நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, April 22, 2025

யாழில் பரிதாபமாக பலியான 22 வயது இளம் பெண்!


யாழில் பரிதாபமாக பலியான 22 வயது இளம் பெண்!

யாழில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது 22) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த பெண்ணுக்கு கடந்த 14 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, குறித்த பெண் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்பின், மேலதிக சிகிச்சைக்காக கடந்த 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (21) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், மூளை காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment