கொடிகாமம் பகுதியில் மணற்கொள்ளையர்களின் உழவுயந்திரம் மோதி பெண் பலி..!
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் வீதி வாகையடிச் சந்தியை அண்மித்து 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மோட்டார்சைக்கிளில் தனது மகனை ஏற்றிச் சென்ற 44வயதான பெண்ணை சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற உழவியந்திரம் மோதி விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதேநேரம் அவருடைய 15வயதான மகன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment