Monday, August 28, 2023
கொழும்பில் சற்றுமுன் பதற்றம்! முக்கிய இடத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் (படங்கள்) | Colombo Etf Epf Protest
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (28) இந்த போராட்டம் இடம்பெற்றது.
நீதிமன்றம் உத்தரவு
குறித்த போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவு இன்று (28) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அதிபர் மாளிகை, அதிபர் செயலகம், நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்குள் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி துமிந்த நாகமுவ, முஜிபுர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமச்சந்திர, சரித ஹேரத், வாசுதேவ நாணயக்கார, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 24 பேர் மற்றும் அவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவுள்ளவர்களுக்கு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொக்குவிலைச் சேர்ந்த ரஜரட்ட பல்கலைக்கழக மாணவன் திலக்க்ஷன் நீரில் மூழ்கிப் பலி!!
ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் திலக்க்ஷன் என்ற 21 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை அவருடன் மேலும் ஐந்து மாணவர்கள் நீச்சல் தடாகத்தில் இறங்கும்போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஏனைய மாணவர்கள் அவரை மீட்டு முதலுதவிகளை வழங்கி பல்கலைக்கழக அம்பியூலன்ஸ் மூலம் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம் | Todays Dollar Official Change Rates Us Dollar Lkr
Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka Dollars
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (28) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படிஇந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 96 சதம் - விற்பனை பெறுமதி 329 ரூபா 52 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399 ரூபா 24 சதம் - விற்பனை பெறுமதி 416 ரூபா 77 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 341 ரூபா 98 சதம் - விற்பனை பெறுமதி 358 ரூபா 15 சதம்
கனடா டொலர்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 49 சதம் - விற்பனை பெறுமதி 244 ரூபா 06 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 68 சதம் - விற்பனை பெறுமதி 213 ரூபா 84 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 18 சதம் - விற்பனை பெறுமதி 244 ரூபா 73 சதம்
Sunday, August 27, 2023
கனடாவில் இருந்து வந்த நபர் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பு! - தெல்லிப்பழையில் சம்பவம் | A Person From Canada Suddenly Fell Down And Died
Jaffna Jaffna Teaching Hospital Canada
யாழ்ப்பாணத்தில் கனடாவில் இருந்து வருகை தந்த நபரொருவர் திடீரென கீழே விழுந்து உயரிழந்துள்ளார்.
யாழ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லுரி ஒன்றுகூடலில் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த நபரே நேற்று முன்தினம் (26) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மல்லாகம் பகுதியைச் சேர்ந்த நாகராஜா சசிதரன் (வயது 61) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே ஆவார்.
பழைய மாணவர் ஒன்றுகூடல்
தெல்லிப்பழையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், மகாஜனக் கல்லூரியில் கல்விகற்ற பழைய மாணவர்களது ஒன்றுகூடல் நடைபெற்றது. இதன்போது கனடாவில் இருந்து வருகை தந்த குறித்த நபர் பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவேளை திடீரென கீழே விழுந்தார்.
அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது . திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மரண விசாரணைகளை மேற்கொண்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
மனைவியிடம் மருமகளை உறவு அனுப்புமாறு கேட்ட கணவருக்கு மனைவி செய்த காரியம்..!
தனது 19 வயது மருமகளை பாலி யல் பலா த்காரம் செய்ய முயன்ற கணவனை மனைவி வெட்டிக்கொலை செய்த சம்பவம் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், படவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜேந்திர சிங்(43). பொம்மை வியாபாரியான இவர் 14-ம் திகதி வீட்டு வாசலில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது இந்த கொலையில் தேஜேந்திர சிங்கின் மித்லேஷ்(40) மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். மர்மநபர் கொலை செய்தததாக மித்லேஷ் கூறினார். ஆனால், பொலிஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போது, தனது கணவரை கொலை செய்ததை மித்லேஷ் ஒப்புக்கொண்டார்.
நான்கு குழந்தைகளின் தாயான மித்லேஷ், கணவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து அடிப்பதுடன், தனது 19 வயது மருமகளை தன்னுடன் படுக்கை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.
இதனால் கணவருக்கும், மித்லேஷ்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மருமகளை பாலி யல் பலா த்காரம் செய்வேன் என்று மித்லேஷிடம் அவரது கணவர் அடிக்கடி கூறியுள்ளார். இதனால் அவர் மீது மித்லேஷ் கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், ஆக.14-ம் திகதி அதிக மதுபோதையில் வீட்டிற்கு வந்த தேஜேந்திர சிங், வீட்டு வாசலில் உறங்கியுள்ளார்.
இதைக் கவனித்த மித்லேஷ், அரிவாளால் தனது கணவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்த பொலிஸார், கொலைக்குப் பயன்படுத்தி அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.
மருமகளைக் காப்பாற்ற தனது கணவரையே மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் மாணவிகளின் கற்பின் விலை 400 ரூபா!! 50ற்கும் மேற்பட்ட 17 வயதுக்குட்பட்ட மாணவிகளை சுற்றுலா என அழைத்து சீரழித்த ரியுசன் வாத்தி!!(Photos)
ஆதிரையான் என்ற பெயரில் யாழ் வடமராட்சிப் பகுதியில் செயற்படும் கல்வி நிலையம் ஒன்று வடிவேலு பாணியில் நடாத்திய திருவிளையாடல்களை இங்கு தருகின்றோம்.
சுற்றுலா என்ற பெயரில் எந்தவித திட்டமிடலும் இல்லாது வடிவேலுவைப் போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என இளம் பராய வயசுக்கு வந்த பெண் பிள்ளைகளுடன் இளம் ஆண் வாத்திமாரையும் தென்னிலங்கை்ககுக் கொண்டு சென்று கூத்தடித்து சீரழித்துள்ளது ஆதிரையான் என்ற கல்வி நிலையத்தை நடாத்தும் முட்டாள் வாத்தியும் அவரது சீடர்களும். யாழ் கல்வியங்காட்டில் 52 வயது இருதய நோய் உள்ள ஒருவனால் 8 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு அதனால் அவனை அந்த சிறுமியின் உறவுகள் தாக்கி கொலை செய்து சிறைக்குச் சென்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இவ்வாறான செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் நடந்து கொண்டிருக்கும் போது ஆதிரையான் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்கச் சென்ற இளம் சிறுமிகளை இந்த முட்டாள் ரியூசன் வாத்திகளை நம்பி எவ்வாறு பெற்றோர் அனுப்பி வைத்தார்கள். அந்த முட்டாள் ரியுசன் வாத்தி ஏதோ பெரிய சாதனை செய்தது போல் அந்தச் சிறுமிகளின் புகைப்படங்களுடன் வடிவேலு பாணியில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதனை நாம் கீழே தருகின்றோம். ஒரு கல்லிநிலையம் தனது நிறுவனத்தில் கற்கும் பிள்ளைகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதென்றால் எங்கு செல்வது, இரவில் பெண்பிள்ளைகளை பாதுகாப்பாக எங்கு தங்க வைப்பது, அந்த பெண் பிள்ளைகளுக்கு யாரைப் பொறுப்பாக அமர்த்துவது, அந்த பெண் பிள்ளைகளுடன் செல்லும் வாத்திமார் நல்ல தங்கப்பவுணான வாத்திமாரா? அந்தப் பெண் பிள்ளைகள் உட்பட ஆண் மாணவர்களும் ஆறு, குளங்கள் ஏதாவது ஒன்றில் குளிப்பார்களா என்ற தகவல்கள் போன்றவற்றை பெற்றோர் அறியாது மடைச்சாம்பிராணிகளாக உள்ள இவ்வாறான ரியுசன் வாத்திமாருடன் அனுப்பி வைத்தால் அந்தப் பெற்றோரின் பிள்ளைகள் சில வேளை உடல், உள சேதத்துக்கும் உள்ளாகிவர வேண்டிய சூழ்நிலைகள் உருவாகலாம்.
குறித்த ரியுசன் வாத்தி பெண் பிள்ளைகளுடன் போட்டோ பிடித்து போடுவதில் இருந்த ஆர்வம் அந்தப் பெண் பிள்ளைகளை இங்கிருந்து தென்னிலங்கைக்கு கொண்டு செல்ல முன் எங்கு தங்க வைப்பது என்பதில் இல்லாமல் போய் விட்டது.
பெண் பிள்ளைகளுடன் கண்டி சென்ற குறித்த ரியுசன் வாத்திகள் எந்தவித முன்னறிவித்தலும் கொடுக்காது கண்டியில் உள்ள இந்துகலாச்சார மண்டபத்தில் தங்க முற்பட்டு அவர்கள் ஒரு பிள்ளைக்கு தங்க கேட்ட 400 ரூபாவை கொடுக்க முடியாமல் ஒரு புத்தபிக்குவின் இலவச மண்டபத்தில் இலவச சோத்துக்கு ஆசைப்பட்டு அங்கு தங்க வைத்த இந்த முட்டாள் வாத்தியை என்னவென்று சொல்வது. ரியூசனில் சுற்றுலாவுக்கு என வாங்கும் காசில் ஒரு பிள்ளைக்கு 400 ரூபா செலவு செய்யாத வாத்தி குறித்த பிள்ளைகளை அங்குள்ள ஏதாவது விபச்சார விடுதியில் இலவசமாக தங்கலாம் என அழைத்திருந்தால் நிச்சயம் தங்க வைத்திருப்பார்….
தமக்கென சில சட்டதிட்டங்களுடன் இயங்கும் இந்து கலாச்சார விடுதியில் இலவசமாக தங்க வைப்பதென்றால் ஏராளமான நடைமுறைச்சிக்கல்கள் இருந்திருக்கலாம். அவற்றை விளங்காத முட்டாள் வாத்தி புத்த பிக்கு தங்களை உபசரித்த விடயத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார். இவ்வாறான புத்த பிக்குகள் அம்மாவுடன் மகளையும் சேர்த்து படுக்கை அறைக்கு அழைத்து விருந்து கொடுத்த சம்பவங்களை வீடியோக்களில் பார்த்திருப்பார்கள்.
கல்வி நிலையத்தில் மாதாந்தம் பல ஆயிரம் ரூபாக்களை கட்டணமாக அறவிடும் ரியுசன் வாத்தி இந்த சுற்றுலாவுக்கும் கட்டாயம் கட்டணம் அறவிட்டிருப்பார். அவ்வாறெனின் அந்த இலவச உணவுடன் கூடிய இரவு தங்குமிடத்திற்கான செலவுகளை மாணவிகளிடமிருந்து ஏற்கனவே பெற்றிருப்பார்.
எந்தவித திட்டமிடலும் இன்றி இந்த முட்டாள் ரியூசன் வாத்தி செய்த வடிவேலு போல வேலையை பலர் பகிர்ந்து வருவது கவலைக்குரிய விடயம்.
இவ்வாறான முட்டாள் ரியுசன் வாத்திகளை நம்பி தமது பிள்ளைகளை சுற்றுலாவுக்கு அனுப்பி அவர்களின் உயிர் அல்லது உடலுக்கு சேதம் ஏற்பட்ட பின் ரியுசன் வாத்திகளை தாக்கி தங்களின் கோபத்தை தீர்த்து எந்தவித பலனுமில்லை என்பதை பெற்றோர் உணர வேண்டும்.
யாழ் அரச அதிபரே சுற்றுலா என்ற பெயரில் மாணவர்களை தென்னிலங்கைக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்ய நினைக்கும் இவ்வாறான ரியுசன்களையும் கட்டுபாட்டில் கொண்டுவரும் நடவடிக்கை எடுங்கள். இல்லாது விடின் பல சிறுமிகள் வயிற்றில் பாரம் சுமக்கும் நிலை உருவாகலாம்…..
முட்டாள் வாத்தி சாம்பசிவம் ஹரிகரின் பதிவை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
கல்வி சுற்றுலாவை மேற்கொண்டு ஆதிரையான் கல்வி நிலைய மாணவர்கள் 58 பேருடன் அனுராதபுரம் கண்டி கொழும்பு மாத்தளை என பயணத்தை மேற்கொண்டோம். மாத்தளையில் தங்க முயன்றோம் கண்டியில் மண்டபத்தில் ஒரு பிள்ளைக்கு 400 ரூபா கேட்டனர் இடம் தேடிப்பார்த்து எனது பாசத்துக்குரிய சாந்தகுமார் Shanthakumar Kumar சேரின் உதவியை நாடினேன். விருந்தோம்பலில் அவரை யாராலும் வெல்ல முடியாது. பல இடங்களில் தேடி இறுதியில் மாத்தளை விகாரையொன்றில் தங்க இடம் கிடைத்தது.விகாரையா என்ற அச்சத்துடன் சென்ற மாணவர்களுக்கு அவர்களின் உபசரிப்பும் வசதிப்படுத்தலும் வியப்பையே தந்தது. ஏனெனில் மாத்தளையில் மத்தியில் பல பாடசாலைகளும் ஆலயங்களும் தங்குவதற்கு இடம் மறுத்த நிலையில் மாத்தளை நகரின் மத்தியில் விகாரை அடைக்கலம் கொடுத்தது . அழகான இயற்கை சூழலுடனான மண்டப வசதிகளை வழங்கி இலவசமாக அனைத்து மாணவர்களுக்கும் உணவு , தேநீர் என யாவற்றையும் விகாராதிபதியான சுமங்கல தேரர் முன்னின்று ஏற்பாடு செய்தார். ஏற்பாடு செய்தது மட்டுமல்ல தானே சமையல் வேலைகளிலும் முன்னின்று வேலை செய்தது வியப்பளித்தது. சில குருட்டு தன அரசியல்வாதிகளின் இனவாத கூச்சல்களுக்கு மத்தியில் இன்றும் அற்புத மார்க்கமான பெளத்த மதத்தின் பெருமைகளை தாங்கி நிற்கும், தேசிய ஒற்றுமைக்கான குரல்களை தாங்கி நிற்கும் அற்புதமான நபரை சந்திக்க கிடைத்தது. தென்னிலங்கையின் தெருக்களில் நடமாடி திரியும் என இத்தகைய அற்புதமான சகோதர இன மனிதர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. எமது பேராதனை பல்கலைத்தாயின் அரசறிவியல் துறையின் சிறப்பு பட்டதாரியான அவர் எமது மாணவர்களிடம் சொன்ன வார்த்தை. ஊருக்கு போய் சொல்லுங்கள் இனவாதம் தூண்டுவது அரசியல்வாதிகளே அன்றி சிங்கள மக்களல்ல. இந்த நாடு அழிந்து போக அவர்களே காரணம். இது போன்ற பிரச்சனைகளை தூண்டி அரசியல் செய்வது அரசியல்வாதிகளும் அவர்களின் அடியாள்களுமே. நாம் தமிழர்களுடனான ஒற்றுமையை மதிக்கிறோம். தமிழர்கள் என்றால் பயத்தோடு பார்க்கும் நிலைக்கு சிங்கள மக்களையும், சிங்கள மக்களென்றால் பயத்தோடு பார்க்கும் நிலையை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளே என்றார்.
வங்கிகள் மற்றும் அடமான மையங்களில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் தொடர்பில் வெளியான தகவல் | Gold Loans In Sri Lanka
Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka
பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வருடம் நாடு முழுவதிலும் 68,729 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள் வங்கிகளிலும், அடமான நிலையங்களிலும் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இதனை தெரிவித்துள்ளார்.
சொத்துக்கள் விற்பனை
மேலும்,
கடும் வறட்சி நிலவும் பதினைந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களால் நகைகள் உட்பட 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை அடகு வைத்துள்ளதாகவும் வங்கிகள் மற்றும் அடமான மையங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிலர் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக தங்களது சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பொருளாதார நெருக்கடி காரணமாக அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்க பணமின்றி நகைகளை இழக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
திருமண நிகழ்வில் நடனமாடிய யுவதிக்கு நேர்ந்த துயரம் | Young Woman Dancing Wedding Ceremony Has Died
திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த யுவதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹொரண பதுவிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்த மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற 25 வயதுடைய திருமணமாகாத பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நடனமாடிய யுவதி
உயிரிழந்த யுவதி, தான் பணிபுரியும் நிறுவனத்தில் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு, அங்கு கூட்டத்துடன் உல்லாசமாக நடனமாடியுள்ளதாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த யுவதி மேலும் இரு யுவதிகளுடன் நடனமாடிக்கொண்டிருந்த போது அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும் சிறிது நேரத்தில் சுகவீனமடைந்து ஹொரணை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
வைத்தியர்கள் பரிசோதனை
ஹொரணை வைத்தியசாலைக்கு யுவதியை அழைத்துச் சென்றதையடுத்து, பரிசோதனையின் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்
விசிட் விசாவில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற ஆறு பேர் கைது!
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பான புலம்பெயர்ந்தோர் ஊக்குவிப்பு பிரிவில் (SMPU) விசிட் விசாவில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற ஆறு பேர் தங்களது பயணத்திற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்த தவறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்
Sunday, August 13, 2023
ரகசிய தொடர்பு? பாலி ல் சேட்டை!! கிணற்றுக்குள் தலைகீழாக கட்டி சித்திரவதை!! யாழில் மகேந்திரன் அடித்துக் கொல்லப்பட்ட பின்னணி என்ன? 6 பேர் கைது!!
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் நேற்றுமுன்தினம் (12) நிர்வாண நிலையில் 52 வயதான மகேந்திரன் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகேந்திரனின் சொந்த இடம் கொடிகாமமாகும். மகேந்திரன் கல்வியங்காடு கோப்பாய் தெற்கில் திருமணம் முடித்து வசித்து வந்துள்ளார்.
யாழ்ப்பாணம் விஷேட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான காவல்துறை குழுவினரால் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் மற்றும் சிந்தங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த 4 ஆண்களும் 2 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி (9 – வயது) ஒருவரை பாடசாலைக்கு ஏற்றி இறக்கி வரும் நிலையில் குறித்த நபர் சிறுமியுடன் தவறாக நடந்ததாக சிறுமி தனது தாயாருக்கு தெரிவித்திருந்தார். சிறுமியின் தாயாருடன் மகேந்திரனுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாக தெரியவருகின்றது.
இந்த நிலையில் சிறுமி து ஸ்பிரயோகத்திற்கு உள்ளான குறித்த தகவலை சிறுமியின் தாயார் சித்தங்கேணியில் உள்ள சிறுமியின் மாமனுக்கு தெரிவித்திருந்த நிலையில், அவர் கோப்பாய் வந்து குறித்த நபரை சிந்தங்கேணி அழைத்துச் சென்று அங்கு வைத்து விசாரித்த போது அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மகேந்திரனை கிணற்றுக்குள் தலைகீழாகக் கட்டி வைத்திருந்து கொடூரமாகத் தாக்கி அதனை தொலைபேசிகளில் வீடியோக்களாகவும் எடுத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
பின் அந்த நபரை கோப்பாய் கொண்டுவந்து அவரது இல்லத்தில் விட்டுள்ளனர். அவ்வாறு வீட்டில் விடப்பட்ட நிலையில் அவர் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிந்த நபரின் உடலில் அடிகாயங்கள் காணப்பட்ட பொழுதும் உயிர் பிரியக் கூடிய வகையில் காயங்கள் பாரதூரமானதாக இல்லை எனவும் குறித்த நபர் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருதய நோய்க்கு பாவிக்கும் மருந்துகள் சில பாலி யல் துாண்டல்களை அதிகரிக்க செய்வதாகவும் குறித்த மருந்துகளை சிலர் பாலி யல்துாண்டல்களுக்காக பாவிப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பந்தப்பட்ட சிறுமி இன்று சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (14) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.



















