விடிந்ததும் அதி பயங்கரம்.. மொட்டை மாடியில் தலை இல்லாமல் 2 உடல்கள்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைக்கோட்டாளம் கிராமத்தில் நடந்த பயங்கரமான இரட்டை படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூர சம்பவத்தில், கிராமத்தைச் சேர்ந்த குளஞ்சியின் மனைவி லட்சுமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு ஆகிய இருவரும் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் காவல் நிலைய காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். குளஞ்சியின் வீட்டு மொட்டை மாடியில் லட்சுமி மற்றும் தங்கராசு ஆகியோரின் உடல்கள் தலை இல்லாமல் கிடந்தது கண்டறியப்பட்டது.
தலை துண்டிக்கப்பட்ட இந்தக் கொலைச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், லட்சுமிக்கும் தங்கராசுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்திருக்கலாம் எனவும், இதனை அறிந்த குளஞ்சி ஆத்திரத்தில் இருவரையும் தலை துண்டித்து படுகொலை செய்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும், கொலை செய்யப்பட்டவர்களின் தலைகள் எங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட குளஞ்சி தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கொடூரமான இரட்டை படுகொலை சம்பவம் மலைக்கோட்டாளம் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக மேலும் விவரங்களை ஆராய்ந்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment