நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, February 25, 2025

இராணுவத்தின் பல ஆயுதங்கள் மாயம்! அச்சத்தில் அநுர அரசு!


இராணுவத்தின் பல ஆயுதங்கள் மாயம்! அச்சத்தில் அநுர அரசு!

இலங்கையில் (Sri lanka) ஆயுதக்குழுக்கள் ஆயுதங்களுடன் இயங்குவார்களாக இருந்தால் அவர்கள் இலகுவாக அரசுக்கெதிராக திசைத்திருப்பப்படுவார்கள் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு இருப்பதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தென்னிலங்கையை பொறுத்தவரை துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் வழமையாகிவிட்டன. அதில் பெருமளவில் இராணுவத்தினர் ஈடுபடுவதாக சந்தேகமுள்ளது.

மின்னேரியா இராணுவமுகாமில் இருந்து விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறிய ஆயுதங்களில் 84 T56 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளன.

அதேயளவு இராணுவத்தினருடைய துப்பாக்கிகளும் காணாமல் போயுள்ளதாகவும் அவை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையிலே அரசாங்கம் T56 துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை பற்றிய விாரங்களை தெரிவித்தால் சன்மானம் தருவதாக அறிவித்துள்ளது” என்றார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...  

0 comments:

Post a Comment