இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்துள்ளது.
ஞானசார தேரர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றத்திற்காக ஜனவரி 9ம் திகதி நீதிமன்றம் ஞானசார தேரருக்கு ஒன்பது மாதசிறைத்தண்டனையை வழங்கியிருந்தது.
0 comments:
Post a Comment