தையிட்டி விகாரையை அகற்றக் கோருவோருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இன்றை தினம்( 22)பாராளுமன்றத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆலோசனைக்குழு கூட்டம் இடம்பெற்றபோதே இதனை தெரிவித்தார்.
அர்ச்சுனா இராமநாதன் அங்கு மேலும் கூறிய போது..
தையிட்டி விகாரையை அகற்றக் கோருவதன் ஊடாக நாட்டில் இன்னும் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் முயல்வதாக நாடாளுமன்றஉறுப்பினர் அர்ச்சுனாஇராமநாதன் குற்றம்சாட்டினார்.
விகாரையினை அகற்றுவதன் ஊடாக 83ஆம் ஆண்டு இனக்கலவரம் போன்ற கலவரம் ஒன்று உருவாகும் . எனவே விகாரையினை அகற்றக் கோருவோருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்யது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக கூறினார்.
அக் கருத்தினை ஆதரித்த பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நீங்கள் அதனை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
கடந்தகாலங்களில் தையிட்டி விகாரை தொடர்பில் பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்த அர்ச்சுனா இராமநாதன், மக்களின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment