இரண்டு மாணவிகளை ஒரே நேரத்தில் காதலித்தமையால் ஏற்பட்ட தகராறை அடுத்து, யாழ்.பல்கலைக்கழக மாணவன், தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இரு மாணவிகளும் இவரது செயற்பாட்டை கண்டு பிடித்த பின்னரே குறித்த மாணவ்ன் தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ். பல்கலைகழகம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவிகள் இருவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பு, சண்டையில் முடிந்ததால் இவர் தவறான முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…
காதலியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டில் படிக்கும் கொட்டகலையைச் சேர்ந்த 24 வயது மாணவன்
உயிரிழப்பு.!
நிம்மதியாய் கால் நீட்டி படுக்ககூட முடியாத, சுவர்களில் மண் உதிர்ந்து கொண்டிக்கொண்டிருக்கும்
இரண்டு அறைகளை கொண்ட
லயத்து வீடு அது!
அவனின் சவப்பெட்டியை கூட இலகுவாக அந்த வாசலில் கொண்டு செல்ல முடியாது!
அவனின் அம்மா இந்தமுறை
அவன் தங்கை பெற்ற மூன்று A சித்திகளை அவனிடம் சொல்லி “எப்படி இனி நம்பி உன் தங்கச்சிய கெம்பஸ் அனுப்புவேன் என்று கதறி துடித்துக்கொண்டு இருக்கின்றார்!
பாடசாலையிலும் சமூகத்திலும் மிக கட்டுக்கோப்பாக வளர்ந்த ஒருவன்!
எத்தனை கனவுகளோடு பெற்றோர்
அனுப்பியிருப்பார்கள் அவனை!
அவனின் ஒரு நேர பஸ் காசுக்காக தாய் இரண்டு நாட்கள் கொழுந்து கூடையை நிச்சயம் சுமந்திருப்பார்!
இனி எந்த வார்த்தை சொல்லி அந்த
தாயை நாங்கள் சாந்தப்படுத்த முடியும்?
கெம்பஸ் விடுமுறை நாட்களில் அவன் எங்களோடு வேலைக்கு வந்து சென்றது நினைவுக்கு வருகின்றது!
முதலாம் ஆண்டு ஹொஸ்ட்டல் வாழ்க்கை முடிந்தவுடன் வெளியே அறைகளுக்கு இவர்கள் சென்ற போது “ஏன்டா தனித்தனியா பிரிஞ்சி ரூம் எடுத்திங்க நம்ப ஏரியா பசங்க எல்லாம் சேர்ந்து இருந்திருக்கலாமே’
என்று சொல்லி கோபப்பட்டேன்!
பிரதேச வாதமில்லை அதன் அர்த்தம்
ஒன்றாய் இருக்கும் போது எங்கள் இயல்பு மாறாது,நாங்கள் யார் ஏன் இங்கு வந்தோம் என்ற உணர்வோடு ஓரளவேனும் இருப்போம் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதற்காக!
இவனோடு நான் தனிப்பட்ட முறையில் அதிகமாய் பழகியதில்லை ஆனால் என் பல்கலைக்கழக இறுதி நாளில் காணும் போது ஒரு உதாரணத்தை சொல்லி அவனுங்க மாதிரி ஆகிடாதிங்க தம்பி கவனமாக இருங்க ஒத்துமையா இருங்க!
யுனிக்கு Fun பன்ன கொஞ்ச பேர் வந்துருக்காங்க! அவங்களுக்கு கனடா யூரோப் விசா ரெடியா இருக்கு நமக்கு அப்புடி இல்லடா Bye என்று சொல்லிவிட்டு வந்தேன்.
மனம் இன்னும் ஏற்கவில்லை!
கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் ஆபத்தானது என்பது உண்மை!
காதலியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டில் படிக்கும் கொட்டகலையைச் சேர்ந்த 24 வயது மாணவன் கொக்குவிலில் உள்ள மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்..
0 comments:
Post a Comment