நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, February 9, 2025

நாடு முழுவதும் மின் தடைக்கு குரங்குப் பிள்ளைதான் காரணமா? அமைச்சர் கூறுவது என்ன?


நாடு முழுவதும் மின் தடைக்கு குரங்குப் பிள்ளைதான் காரணமா? அமைச்சர் கூறுவது என்ன?

பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு மோதியதால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.

இச்சம்பவம் நாடு முழுவதும் மின் விநியோகத்தில் பெரும் தடங்கலை ஏற்படுத்தியதாகவும், இதனால் நாடு முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

இருப்பினும், மின் மற்றும் எரிசக்தி அமைச்சு பின்னர் இந்த நிலைமையை “பாணந்துறை துணை மின்நிலையத்தில் அவசரநிலை” என்று விவரித்தது, மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, விரைவில் மின்சாரத்தை மீண்டும் கொண்டு வர குழுக்கள் பணியாற்றி வருகின்றன.

இலங்கை மின்சார சபை (CEB) இந்த மின் தடைக்கான அதிகாரப்பூர்வ விளக்கத்தை இன்னும் வெளியிடவில்லை.

இதே வேளை

இன்று (9) மாலை 4 மணி வரை, கூரையில் சூரிய மின்கல சக்தி பயன்படுத்துபவர்கள் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் இணைப்புகளை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனுடன், இலங்கை தேசிய நீர்வடிகாலமைப்பு சபை (NWRDB) பொதுமக்களிடம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டு, மின்சார விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பும் வரை இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடு முழுவதும் மின்விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், மின்சார சபை ஊழியர்கள் மீண்டும் வழமையான நிலைக்கு மின் விநியோகவை கொண்டுவர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment