குடும்பங்களை சின்னாபின்னமாக்கும் அளவுக்கு வெளிநாட்டு அன்ரிமார்களின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. யூரியூப்பர்களுடன், ரிக்டொக் செய்பவர்களுடன் காலத்தைப் போக்காட்டிக் கொண்டிருந்த அன்ரிமார்கள் தற்போது அமைதியான முறையில் வாழ்க்கை நடாத்தும் குடும்பஸ்தர்களையும் விட்டு வைக்கின்றார்களில்லை..
யாழ் – கொழும்பு – கட்டுநாயக்கா என தனது முதலாளியின் ஹயஸ் வாகனத்தை ஓட்டிச் சென்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டு சீராக குடும்பம் நடாத்திக் கொண்டிருந்த 31 வயதான இளம் குடும்ஸ்தர் ஒருவர் தற்போது தனது 7 மாதக் குழந்தை உட்பட 3 பிள்ளைகளையும் மனைவியையும் நடுத்தெருவில் விட்டுவிட்டு நோர்வேயில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணம் சுண்டுக்குழிப்பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்ற குடும்பப் பெண்ணுடன் தலைமறைவாகியுள்ளார். நோர்வேயில் வாழும் ஜெயந்திக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளார்கள். கணவனை விவாகரத்துச் செய்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த ஜெயந்தியின் இரு பெண் பிள்ளைகளும் தற்போது திருமணம் முடித்துவிட்டார்களாம்.
இவ்வாறான நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன் தனது உறவுக்காரர் ஒருவரின் திருமணத்திற்காக வந்த ஜெயந்தியை ஹயஸ்வான் றைவரே கட்டுநாயக்காவிலிருந்து யாழ்ப்பாணம் ஏற்றி வந்துள்ளார். இதன் பின்னரே இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக றைவரின் மனைவி கூறுகின்றார். ஜெயந்தியை சந்தித்த நாள் முதல் தனது கணவனின் நடவடிக்கைகள் திடீரென மாற்றமடைந்ததாகவும் வீட்டில் தனித்திருக்கும் சமயங்களிலும் தொலைபேசியுடனேயே காலத்தைப் போக்கினாராம் கணவர். ஒரு கட்டத்தில் தான் வெளிநாடு செல்லப்போவதாகவும் அதற்காக ஒரு பெண்ணை போலியாக பதிவுத்திருமணம் செய்ய வேண்டியுள்ளது எனவும் கூறிய போது தான் அதற்கு மறுப்புத் தெரிவித்து சண்டை போட்டதாகவும் மனைவி கூறுகின்றார். இவ்வாறான நிலையிலேயே கடந்த வாரம் முதல் கணவன் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றது. கொழும்பு சென்ற கணவன் தனது தொலைபேசிக்கு தொடர்பு எடுத்து தான் நோர்வே செல்ல ஆயத்தப்படுத்துவதாகவும் தன்னை தேட வேண்டாம் எனவும் கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து தான் உடனடியாக வீடு திரும்புமாறு கோரிய போது தனது தொலைபேசி இணைப்பை தடை செய்துவிட்டார் என மனைவி கூறுகின்றார். கணவனின் உறவுகளும் தொடர்பு கொண்ட போதும் கணவர் தன்னை தேடவேண்டாம்.
தான் வெளிநாடு சென்ற பின் தொடர்பு கொள்கின்றேன் என அவர்களுக்கும் கூறி இணைப்பை துண்டித்துள்ளாராம்.
இதன் பின்னர் மனைவி மற்றும் உறவுகள் மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளின் போதே நோர்வே ஜெயந்திஅக்காவின் லீலைகள் வெளியாகியுள்ளது. கணவனை கொழும்பு கொண்டு சென்று அங்கு இருவரும் பதிவுத் திருமணம் செய்துள்ளதுடன் நுவரேலியா மற்றும் எல்லே பகுதிகளில் ஹனிமூன் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக கணவனின் நண்பர்கள் மூலம் தனக்கு தெரியவந்ததாக மனைவி தெரிவித்துள்ளார். தற்போது கணவனை வெளிநாடு செல்லவிடாது தடுப்பதற்கு பொலிசாரின் உதவியை நாடி அவரது பாஸ்போட்டை நீதிமன்றம் மூலம் முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மனைவி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment