யாழில் தனது கணவனுடன் தனது தங்கை காதல் தொடர்பில் ஈடுபட்டு வந்ததை அறிந்த மனைவி தங்கையை கண்டித்ததால் தங்கை கிணற்றில் குதித்த சம்பவம் யாழ் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதிப் பாடசாலையில் ஓ.எல் கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.
எ்நதவித வேலை வெட்டிக்கும் போகாது தாய், தந்தையின் உழைப்பிலும் வெளிநாட்டு வாழ் தனது சகோதரர்களின் பணத்திலும் வாழ்ந்து வந்த 22 வயதான காவாலி ஒருவன் கடந்த சில மாதங்களுக்கு முன் 20 வயதான யுவதியை திருமணம் முடித்துள்ளான். ரிக்ரொக் மூலமான அறிமுகத்திலேயே இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது.
இதன் பின் இவன் தனது மனைவியுடன் தனது பெற்றோரின் வீட்டிலேயே வேலை வெட்டிக்குப் போகாது வாழ்ந்து வந்துள்ளான். உரும்பிராய் பகுதியில் அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையம் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக தனது ரிக்ரொக் பக்கத்தில் தகவல் வெளியிட்டு வந்துள்ளான்.
அதே நேரத்தில் மனைவியின் தங்கையையும் காதலித்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனையறிந்த மனைவி தனது பெற்றோருடன் இருந்த தங்கையிடம் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு சண்டை பிடித்துக் கொண்டிருந்த போது மனைவியின் தங்கை அப்பகுதியில் உள்ள தோட்டப் பகுதிக்கு ஓடிச் சென்று கிணற்றில் குதித்துள்ளார். தங்கையின் பின்னால் சென்ற அக்கா மற்றும் உறவுகளும் அப்பகுதியால் சென்றவர்களும் உடனடியாக செயற்பட்டு குறித்த மாணவியை உயிருடன் மீட்டதாக் தெரியவருகின்றது.
மாணவி கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மாணவியின் அத்தானை பிடித்து தாக்கியதாகவும் தகவல்கள் வந்துள்ளன. தற்போது குறித்த அத்தானின் ரிக்ரொக் தளம் செயற்படவில்லை என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
0 comments:
Post a Comment