நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, August 2, 2025

ரயில் கழிவறைக்குள் தொப்புள் கொடியுடன் பெண் சிசுவின் சடலம்!! தாயைத் தேடுகின்றது பொலிஸ்!!



ரயில் கழிவறைக்குள் தொப்புள் கொடியுடன் பெண் சிசுவின் சடலம்!! தாயைத் தேடுகின்றது பொலிஸ்!!

மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8346ஆம் எண் ரயிலின் மூன்றாம் வகுப்பு பெட்டியின் கழிப்பறையில் தொப்புள் கொடியுடன்  பெண் சிசுவின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சிசுவுக்கு வயது சுமார் மூன்று நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரவு பயணத்தை முடித்து புத்தளத்திலிருந்து கல்கிசை நோக்கி வந்த ரயில் மாளிகாவத்தை நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

அதைப் பராமரிக்கச் சென்ற தொழிலாளர்கள் குழுவினர், மூன்றாம் வகுப்பு பெட்டியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து சோதனை செய்தபோது, ஒரு பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

தெமட்டகொட பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அளுத்கம நீதவானும் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தையும் ரயில் பெட்டியையும் பார்வையிட்டார்.

சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,

சம்பவத்திற்கான காரணம் மற்றும் குற்றவாளியை கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

0 comments:

Post a Comment