post a Comment