கிளிநொச்சியில் 16 வயது மாணவர்கள் 6 பேர் போதைப் பொருள் பாவித்து மாணவிகளுடன் லீலை!! அதிபர் செய்தது என்ன?
கிளிநொச்சியில் உள்ள பிரபல தேசி்ய பாடசாலையில் 16 வயதான மாணவர்கள் 6 பேர் போதைப் பொருள் பாவித்த நிலையில் பாடசாலைக்கு வந்து மாணவிகளுடன் பா லி யல் சேட்டை புரிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து பாசடாலை அதிபர் பொலிசாருக்கு முறையிட்டு குறித்த மாணவர்களை பொலிசார் கைது செய்து பொலி்ஸ் நிலையம் கொண்டு சென்றதாகவும் அதன் பின்னர் மாணவர்களுக்கு போதைப் பொருள் வழங்கிய நபர் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இதே வேளை கைது செய்யப்பட்ட குறித்த மாணவர்களை அதிபர் பொலிசாருடன் கதைத்து விடுவித்துவிட்டதாகவும் பாடசாலைத் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பாக அதிபர் கல்வி மேலதிகாரிகளுக்கு தெரிவிக்காது மறைத்துள்ளதாகவும் போதையுடன் இருந்த மாணவர்களை பொலிசாருடன் தொடர்பு கொண்டு அதிபர் தனது விருப்பப்படி எவ்வாறு விடுவிக்கலாம் என்று குறித்த மாணவர்களால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் மாணவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் எனவும் அம் மாணவர்கள் தொடர்ச்சியாக குறித்த பாடசாலையில் கடும் சிக்கல்களை ஏற்படுத்தி வருபவர்கள் எனவும் பாடசாலை வட்டாரங்கள் மூலமாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment