நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, September 19, 2025

கிளிநொச்சியில் பஸ்சிலிருந்து வீழ்ந்து இளைஞன் மரணம்!!பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.


 கிளிநொச்சியில் பஸ்சிலிருந்து வீழ்ந்து இளைஞன் மரணம்!!பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் திசை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்தே நேற்று (18) இரவு இவ்வாறு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதுடன், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment