யாழ் வரணி சுட்டிபுரம் அம்மன் கோவில் தீர்த்தக் குளத்தில் நேற்று 23 வயது இளைஞன் சிலுசன் சடலமாக மீட்கப்பட்டான். அவனது இறப்பில் கடும் சந்தேம் உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள். அவனது இறப்பில் கொடிகாமம் பொலிஸ்நிலைய பொலிஸ்காரன் வாகீசனுக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் கூறுகின்றாா்கள்.
வாகீசன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும் துர்நடத்தையான பெண்களுடன் தொடர்பில் இருப்பவர் என்றும் குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கூறுகின்றார்கள். சிலுசன் நேற்று மதியம் இரண்டு மணியளவில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சிலுசனின் நண்பர்களான சின்னாம்பி என்பவனும் யூலி என்பவனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குளப்பகுதிக்கு வரச் சொல்லியுள்ளார்கள்.
அங்கு சென்ற சிலுசன் அதன் பின்னர் குளத்தில் சடலமாகவே மீட்கப்பட்டுள்ளான். சிலுசன் சடலமாக மீட்கப்பட்ட இடத்திற்கு உறவினர்கள் சென்ற போது அங்கு காணப்பட்ட வாகீசன் ஓடித் தப்பியதாக அங்கு சென்றவர்கள் தெரிவித்துள்ளார்கள். அத்தடன் இதுவரை சிலுசனுடன்குளப்பகுதியில் நின்றவர்கள் எவரும் கண்ணில் படவில்லை என்றும் அவர்கள் தலைமறைவாகியுள்ளார்கள் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
சிலுசன் குடிப்பழக்கமற்றவர் என கூறும் அவர்கள் குறித்த குளத்தில் உள்ள நீர் இடுப்பளவுக்கு கீழேயே உள்ளதாகவும் அங்கு தாமரைக் கொடியில் சிக்கும் அளவுக்கு தாமரைகள் இல்லை எனவும் அவர்க்ள கூறுகின்றார்கள். இதே வேளை சிலுசன் இறந்த குளப்பகுதிக் கரையோரமாக பியர் ரின்கள் மதுபாணப் போத்தல்கள் காணப்பட்டதாகவும் அப்பகுதியில் சிலுசன் சென்ற போது வாகீசனு்டன் சேர்ந்து சிலர் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோக்காரர்கள் தெரிவிக்கின்றார்கள்.
சிலுசனுக்கு காதலி உள்ளதால் அது தொடர்பாக ஏதாவது முரண்பாடுகள் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது முரண்பாட்டால் அவன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டானா என அறிய முடியவில்லை. இருப்பினும் சிலுசனின் மரணத்தால் அவனது காதலியும் உயிரை மாய்த்தது அப்பகுதியைச் சேர்ந்தவர்களை மிகவும் அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.
கொடிகாமம் பொலிசார் இது தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மனித உரிமை ஆணைக்குழுவும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
0 comments:
Post a Comment