இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அர்ச்சுனா இராமநாதனை தவிர யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சமூகம் அளிக்காததன் காரணம் என்ன? எனத் தெரியவில்லை என அங்கிரு்க்கும் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இதே வேளை
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு காராட்டி தெரியும். அவரை பற்றி ஊடகங்களில் கதைத்து, அவரை மேலும் சிக்கலுக்குள் தள்ளாதீர்கள் என ஊடகவியலாளர்களிடம் கடற்தொழில் அமைச்சர் இ, சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெறுகின்றது.
அருச்சுனாவின் எதிரிகள் தமது சமூகவலைத்தளங்களில் அர்ச்சுனா தங்கத்துடன் காதலர் தினம் கொண்டாட போய்விட்டார் என வன்மமான கரு்ததுக்களைத் தெரிவித்து வருகின்றார்கள்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அருச்சுனா பங்கேற்காது விட்டது “சப்” என இருப்பதாக கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் ஊடகவியலாளர்களிடம் நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்கள்.
0 comments:
Post a Comment