This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, February 28, 2025

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறுமியை பற்றைக்குள் கொண்டு சென்று உறவு கொண்ட இருவர் கைது!!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறுமியை பற்றைக்குள் கொண்டு சென்று உறவு கொண்ட இருவர் கைது!!

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவர் துஷ்  பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிறுமி ஒருவர் 24.02.2025 அன்றையதினம் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து வைத்திய பரிசோதனையின் போது சிறுமி துஷ் – பிரயோகத்திற்கு உள்ளாகியிருக்கின்றமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த சிறுமியை இளைஞன் ஒருவர் பாடசாலை வகுப்பிற்கு அழைத்து செல்வதாக கூறி பற்றைக்காட்டுக்குள் அழைத்து சென்றதாக ஆரம்பகட்ட தகவல் கிடைத்திருந்தது. அதன் பின்னர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் ஹேரத், மற்றும் கிஷாளினி உள்ளிட்ட பொலிஸ் குழுவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பதியப்பட்டதனையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2ஆம் வட்டாரம், கோம்பாவில் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரும் துஷ் பிரயோகத்திற்கு உடந்தையாக இருந்ததென கூறி 19 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்திய போது எதிர்வரும் மார்ச் மாதம் 11 திகதிவரை இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை இடம்பெற்று வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லண்டன் பேரூந்ரு விபத்தில் புலம்பெயர் தமிழ்க் குடும்ப்ப் பெண் சித்ரா பலி!!


லண்டன் பேரூந்ரு விபத்தில் புலம்பெயர் தமிழ்க் குடும்ப்ப் பெண் சித்ரா பலி!!

வடமேற்கு லண்டனில் பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட விபத்தில் சித்ரா வான்மீகநாதன் என்ற தமிழ் பெண் ஒருவர் உயிர் இழந்து உள்ளார்.

வெம்ப்லியைச் சேர்ந்த 46 வயதான அவர் திங்களன்று 21:20 GMT மணியளவில் ஹாரோவின் பெஸ்பரோ சாலையில் இடம் பெற்ற வாகன விபத்தில் உயிர் இழந்தார். அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இரண்டு பாதசாரிகள், 12 வயது சிறுவன் மற்றும் 30 வயதுடைய ஒரு பெண், பஸ்ஸும் காரும் மோதியதில் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் நிறுத்திய காரை ஓட்டிச் சென்ற சாரதி, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எம்.பி பதவியை இராஜினமா செய்கிறார் பைத்தியர் அர்ச்சுனா? நிறை வெறியில் போட்ட பதிவா?


எம்.பி பதவியை இராஜினமா செய்கிறார் பைத்தியர் அர்ச்சுனா? நிறை வெறியில் போட்ட பதிவா?

தனது எம்பி பதவியை துறப்பதாக அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். அப் பதவியினை கௌசல்யா நரேனுக்கு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத் தகவலினை அவர் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். இம்முடிவானது நிதானத்தில் எடுக்கப்பட்ட முடிவா அல்லது நாளை அவருடைய முடிவில் நிலைப்பாடு மாறுமா? என்ற கேள்வியும் உள்ளது.

அவர் எப்பொழுதும் தனது நிலைப்பாட்டில் இரட்டை நிலை தன்மை உடையவர் என்பதை கடந்தகால நிகழ்வுகள் சான்றாக காட்டியுள்ளன.

Thursday, February 27, 2025

ரொட்டி சாப்பிட்ட விதர்ஷனா மர்மமான முறையில் பலி!!


ரொட்டி சாப்பிட்ட விதர்ஷனா மர்மமான முறையில் பலி!!

புத்தளத்தில் வீடொன்றில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கலடிய பகுதியைச் சேர்ந்த 19 வயதான சாமுதி விதர்ஷனா என்ற யுவதியே நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளம் ஆனந்தா தேசிய பாடசாலையின் மாணவியான அவர், குருணாகலிலில் உயர்கல்வி டிப்ளோமா கல்வி பயின்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டிற்கு மூத்த பிள்ளையான விதர்ஷனா, அன்றையதினம் இரவு மரக்கறி ரொட்டி உட்கொண்ட நிலையில் உறங்க சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காலையில் மாணவியின் அறைக்கு சென்ற தாய், மகளின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மயக்க நிலையில் இருந்த மகளை புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் திடீர் மரணம் குறித்து புத்தளம் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செவ்வந்தி தங்குவதற்காக பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்..! தீவிரமடையும் விசாரணை.


செவ்வந்தி தங்குவதற்காக பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்..! தீவிரமடையும் விசாரணை.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி, கொலைக்கு முந்தைய நாள் (18.02.2025) கடுவெலயில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்காக வந்ததைக் காட்டும் புகைப்படங்கள், மற்றும் சிசிரிவி காணொளிகள் தற்போது வெளியாகி உள்ளன.

கொலை நடந்ததற்கு முந்தைய நாள் (18) மாலையில் அவர்கள் காரில் ஹோட்டலுக்கு வந்ததாகவும், அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததாகவும், மறுநாள் மஹரகம பகுதியில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஹோட்டல் நிர்வாகத்திடம் கூறியதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே இரவில், மற்றொரு காரில் வந்த ஒருவர் ஹோட்டல் முன் வந்து அந்தப் பெண்ணிடம் ஒரு பையைக் கொடுத்ததாகவும், இதில், துப்பாக்கி அடங்கிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் குறித்த புத்தகம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Wednesday, February 26, 2025

யாழில் செத்தவீட்டு ஊர்வலத்தில் சென்றவர்களை மோதித் தள்ளி உயிர்ப் பலி எடுத்து ஓடித் தப்பிய வாகனம் இதுதான்!!


யாழில் செத்தவீட்டு ஊர்வலத்தில் சென்றவர்களை மோதித் தள்ளி உயிர்ப் பலி எடுத்து ஓடித் தப்பிய வாகனம் இதுதான்!!

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இறுதி ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது மோதி தள்ளி விட்டு தப்பிச் சென்ற வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கைதடி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைத்திருந்த நிலையில் வாகனம் இன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கோப்பாய் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த ஒருவரின் பூதவுடலுக்கு இறுதி கிரியைகள் நடைபெற்று தகன கிரியைக்காக கோப்பாய் – கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஊர்வலமாக சென்றவர்கள் மீது வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய ஐந்து பேர் சிகிச்சை பெற்றனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் வாகனத்தின் சாரதி மற்றும் உரிமையாளரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு யுவதி எஸ்கேப் !


பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு யுவதி எஸ்கேப் !

பேஸ்புக் மூலம் அறிமுகமான அழகான யுவதியை சந்திக்க தனது நண்பர்கள் இருவருடன் சென்ற தொழிலதிபர் ஒருவர், தனது நகை மற்றும் போன் திருடப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.

தொழிலதிபர் மற்றும் நண்பர்களை போதையில் ஆழ்த்தி விட்டு, அவர்களிடமிருந்த பெறுமதியான பொருட்களை அபகரித்துக் கொண்டு அந்த யுவதி தப்பிச் சென்றுவிட்டார்.

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கிட்டத்தட்ட 2.1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸ் மற்றும் ஒரு மொபைல் போன் திருடப்பட்டுள்ளது.

காணாமல் போன தங்க நெக்லஸ் 10 பவுண் எடையுள்ளதாகவும், அதன் மதிப்பு கிட்டத்தட்ட 2 மில்லியன் ரூபாய் என்றும் பொலிசார் தெரிவித்தனர். திருடப்பட்ட ஸ்மார்ட்போனின் மதிப்பு ரூ.75,000 என்றும் பொலிசார் அறிவித்துள்ளனர்.

வென்னப்புவ, வைக்கல பகுதியில் வசிக்கும் ஒரு தொழிலதிபர், தனது இரண்டு நண்பர்களுடன், ஹன்வெல்ல பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு, பேஸ்புக் சமூக ஊடக வலையமைப்பு மூலம் நட்பு கொண்ட ஒரு அழகான பெண்ணுடன் சென்றதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த குழுவினர் மது அருந்திய பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொழிலதிபர் அளித்த புகாரின்படி, அந்தப் பெண் மூவருக்கும் போதைப்பொருளை (போதைப்பொருள் அல்லது மதுபானம்) கொடுத்து போதையில் ஆழ்த்தியதாகவும், அந்த நேரத்தில், அவர்கள் அதிக போதையில் இருந்த பிறகு, அந்தப் பெண் திருட்டைச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

தொழிலதிபர் உட்பட மூன்று பேர் இரவு வெகுநேரம் வரை ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததால் ஹோட்டல் நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் விசாரித்த போது, அவர்கள் அதிக குடிபோதையில் காணப்பட்டனர். அவர்களுடன் வந்த அழகான பெண் சம்பவ இடத்தில் இல்லை என்பது தெரியவந்தது.
பின்னர், ஹோட்டல் ஊழியர்கள் தொழிலதிபரையும் அவரது குழுவினரையும் எழுப்பிய பிறகு, தொழிலதிபரின் தங்க நெக்லஸ் மற்றும் மொபைல் போன் காணாமல் போனது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் ஹன்வெல்ல பொலிசில் புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஹன்வெல்ல போலீசார் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், சந்தேக நபரை அடையாளம் காண ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தொழிலதிபரின் சமூக ஊடக கணக்குகளின் மூலம் யுவதியை அடையாளம் காணவும் முயற்சி நடக்கிறது.

Tuesday, February 25, 2025

மரண பயத்தில் அர்ச்சுனா எம்.பி விடுத்த கோரிக்கை - சபாநாயகரின் உறுதிமொழி | Mp Archchuna Requests For Security Amidst


மரண பயத்தில் அர்ச்சுனா எம்.பி விடுத்த கோரிக்கை - சபாநாயகரின் உறுதிமொழி
தமிழர்களுக்கான உயிரை கொடுக்க தயங்கப் போவதிலை என சூளுரைத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்று உயிருக்கு பயந்து பாதுகாப்பு கோரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து தன்மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தினை அடுத்து தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இரண்டு உத்தியோகத்தர்களை பாதுகாப்புக்கு வழங்குமாறு, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போது அர்ச்சுனா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சுட்டுக்கொலை

அண்மையில் கொழும்பு நீதிமன்றத்தில் சந்தேக நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த வாரங்களில் பல்வேறு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இவை எனது பாதுகாப்பு தொடர்பான கரிசனையை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.

சந்தேக நபரையும் கைது செய்தனர். எனினும் திடீரென எனக்கு எதிராக வழக்கொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவசர நிலைமை

இவை நாடாளுமன்ற உறுப்பினராக நான் செயற்படுவதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்குதாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் எனக்கு இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஒதுக்குமாறு கோருகின்றேன்.

இந்த வேண்டுகோளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்வதுடன், இந்த அவசர நிலைமையை கருத்தில்கொண்டு உங்களின் சாதகமான பதிலையும் உடனடியாக எதிர்பார்க்கின்றேன் என்றார்.

இதன்போது பதிலளித்த சபாநாயகர், சிறப்புரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுமாயின் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

நீதவானுக்கே மறுக்கப்பட்ட நீதி : கடும் அதிருப்தியில் தமிழ் மக்கள் | Judge Ilanchezhiyans Judicial Career Ends


நீதவானுக்கே மறுக்கப்பட்ட நீதி : கடும் அதிருப்தியில் தமிழ் மக்கள்!
அரசியல் தலையீடுகள், அச்சுறுத்தல்களுக்கு அடி பணியாமல் தனது நீதிச்சேவையில் நேர்மைத்தன்மையுடன் செயற்பட்ட நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் ஓய்வு பெற்றமை அவரை மட்டுமல்ல தமிழ் மக்களையே கவலைக்கு ஆளாக்கியுள்ளது.

நீதிபதியாக 27 வருடங்களை பூர்த்தி செய்த அவர் இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதியாவார்..

  25 ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதி

இன்றைய வடக்கு - கிழக்கு மாகாண அனைத்து நீதிபதிகளிலும் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல்  தமிழ் நீதிபதி என்ற பெருமைக்கும் காரணமானவர்.

தனக்கான பதவி உயர்வு வழங்கப்படாமைக்கான காரணத்தைக்கூட அவர் கடந்த (01.02) ஆம் திகதி வவுனியாவில் நடத்தப்பட்ட தனக்கான கௌரவிப்பு நிகழ்வில் கூட விலாவாரியாக எடுத்துரைத்திருந்தார்.

காலதாமதம் என்னை ஓய்வு எடுக்க அனுப்பியது

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 12.01.2025 ஞாயிற்றுக்கிழமை. 13 ஆம் திகதி திங்கள் போயா. 14 ஆம் திகதி செவ்வாய் பொங்கல். திங்கள் இரவு ஜனாதிபதி சீனா பயணம். வெள்ளிக்கிழமை இரவு சீனாவில் இருந்து திரும்பி வந்தார். 18,19 விடுமுறை நாள். 19.01.2025 அன்று எனது இறுதி நாள். காலதாமதத்திற்கு நான் காரணமல்ல. காலதாமதம் என்னை ஓய்வு எடுக்க அனுப்பியது. காலதாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்று நான் பல இடங்களில் பேசினேன். அந்த நீதி என் மீதும் தொடுக்கப்பட்டுள்ளது. எதையும் ஏற்றும் கொள்ளும் மனபாவம் வர வேண்டும் என தெரிவித்திருந்தார்.   

இவ்வாறு நேர்மைத்தன்மையுடன் செயற்பட்ட நீதவான் இளஞ்செழியனுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமையை இட்டு தமிழ் மக்கள் தமது அதிருப்தியையும் ஆழ்ந்த கவலையையும் வெளிப்டுத்தியுள்ளனர்.

இராணுவத்தின் பல ஆயுதங்கள் மாயம்! அச்சத்தில் அநுர அரசு!


இராணுவத்தின் பல ஆயுதங்கள் மாயம்! அச்சத்தில் அநுர அரசு!

இலங்கையில் (Sri lanka) ஆயுதக்குழுக்கள் ஆயுதங்களுடன் இயங்குவார்களாக இருந்தால் அவர்கள் இலகுவாக அரசுக்கெதிராக திசைத்திருப்பப்படுவார்கள் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு இருப்பதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தென்னிலங்கையை பொறுத்தவரை துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் வழமையாகிவிட்டன. அதில் பெருமளவில் இராணுவத்தினர் ஈடுபடுவதாக சந்தேகமுள்ளது.

மின்னேரியா இராணுவமுகாமில் இருந்து விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறிய ஆயுதங்களில் 84 T56 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளன.

அதேயளவு இராணுவத்தினருடைய துப்பாக்கிகளும் காணாமல் போயுள்ளதாகவும் அவை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையிலே அரசாங்கம் T56 துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை பற்றிய விாரங்களை தெரிவித்தால் சன்மானம் தருவதாக அறிவித்துள்ளது” என்றார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...  

ஒன்பது மாத சிறைத்தண்டனை பெற்றிருந்த ஞானசார தேரர் பிணையில் விடுதலை!


ஒன்பது மாத சிறைத்தண்டனை பெற்றிருந்த ஞானசார தேரர் பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்துள்ளது.

ஞானசார தேரர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றத்திற்காக ஜனவரி 9ம் திகதி நீதிமன்றம் ஞானசார தேரருக்கு ஒன்பது மாதசிறைத்தண்டனையை வழங்கியிருந்தது.

Monday, February 24, 2025

சாவகச்சேரி உதவிப் பிரதேசசெயலாளர் தமிழினி கொல்லப்பட்டது எப்படி? உறவுகளின் அதிர்ச்சித் தகவல் இதோ


சாவகச்சேரி உதவிப் பிரதேசசெயலாளர் தமிழினி கொல்லப்பட்டது எப்படி? உறவுகளின் அதிர்ச்சித் தகவல் இதோ

தமிழினியின் வாழ்க்கையின் இறுதி தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

09/02/2025 அன்று, அவள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​தீ விபத்து ஏற்பட்டது. அவளுடைய அலறல் சத்தம் கேட்டபோதும், குடிபோதையில் இருந்த கணவர், அக்கம்பக்கத்தினர் அவளுக்கு உதவ வருவதைத் தடுத்தாராம்

பின்னர், அவளுடைய உடைகள் பலத்த எரிந்த நிலையில் இருக்க அந்த உடையை கழற்றி எரிந்த மேனியில் மாற்று உடையை கணவர் அணிவித்துள்ளார் இந்த உடை அவரின் உடலில் நன்கு ஒட்டிவிட்டனவாம்

அவள் கோப்பாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள். 10 ஆம் தேதி காலை 7 மணிக்குப் பிறகுதான், சதீஸ் தமிழினியின் குடும்பத்தினருக்கும் சகோதரிக்கும், “அவளுடைய காலில் ஒரு சிறிய தீக்காயம் மட்டுமே உள்ளது” என்று தெரிவித்தார்.ஆனால் முழம் காலிக்கு கீழ் எந்தவொரு காயமும் இல்லை என்பதை தமிழினியின் அக்கா உறுதிப்படுத்தினார்

தமிழினியின் தாய் ஒரு இதய நோயாளி என்பதால், அவளுடைய சகோதரி உண்மையை அம்மாவிடம் மறைத்து, உடனடியாக தங்கள் தந்தையை அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணத்திற்கு விரைந்தார். அவள் மருத்துவமனைக்கு வந்தபோது, ​​அவசர சிகிச்சைப் பிரிவில் தமிழினியை கண்டாள் – அவளுடைய முகமும் மேல் உடலும் மிகவும் எரிந்து கருமையாக இருந்ததால் அவளை அடையாளம் காண முடியவில்லை.

அதிர்ச்சியடைந்த தமிழினியின் சகோதரி, நடந்த உண்மையைச் சொல்லும்படி கெஞ்சினார்.

இந்த நேரத்தில், தமிழினியின் கணவர் மருத்துவமனை இருக்கையில் படுத்து, அதிக போதையில், தூங்கிக் கொண்டிருந்தார், இன்னும் மது நாற்றத்துடன் இருந்தார்.

தமிழினியின் சகோதரி மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்களின் பதில் பேரழிவை ஏற்படுத்தியது:

“கடவுளால் கூட அவளைக் காப்பாற்ற முடியாது. பலூனுக்கு அருகில் வெப்பத்தை வைத்தால் என்ன நடக்கும்? அவளுடைய நுரையீரல் கடுமையாக சேதமடைந்துள்ளது – 99% நேரங்களில், எங்களால் எதுவும் செய்ய முடியாது.” என்றார்கள் மருத்துவர்கள்.

தமிழினி தன் சகோதரியின் கையைப் பிடித்துக்கொண்டு சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு கெஞ்சினாள்.

நான்காவது நாள், அவளால் சுருக்கமாகப் பேச முடிந்தது. அரசாங்க அதிபர் (GA) அவளைச் சந்தித்தபோது, ​​அவள் கண்ணீரில் ஏதோ சொல்ல முயன்றாள்.

அவள் தன் சகோதரியிடம், “நீங்களும் அப்பாவும் மருத்துவமனையில் தனியாக இருங்கள்” என்று சொன்னாள். அவள் வேறு யாருடனும் இருக்க விரும்பவில்லை. பின்னர், மருத்துவர்கள் அவளுக்கு ஒரு ஊசி போட்டனர், அவள் தூங்கிவிட்டாள்.

முகத்தில் ஏற்பட்ட காயங்களின் தீவிரம் காரணமாக, தமிழினியின் சுவாசிக்க மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

கடைசி நேரத்தில், நடந்த உண்மையை அவள் தந்தையிடம் சொல்ல முயன்றாள். அவள் பேசுவதற்கு உதவுவதற்காக மருத்துவர்கள் தொண்டையில் பொருத்தப்பட்ட துளையை அவிழ்த்துவிட்டனர், ஆனால் அவள் ஏதோ சொல்ல முயல்வதற்குள் அவள் இறந்துவிட்டாள்.இறப்பதற்குள் தன் தந்தையிடம் அவள் உண்மையை சொல்லிவிட்டாள்

தமிழினி நடந்த உண்மையை மறைக்க முயன்றுள்ளாள் காரணம் தன் பெற்றார் சகோதரங்களைபாதுகாக்கும் நோக்கோடு

இதற்கிடையில், அவளுடைய கணவர் சதீஸ் வீடு திரும்பினார், வீட்டை சுத்தம் செய்தார், பின்னர் மருத்துவமனைக்குத் திரும்பினார் – என்ன நடந்தது என்பது குறித்து உண்மையான கவலை இல்லை.

தமிழினி வவுனியாவில் நிலம் வாங்கி, அங்கே ஒரு வீடு கட்டி, நிம்மதியாக வாழ்வதே தமிழினியின் கனவு. வவுனியாவுக்கு வேலை மாற்றலையும் பெற்றிருந்தார்.

ஆனால், தமிழினி வீட்டிற்கு வரும்போதெல்லாம், அவள் எப்போதும் தன் கணவர் சதீஸ் தனது தொலைபேசியுடன் தனியாக இருப்பதைக் கண்டாள் – தொலைதூரத்தில், ஆர்வமற்றவனாக, தனிமைப்படுத்தப்பட்டவனாக.

தமிழினி இந்த ஆண்டு இறுதியிலும் ஒரு பட்டம் பெற இருந்தாராம்

வருடம் ஒரு பட்டம் எடுத்தாராம் பல்கலைக்கழகம் படிக்கும் காலத்தில் இவரின் படிப்பு செலவை அப்பா மாடுவிற்று பால் விற்று படிப்பித்தாராம்

தமிழினியின் மரண சடங்குகளை செய் கணவரை அழைத்துள்ளனர் காரணம் தங்கை ஒரு சுமங்கலி இதனால் கணவனை விருப்பம் இன்றி அழைத்து கடமைகளை செய்ய வைத்தனர் ஆனால் தங்கள் தந்தை கடன் பட்டு மரண சடங்குகளை செய்ய இந்த சதிஸ் எதுவும் செய்யாமல் இருந்தானம்

இந்த கொலைகாரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும், என் நண்பர்களே.

ஒட்டுசுட்டானில் குரங்கு குறுக்கே பாய்ந்ததால் இளம் குடும்பப்பெண் உயிரிழப்பு.!


ஒட்டுசுட்டானில் குரங்கு குறுக்கே பாய்ந்ததால் இளம் குடும்பப்பெண் உயிரிழப்பு.!

இன்று (24) முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் 30 வயது இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கணவன், பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது குரங்கு ககுறுக்கால் பாய்ந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த தாயும் மகளும் வைத்தியசாலையில் அனுமதிப்படிருந்தனர்.

தாய்க்கு தலையில் சிறு காயம் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.

பல மோசடி வழக்குகளை துரிதமாக கையாண்ட தமிழ் பொலிஸ் அதிகாரிக்கு யாழ்ப்பாணத்தில் திடீர் இடமாற்றம்! ஜே.வி.பி ஊழல் ஆரம்பமா?


பல மோசடி வழக்குகளை துரிதமாக கையாண்ட தமிழ் பொலிஸ் அதிகாரிக்கு யாழ்ப்பாணத்தில் திடீர் இடமாற்றம்! ஜே.வி.பி ஊழல் ஆரம்பமா?

பல்வேறு மோசடி வழக்குகளை துரிதமாக விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் துரிதமாக நீதியைப் பெற்றுக்கொடுத்தார் என்று அறியப்பட்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணை பிரிவின் (SCIB) பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் குணறோயனுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான இணைப்பு பிரிவுக்கு பொறுப்பதிரியாக இடமாற்றப்பட்டுள்ளது. சார்ஜனட் தர பொலிஸ் அதிகாரிக்கு வழங்கும் பதவிநிலையை நியமிக்கும் பதவியே வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சிலரின் பொலிஸ் மேலிடத்துக்கான மனுக்கள், பொலிஸின் மாவட்ட நிலை நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாகவே இந்த வழங்கப்பட்டுள்ளது. சுன்னாகத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் குணறோயன் காணி மோசடிகள், பண மோசடிகள் உள்ளிட்ட வழக்குகளை துரிதமாகவும் நிரூபிக்க கூடிய வகையில் முன்னேடுத்து வந்து நீதிமன்றின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை ப் பெற்றுக்கொடுத்தார் என்று பலராலும் பாராட்டுப்பெற்றவர்.

தென்னிலங்கை அரசியல்வாதிகளின் செல்வாக்குமிக்க மோசடிக் கும்பல்கள், யாழ்ப்பாணத்தில் காணி மோசடிக்கு உடைந்தையாக இருந்த சட்டத்தரணிகள் போன்ற பலம்பெற்ற தரப்புகளுக்கு எதிராக துணிச்சலாக விசாரணைகளை அவர் முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் பெண்ணுடன் அந்தரங்க உறவைப் பேணும் ஜேர்மன் கட்சித் தலைவி!!


இலங்கைப் பெண்ணுடன் அந்தரங்க உறவைப் பேணும் ஜேர்மன் கட்சித் தலைவி!!

ஜேர்மனியில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றுள்ள கட்சியின் தலைவரான (Alice Weidel) பெண்மணியின் ஒருபா லின உறவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் பிறந்து, சுவிட்சர்லாந்தில் தத்தெடுக்கப்பட்ட பெண்ணிற்கும், அதிதீவிர வலதுசாரி கட்சியின் தலைவி அலைஸ் வெய்டெல் (Alice Weidel) இருவருக்கும் ஒருபா லின உறவு உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
தத்தெடுக்கப்பட்ட இலங்கைப் பெண்
ஜேர்மனியில் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கென்சவேர்ட்டிவ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
அதிதீவிர வலதுசாரி கட்சி கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு அடுத்ததாக அதிகளவு வாக்குகளை பெற்றுள்ளது.

தீவிர வலதுசாரி கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி வெற்றிபெற்றிருந்தால், அதன் தலைவர் அலைஸ் வெய்டெல் (Alice Weidel) வெற்றி பெற்றிருந்தால் அவர் ஜேர்மனியின் முதலாவது லெஸ்பியன் சான்சிலாராகியிருப்பார்.

ஆண் – பெண் உறவை அடிப்படையாக கொண்ட குடும்ப அமைப்பிற்கு முக்கியத்துவம் வழங்கும் பாரம்பரிய குடும்ப அமைப்பிற்காக குரல்கொடுக்கும் கட்சியின் தலைவர் ஒரு லெஸ்பியன். வெய்டெல் 2009 முதல் சரா பொசார்ட் என்பவருடன் உறவில் உள்ளார். சராபொசார்ட் இலங்கையில் பிறந்து சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்களால் தத்தெடுக்கப்பட்டவர்.

நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலைகாரனின் செவ்வந்தி தங்கத்தை தேடியும் கிடைக்கவில்லை!!


நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலைகாரனின் செவ்வந்தி தங்கத்தை தேடியும் கிடைக்கவில்லை!!

கணேமுல்ல சஞ்சீவ கொலையில், சட்டத்தரணி வேடமணிந்து நீதிமன்றத்துக்கு துப்பாக்கியை கொண்டு வந்த 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை தேடுவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பெண் வெளிநாட்டிற்குச் செல்லவில்லை என்றும், நாட்டினுள்ளேயே தலைமறைவாகியுள்ளதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், தெஹிவளை மற்றும் மத்துகம பகுதிகளில் பல இடங்களில் நேற்று விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும், இந்தப் பெண் குறித்து எந்த தகவலும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான பின்னணியில், தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி குறித்த பெண்ணின் பாட்டி, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் நீர் கொழும்பு ஜெயா மாவத்தையில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Sunday, February 23, 2025

பல் பிடுங்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு!


பல் பிடுங்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு!

பலாங்கொடையில் உள்ள தனியார் பல் சிகிச்சை நிலையம் ஒன்றில் பல் ஒன்றை அகற்றிய பின்னர் ஏற்பட்ட நோய் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.பலாங்கொடை, படுவத்த பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பல் அகற்றப்பட்ட பிறகு ஏற்பட்ட நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.அத்துடன், பல் அகற்றப்படுவதற்கு முன்னர் அவருக்கு எந்த நோயும் இருக்கவில்லை என்று உயிரிழந்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரையை அகற்றக் கோருவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன். – பைத்தியர் அர்ச்சுனா!


தையிட்டி விகாரையை அகற்றக் கோருவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன். – பைத்தியர் அர்ச்சுனா!

தையிட்டி விகாரையை அகற்றக் கோருவோருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றை தினம்( 22)பாராளுமன்றத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆலோசனைக்குழு கூட்டம் இடம்பெற்றபோதே இதனை தெரிவித்தார்.

அர்ச்சுனா இராமநாதன் அங்கு மேலும் கூறிய போது..

தையிட்டி விகாரையை அகற்றக் கோருவதன் ஊடாக நாட்டில் இன்னும் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் முயல்வதாக நாடாளுமன்றஉறுப்பினர் அர்ச்சுனாஇராமநாதன் குற்றம்சாட்டினார்.

விகாரையினை அகற்றுவதன் ஊடாக 83ஆம் ஆண்டு இனக்கலவரம் போன்ற கலவரம் ஒன்று உருவாகும் . எனவே விகாரையினை அகற்றக் கோருவோருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்யது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக கூறினார்.

அக் கருத்தினை ஆதரித்த பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நீங்கள் அதனை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

கடந்தகாலங்களில் தையிட்டி விகாரை தொடர்பில் பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்த அர்ச்சுனா இராமநாதன், மக்களின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போதனா வைத்தியசாலையில் குழந்தை பெற்று மலசல கூட ஜன்னலால் வீசிய 18 வயது மாணவி!


போதனா வைத்தியசாலையில் குழந்தை பெற்று மலசல கூட ஜன்னலால் வீசிய 18 வயது மாணவி!

குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் சம்பவம் இன்று (23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபற்றி தெரியவருவதாவது, மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்விகற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிறைமாத கற்பணியான இவர், கர்ப்பமான விடயத்தை மறைத்து வயிற்றுவலி என கூறி மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து வயிற்றுவலி என தெரிவித்த இவரை சரியான முறையில் வைத்தியர்கள் சோதனையிடாது, வயிற்று வலிக்கான ஊசி மூலமான வலி நிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணியளில் குறித்த மாணவி மலசலகூடத்திற்கு சென்ற நிலையில், குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசியநிலையில் குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்று குழந்தையை மீட்டுள்ளனர்.

பின்னர் சம்பவம் தொடர்பில் தெரியவந்ததையடுத்து வீசிய குழந்தையை மீட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், தாய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த குழந்தையும் தாயும் பாதுகாப்பாக உள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Saturday, February 22, 2025

துப்பாக்கிதாரியின் வட்சப் உரையாடல் வைரல்..!


துப்பாக்கிதாரியின் வட்சப் உரையாடல் வைரல்..!

 பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில் இருந்து கொலையைத் திட்டமிட்ட கொமாண்டோ சலிந்த என்ற நபரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டதாக பொலிஸார் தற்போது கண்டறிந்துள்ளனர். 

இதன்போது கொமாண்டோ  சலிந்த, "நீ வேலையைச் செய்" என்றார். வெளியே எல்லாம் சரி. பயப்படாதே. சுடு. எல்லாம் சாதகமாகவுள்ளது. "பயப்படாமல் சுடு என குறிப்பிட்டுள்ளார். 

துப்பாக்கிச் சூடு நடத்தியவர், "உள்ளே பிரச்சினை இல்லையே?"​ "நான் உள்ளே இருக்கிறேன்" என்றார். 

"எதுவும் இல்லை, நீ ரெடியாகு சுடுவதற்கு" முடித்தே விடு. எல்லாம் சரியா இருக்கு" என்றார் கெமாண்டோ  சலிந்த . 

துப்பாக்கிச் சூடு நடத்தியவர், "அப்படியானால் பொலிஸார்?" என்று கேட்டார். 

காலை 9.48 மணிக்கு, கெமாண்டோ  சலிந்த , "எல்லாம் சரியாக உள்ளது" நீ வேலையை செய் என்று கூறியுள்ளார். 

பின்னர், காலை 9.54 மணிக்கு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கெமாண்டோ சலிந்தவுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்திருந்தார். 

பின்னர் அவர், "அவன் இறந்துவிட்டானா?" என்று கேட்டார். 

"இறந்துவிட்டான்" என்று கொமாண்டோ  சலிந்தவுக்கு துப்பாக்கிதாரி பதிலளித்தார். 

"அருமை" என்று பதிலளித்த பிறகு, கொமாண்டோ  சலிந்த "நீ என் உயிர்" என்று பதிலளித்தார். 

“ஏன் இப்படி கூறுகிறீர்கள், நீங்கள் தான் எனக்கு உணவளித்து தந்தை போல் கவனீத்தீர்கள். நீங்களே என் உயிர்” என துப்பாக்கிதாரி குறிப்பிட்டார். 

சகோதரி இன்னும் அங்கேயே தான் இருக்கிறாள். "நான் இங்கே இருக்கிறேன்," என்று துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மேலும் தெரிவித்தார். 

கடந்த 19 ஆம் திகதி புதுக்கடை 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தின் கூண்டில் பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

போதைப் பொருள் பாவித்த பின் மாணவிகளும் மாணவர்களும் கட்டிலில்கட்டிப் புரண்டெழும் காட்சிகள்!! பெற்றோரே அவதானம்!! வீடியோ


போதைப் பொருள் பாவித்த பின் மாணவிகளும் மாணவர்களும் கட்டிலில்கட்டிப் புரண்டெழும் காட்சிகள்!! பெற்றோரே அவதானம்!! வீடியோ

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….

நீங்கள் பல ஆசைகளோடும் ; கனவுகளோடும் பிள்ளைகளை பெற்றெடுத்து இருப்பீர்கள் அவர்களின் நடவடிக்கைகளில் கடைசி வரை கண்கானிப்போடு இருப்பதும் உங்கள் கடமை.

தற்போது போதைவஷ்து பாவணைக்கு அடிமையான இளைஞர்களினால் பல யுவதிகளின் வாழ்க்கை சீரழிந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இது சம்மந்தமாக பெற்றோர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்பதற்காக

பாடசாலைக்கு செல்வதாக கூறி நண்பர் ஒருவரின் வீட்டில் போதையில் கூத்தடிக்கும் பாடசாலை மாணவர்களின் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

ஆகவே இது போன்ற வீடியோக்களில் நாளை உங்கள் பிள்ளைகளும் வரக்கூடாது என்றால் மிகவும் அவதானமாக இருங்கள் உங்கள் பிள்ளை செல்வத்தில்.
வீடியோ👉 
click here 

யாழில் ஊதாரியான மனைவிக்கு அதிக கடன்!! விரக்தியில் கணவன் பாலகிருஷ்ணன் துாக்கில் தொங்கி மரணம்!


யாழில் ஊதாரியான மனைவிக்கு அதிக கடன்!! விரக்தியில் கணவன் பாலகிருஷ்ணன் துாக்கில் தொங்கி மரணம்!

இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த ம.பாலகிருஷ்ணன் (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். இதனை அவதானித்த அவரது உறவினர்கள் இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரினால் அவரது சடலமானது மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மனைவி அதிக கடன் பெற்றதன் காரணமாகவே குறித்த நபர் மனவிரக்தியில் உயிர்மாய்த்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

பொலிஸ் இன்ஃபோமரை கடற்கரையில் முழங்காலிடச் செய்து சுட்டுக் கொன்ற கும்பல்!


பொலிஸ் இன்ஃபோமரை கடற்கரையில் முழங்காலிடச் செய்து சுட்டுக் கொன்ற கும்பல்!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார் என்ற காரணத்துக்காக, இளைஞர் ஒருவரை கடற்கரைக்கு அழைத்துச் சென்று, கடற்கரை மணலில் முழங்காலிடச் செய்து, அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திக் கொலை செய்த சம்பவமொன்று, ஜா-எல – பமுனுகம, மோர்கன்வத்த பிரதேசத்தில் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம், பொதுமக்களின் அறிவிப்பின் பேரில். பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்துள்ள அவ்விளைஞன், 29 வயதுடையவர் என்றும் தங்களுக்கு போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் வழங்கியவர் என்றும், பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

T-56 ரக துப்பாக்கியினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறிருக்க, குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் கோஷ்டிக் குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படும் என்று, இன்று முற்பகல் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

1997 என்ற இலக்கம் ஊடாக இதுபோன்ற தகவல்களை வழங்க முடியும் என்றும் டி-56 ரக துப்பாக்கி குறித்த தகவல்களை வழங்கினால் 10 இலட்சம் ரூபாய் வரை பணப் பரிசில் வழங்கப்படும் எனவும் கூறிய பதில் பொலிஸ் மா அதிபர், தகவல் வழங்குபவர்களின் இரகசியம் பேணப்படும் என்றும் கூறியமை குறிப்பிடத்தக்கது.

யாழ் சென்று இந்த யுவதியிடம் மயங்கி பணத்தை பறி கொடுத்த புலம்பெயர் தமிழர்களின் கவனத்திற்கு!!


யாழ் சென்று இந்த யுவதியிடம் மயங்கி பணத்தை பறி கொடுத்த புலம்பெயர் தமிழர்களின் கவனத்திற்கு!!

போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து , வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்த பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மோசடியாக பெற்றிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி , கல்வியங்காடு , கோப்பாய் , கொக்குவில் உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நபர்களின் வீடுகளை இலக்கு வைத்து சென்ற குறித்த பெண், தான் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என போலியான மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு வேகோ மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் , தனக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள பண உதவி தேவை என கூறி 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடியாக பெற்று சென்றுள்ளார்.

பணத்தினை கொடுத்த வெளிநாட்டவர் , அது தொடர்பில் தனது உறவினர்களுக்கு தெரிவித்த போதே , குறித்த பெண் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த வேறு நபர்களிடமும் பணத்தினை வாங்கியுள்ளமையை உறவினர்கள் கூறியுள்ளனர்.

அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயம் வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு தெரியவந்ததை அடுத்து , பொலிஸாருக்கு பெண்ணின் மோட்டார் சைக்கிள் இலக்கம் , பெண் தொடர்பான அடையாளங்களை தெரிவித்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்

அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Friday, February 21, 2025

நேற்று இரவு கொழும்பில் தமிழன் சசியை சுட்டுக் கொன்றவர்களை சுட்டுக் கொன்றது பொலீஸ்! என்கவுன்டர் ஆரம்பமா?


நேற்று இரவு கொழும்பில் தமிழன் சசியை சுட்டுக் கொன்றவர்களை சுட்டுக் கொன்றது பொலீஸ்! என்கவுன்டர் ஆரம்பமா?

என்னடா கதை அளக்குறாங்கள்…. சசிக்குமாரை சுட்டவங்களை பிடித்து கம்பியால பின்பக்கம் கட்டிக் கொண்டு போறாங்கள்.. பிறகு பொலிஸாரை சுட்டுக் கொல்ல முயன்றார்கள் என கூறி அவங்களை போட்டுத் தள்ளிட்டாங்கள். பிடிச்சு விசாரிச்சிருந்தால் எதற்காக சுட்டான்? யாருக்காக சுட்டான்? என்ற விபரங்கள் எல்லாம் வெளி வந்து பெரும் பிரச்சனையை கொண்டு வந்துடுவாங்கள் என்ற நோக்கத்தில்தான் பொலிஸ் சுட்டுக் கொன்றார்களா?

செய்தி

கொட்டாஞ்சேனை நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (21) இரவு, பொலிஸாருக்குச் சொந்தமான துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, ​​மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தைக் காட்ட அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​அவரைச் சுட முயன்றபோது, ​​அவரைத் தடுத்து நிறுத்தினார்.

சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்தார். சம்பவம் தொடர்பான உண்மைகளை தெளிவுபடுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க, “நேற்று (21) இரவு 9 மணியளவில், கொட்டாஞ்சேனை வீதியில் உள்ள ஒரு மொபைல் போன் கடைக்குள் 38 வயதுடைய சசி குமார் என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.”

“மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.” “துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இறந்தார்.” “மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும்போது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளையும் பொலிசார் துரத்திச் சென்று கைது செய்தனர்.”

மோட்டார் சைக்கிள் மற்றும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் காவல்துறையினரின் காவலில் எடுக்கப்பட்டது.” “நேற்று இரவு சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த மேலும் சில ஆயுதங்கள் குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சந்தேக நபர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.”

“அங்கு சந்தேக நபர்கள் காவல்துறை அதிகாரிகளின் துப்பாக்கிகளைப் பறித்து, காவல்துறை அதிகாரிகளை சுட முயன்றனர்.” “காவல்துறையினரால் உயிர் காக்கும் வகையில் சுடப்பட்ட பின்னர், இரண்டு சந்தேக நபர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.”

“இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்தார். அவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.”

நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டின் பின் காதலனுடன் இந்தியா தப்பிக்க திட்டம்: துப்பாக்கிதாரியின் ‘தங்கத்’தையும் தூக்கியது பொலிஸ்!


நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டின் பின் காதலனுடன் இந்தியா தப்பிக்க திட்டம்: துப்பாக்கிதாரியின் ‘தங்கத்’தையும் தூக்கியது பொலிஸ்!

அண்மையில் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொன்ற  சூடு நடத்தியவரின் காதலி நேற்று (21) மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹரகம, பமுனுவவில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் இந்தப் பெண், முக்கிய சந்தேக நபரான மஹரகம, தம்பஹேன வீதியில் வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதியான சமிந்து தில்ஷான் பியுமாங்க கண்டனாராச்சியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸாரின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

கொலைத் திட்டம் குறித்து காதலிக்குத் தெரியும் என்றும், கொலைக்குப் பிறகு தனது காதலனுடன் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாராக இருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சமிந்து தில்ஷான் கொலையைச் செய்துவிட்டு தப்பிச் செல்லும்போது, ​​அவர் காதலியை அழைத்து புத்தளத்தில் படகில் ஏற்றிச் செல்ல திட்டமிட்டிருந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அவரது காதலியும் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு, அதற்காக நீர்கொழும்புக்குச் செல்லத் தயாராகி வந்தனர், அங்கிருந்து தப்பிச் செல்லும் இடத்திற்கு தனியாக பயணிக்கத் தயாராகியிருந்தனர். அந்தப் பெண்ணை நீர்கொழும்புக்கு அழைத்துச் செல்ல வந்த ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொலைத் திட்டம் குறித்து அவருக்கும் தெரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, மேலும் விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநர், துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய காவல்துறை உத்தியோகத்தர்  கைது செய்யப்பட்டுள்ளனர். செவ்வந்தி என்ற பெண் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விசாரணையில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்தக் கொலையில் தொடர்புடைய மற்றவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு-கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு - தமிழர் ஒருவர் படுகொலை | Gun Shoot Kotehenna Today


கொழும்பு-கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு - தமிழர் ஒருவர் படுகொலை

கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான சசிகுமார் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

 T-56 துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான துப்பாக்கிதாரி  உந்துருளியில் தப்பிச்சென்ற வேளை ஒருகொடவத்தையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல் தோட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

நீதிமன்றக் கொலையாளியும் உதவிய செவ்வந்தியும் அந்தரங்கமாக எடுத்த புகைப்படங்கள் வெளியாகின!!


நீதிமன்றக் கொலையாளியும் உதவிய செவ்வந்தியும் அந்தரங்கமாக எடுத்த புகைப்படங்கள் வெளியாகின!!

கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்ய வந்த துப்பாக்கிதாரியும், அவருக்கு துப்பாக்கியை கொண்டு வந்து கொடுத்து உதவிய பெண்ணும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் கையடக்கத் தொலைபேசியில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் படங்கள் நீக்கப்பட்டிருந்த போதும், பொலிஸ் விசாரணை அதிகாரிகள் அவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, விசாரணை அதிகாரிகள் மற்றொரு துப்பாக்கியின் புகைப்படங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளின் கைப்பேசியை சோதனை செய்தபோது, ​​தற்போது தலைமறைவாகியுள்ள பெண் சந்தேகநபருக்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்ட தொலைபேசி எண்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மேலும் சோதனையிட்ட போது கைப்பேசியின் கேலரியில் இருந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டிருந்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவவைச் சுட துப்பாக்கிதாரி பயன்படுத்திய ரிவொல்வர் துப்பாக்கியின் புகைப்படங்களும், மற்றொரு கைத்துப்பாக்கியின் புகைப்படங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், காணாமல் போன சந்தேக நபரான பெண் சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு புகைப்படங்களை அனுப்பியது தெரியவந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சந்தேக நபரான பெண் தொடர்பில் மேற்கொள்ள்பட்ட விசாரணைகளின் போது, ​​குறித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த நீர்கொழும்பு பொலிஸில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள், தொடர்பான தகவல்கள் கிடைத்ததை அடுத்து, கொழும்பு குற்றப்பிரிவின் சிறப்பு பொலிஸ் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 19 ஆம் திகதி, கொழும்பு புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, சட்டத்தரணி வேடமணிந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் சந்தேக நபர் துப்பாக்கியை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றார்.

இந்த சம்பவம் குறித்து வாழைத்தோட்டம் பொலிஸார் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்து முதற்கட்ட விசாரணைகளைத் ஆரம்பித்த நிலையில், பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்படும் என நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட மேலதிக அறிக்கையின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர், மஹரகமவில் உள்ள தம்பஹேன பகுதியைச் சேர்ந்த சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனராச்சி என்ற முன்னாள் இராணுவக் கமாண்டோ வீரர், 8 மணி நேரத்திற்குப் பிறகு அதே நாளில் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் புத்தளத்தின் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், துப்பாக்கிதாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீர்க்கொழும்பு, கட்டுவெல்லேகம வீதியைச் சேர்ந்த பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி வீரசிங்க என்ற பெண் இந்த குற்றத்திற்காக துப்பாக்கியை கொண்டு வந்ததாக தெரியவந்தது. அதேபோல், தற்போது தலைமறைவாகியுள்ள பெண் சந்தேகநபரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் முழு மேற்பார்வையின் கீழ் கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது

Thursday, February 20, 2025

செம்மணியில் பாரிய மனிதப் புதைகுழி? 2 அடி ஆழத்தில் எலும்புக் கூடுகள்!!


செம்மணியில் பாரிய மனிதப் புதைகுழி? 2 அடி ஆழத்தில் எலும்புக் கூடுகள்!!

யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் யாழ்ப்பாண நீதிவானும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியும் இன்று பார்வையிட்டனர்.அரியாலை, சித்துபாத்தி இந்து மயான பகுதியில் மின் தகன மேடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, இந்த மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

இதை தொடர்ந்து யாழ்ப்பாண நீதிவான் ஏ.ஆனந்தராஜா, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர்.இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக, அந்த பகுதியில் அகழ்வுப் பணிக்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகுமென அறிய முடிகிறது.

மனிதப்புதைகுழி?

சித்துபாத்தி இந்து மயானத்தின் முன்னைய எல்லைக்கு வெளியே உள்ள பகுதியிலேயே தற்போது இந்த மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மயானத்திற்கு பின்பக்கமாக உள்ள காணி அண்மையிலேயே தமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகவும், அதிலேயே தற்போது மின்தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், மயான நிர்வாகத்தினர் குறிப்பிடுகிறார்கள்.இதுவரை மயானம் இருந்த எல்லைக்கு வெளியில், எந்த மனித எச்சங்களும் எரிக்கவோ, புதைக்கவோபடவில்லையென்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த பின்னணியில், மீட்கப்படும் மனித எச்சங்கள், மற்றொரு மனிதப்புதைகுழியின் தோற்றுவாயா என்ற அச்சம் எழுந்துள்ளது.இதற்கு காரணங்கள் சில உள்ளன.

முதலாவது- செம்மணி ஏற்கெனவே மனிதப்புதைகுழிக்காக அறியப்பட்ட பகுதி. கிருசாந்தி உள்ளிட்ட பலர் அங்கு கொன்று புதைக்கப்பட்டிருந்தனர். செம்மணியில் அமைந்திருந்த இராணுவ முகாமிற்கு நெருக்கமான பகுதியிலேயே தற்போதும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.இரண்டாவது- தற்போது மீட்கப்படும் எலும்புக்கூடுகள் நில மட்டத்திலிருந்து இரண்டடி ஆழத்திலேயே மீட்கப்பட்டுள்ளன. மயானத்தில் அடக்கம் செய்யப்படும் சடலங்கள் இரண்டடி ஆழத்தில் அடக்கம் செய்யப்படுவதில்லை. எலும்புக்கூடுகள் நிலமட்டத்திலிருந்து இரண்டடி ஆழத்தில் மீட்கப்பட்டது, இந்த எலும்புக்கூடுகள் சமயச்சடங்குகளின் பின்னர் முறைப்படி அடக்கம் செய்யப்பட்ட உடல்கள் அல்ல என்ற வலுவான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.அந்த சடலங்கள் அசாதாரண சூழலுடன தொடர்புபட்டவை என்பது ஊகிக்க முடிகிறது. அது என்ன அசாதாரண சூழல்… மனிதப்புதைகுழியா.. அல்லது போரில் உயிரிழந்த ஒரு தரப்பினதா என்ற பல கேள்விகள் உள்ளன.முறையான விசாரணைகளின் பின்னரே இது பற்றிய இறுதி முடிவுக்கு வர முடியும்.

செவ்வந்தி செல்லம் எங்கே போனாள்??…. வலை வீசித் தேடும் பொலிசார்!!


செவ்வந்தி செல்லம் எங்கே போனாள்??…. வலை வீசித் தேடும் பொலிசார்!!

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பணிப்பாளர், கொழும்பு குற்றவியல் பிரிவு – 071-8591727

பொறுப்பதிகாரி, கொழும்பு குற்றவியல் பிரிவு – 071-8591735
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job