கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனோடு வந்த சாரதியால் முல்லைத்தீவு கேப்பாபுலவில் குடும்பஸ்தர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் .
நேற்று (24) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் உள்ளூராட்சி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயணங்களை மேற்கொண்டு வேட்பாளர்களோடு இணைந்து பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார் .
இதன் ஒரு அங்கமாக கேப்பாபுலவு கிராமத்துக்கு சென்ற மீன்பிடி அமைச்சர் கேப்பாபுலவு மீனவர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி அவர்கள் நந்திக்கடலுக்கு கடற் தொழிலுக்கு சென்று வரும் வீதியை பார்வையிட்டு அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடும் நோக்கோடு கேப்பாபுலவு வட்டாரத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளார்களையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார் .
இதன்போது கேப்பாபுலவு கிராம் மீனவர் சங்க தலைவர் வீட்டுக்கு முன்பாக நந்திக்கடலுக்கு செல்லும் வீதியில் தனது வாகனத்தை நிறுத்திய கடற்தொழில் அமைச்சர் தனது கட்சி சார்பான கேப்பாபுலவு வட்டார வேட்ப்பாளர்கள் மூலம் மீனவர் சங்க தலைவரை அவரது வீட்டுக்கு முன்பாக வீதிக்கு அழைத்து உரையாடியுள்ளனர் .
இதன்போது மிக நீண்டகால கோரிக்கையான நந்திக்கடலுக்கு தாம் தொழிலுக்காக சென்றுவரும் வீதி செப்பனிடப்படாது இருப்பதை சுட்டிக்காட்டிய மீனவர் சங்க தலைவர் தாம் தொடர்ந்து ஏமாற்றப்படுவதாக கோபத்தோடு பேசியுள்ளார் அதாவது முன்னர் இருந்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிடமும் பலமுறை முறையிட்டும் அவர் பார்வையிட்டும் இந்த வீதி இதே நிலையில் காணப்படுகின்றது. அதே போல் இன்று நீங்களும் வந்து பார்த்து விட்டு செல்லாமல் எமக்கு இந்த வீதியை சரிசெய்து தரவேண்டும் என கோபமாக கூறியுள்ளார். இதன்போது அமைச்சரோடு வருகை தந்தவர்களில் ஒருவரான சாரதி என கருதப்படும் வெள்ளை சேர்ட் அணிந்திருந்த நபர் ஒருவர் அமைச்சரை பார்த்து என்ன கதைக்கிறாய் இவர் யார் என்று தெரியுமா என கேட்டு தனது கழுத்தை பிடித்து அழுத்தி சப்பாத்து கால்களால் முதுகு புறத்தில் பலதடவை உதைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவரும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மீனவர் சங்க தலைவர் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு எதையும் செய்யவில்லை. ஏன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை என பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொண்டு கேட்டபொழுது,
தாக்குதல் மேற்கொண்டவர் அமைச்சர் முன்பாகவே மேற்கொண்டார். சம்பவம் அனைத்தையும் அமைச்சர் பார்த்துக்கொண்டு நின்றார். இது இவ்வாறு நடந்திருக்க ஒரு அமைச்சருக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்றால் எனக்கே மேலும் அச்சுறுத்தலாக இந்த சம்பவம் மாறும் என்ற அச்சம் காரணமாக பொலிஸ் முறைப்பாடு செய்யவில்லை என பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் அறிந்த அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சூட்சுமமாக இந்த சம்பவத்தை தனது முகநூலில் எழுதியிருந்த நிலையில் அவரது பதிவின் கருத்து பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதனின் இணைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு முக்கியஸ்தருமான நடராசா வாகீசன் எனும் நபர் சம்பவம் இடம்பெற்ற வேளை தான் அங்கே இருந்ததாகவும் சம்பவம் தெரியாது உளற வேண்டாம் எனவும் . அமைச்சரை தாக்க வந்தவரை கொஞ்சுவதா எனவும் தற்பாதுகாப்புக்கு தள்ளிவிட்டதோட சரி.தூக்கி உள்ள வைக்காம விட்டது தப்பு போல ஒரு அமைச்சர் ஊர்மக்களை நம்பி பாதுகாப்பில்லாது வந்ததுக்கு நல்லா காட்டிவிட்டீங்க. கேப்பாபுலவு இராணுவ முகாம் காணி விடுவிப்புக்கு வந்த அமைச்சரை வீதி திருத்தி தாங்கோ என கேட்டு கூப்பிட்டு தாக்க வந்ததையிட்டு தெரியாது நினைத்த எல்லாம் வெளிப்படுத்த உங்களால் மட்டும் முடிகிறது..அதெப்படி உடனே மூக்கு வேர்க்கிறது..வாங்கியவர் சொன்னாரா? என கருத்திட்டுள்ளார்
0 comments:
Post a Comment