சமூகவலைத்தளத்தில் வந்த பதிவை அப்படியே தந்துள்ளோம்….
நேற்றையதினம் சங்குப்பிட்டி விபத்தில் நான் சந்தித்த சிந்திக்கப்பட வேண்டியவர்கள்
1. ராங் உயரமான மோட்டார் சைக்கிள் ராங்கில் ஆறு வயது பிள்ளையை ஏற்றி நால்வராக பைக் ஓடியவர்கள்.
2. அந்த சிறு பிள்ளைக்கு கெல்மட்டை அணிவிக்காமல் பயணித்தவர்கள். குழந்தையின் சிறு கெல்மட் நால்வர் பயணித்தமையால் பின்னிருந்த ஒருவர் போட்டிருந்தார் ஆபத்தை சிந்திக்காமல் பொலிசார் பிடித்தாலும் என சிந்தித்த அந்த மனம்.
3. எதிரே வந்த நான் இவர்கள் விழுந்திருந்தமையை கண்டு குழந்தையை தூக்கி தலையில் இருந்து வந்த இரத்தத்தை பொத்திய படி தூக்கி வைத்து வந்த வாகனங்களை பிள்ளையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல கேட்ட போது யாரும் வரவில்லை. டிப்பர் சாரதிகள் கார் ஆட்டோ மோட்டார் சைக்கிள் அனைத்தும் நிறுத்தி விட்டு சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.
அண்ணே யாரும் வாங்கோ பிள்ளையை முதலில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவம் உங்கட வாகனத்தில் ஏற்றாவிட்டாலும் பறவாயில்லை எனது மோட்டார் சைக்கிளை எடுங்கள் என்று கேட்க ஒரு டிப்பர் சாரதி கூறிய பதில் காதில் இப்பவும் கேட்கிறது நான் டிப்பரில் வந்தனான் என்றார். ஏன் அண்ணா டிப்பரை யாரும் பொக்கற்றில் வைத்து களவா எடுக்க போகிறார்கள் ??
4. ஒருவர் சொன்னார் இதால ஏதும் பிரச்சினை வரும் என்றார் ஒரு குழந்தையின் உயிரை விட என்ன பிரச்சினையை சந்திக்க போகிறீர்கள்? பிள்ளை என்னுடைய கையில் உள்ளது வாற பிரச்சினைக்கு நான் பொறுப்பெடுக்கிறேன் என்று கூறியும் வரவில்லை.
5. இறுதியில் இவ்வளவு கெஞ்சிய வாதிட்டு நேரம் கடந்த பின்னர் இறுதியாக அவ்விடத்தில் வந்த ஒரு இளைஞன் எனது மோட்டார் சைக்கிளை ஸ்ராட் பண்ணிய வேளை
6. செய்வதறியாது குழந்தையை கையில் வைத்திருந்த எனக்கு சத்தியமூர்த்தி டாக்டர் வாகனத்தால் இறங்கி வருவதை கண்டு இறைவனை கண்ட மனநிலையுடன் இந்தாங்கோ டாக்டர் என கொடுத்தேன். கார் டிக்கியில் வைத்து அவரும் முதலுதவி கொடுத்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.
எனினும் தலை பிடரி குருதியோட்டம் அவ்விடத்தில் யாரும் உடனடியாக பிள்ளையை வைத்தியசாலை கொண்டு செல்ல வராமையால் நேரம் கடந்தமையால் என்னவோ வைத்தியசாலை சிகிச்சை பலனளிக்கவில்லை.
7. பிணந்திண்ணி கழுகுகள் கூட சிறு குழந்தை உயிருக்கு போராடினால் இரக்கம் கொள்ளும் என எண்ணுகிறேன். ஆனால் நேற்றயதினம் அதைவிடவும் சுயநலமானவர்களை கண்டேன்.
இந்திய சினிமா பட காட்சிகளில் தான் விபத்தில் யாரையும் காப்பாற்றினால் பிரச்சினை என காட்டுவதுண்டு அவற்றை பார்த்து விட்டு மனதில் பதிய வைத்துள்ளனர் போலும் யாரும் உயிருக்கு போராடினால் தொட்டால் பிரச்சினை வந்துவிடும் என்று.
ஒரு விபத்திலோ அல்லது வேறு சந்தர்ப்பங்களிலோ ஒரு உயிரை காப்பாற்றினால் எந்த விதமான சட்டநடவடிக்கைகளும் காப்பாற்றியவருக்கு எதிராக வராது என்பதை புரிந்து கொள்ளுங்கள். துரதிஸ்ட வசமாக காப்பாற்றி கொண்டு செல்லும் போது உயிரிழந்தால் கூட அதனை விசாரணையின் போது விபரிக்க முடியும். ஆனால் ஒருவர் உயிருக்கு போராடும் போது இதனால் எமக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடுமோ என்று எண்ணாதீர்கள். இதே மன நிலை அனைவரிடமும் வளருமாகவிருந்தால் நாளை நமக்கு ஒரு விபத்து என்றால் கூட யாரும் தூக்கி வைத்தியசாலை கொண்டு செல்லாமல் சுற்றி நின்று போட்டோ வீடியோ எடுப்பார்கள் என்பதை உணருங்கள்.
8. கீழை உள்ள மோட்டார் சைக்கிள் குழந்தையை ராங்கில் ஏற்றி குழந்தையுடன் நால்வராக பயணித்த மோட்டார் சைக்கிள். இந்த உயரமான வடிவமைப்பை கொண்ட ராங்கில்,
ஒரு சிறுபிள்ளை இருக்க ஏதுவாக இல்லாத ராங்கில் அந்த பிள்ளை கெல்மட் அற்ற நிலையில் ஏற்றி பயணம் செய்யப்பட்டாள். தலை பிடரியில் வீதியோர கருங்கல் முட்டியே பிடரியால் இரத்தம் வந்தது. நான் தூக்கும் போது வானத்தை பார்த்து கருங்கல்லில் பிடரி அடிபட்டு பிடரியால் இரத்தம் வந்த படி இருந்தாள். கெல்மட் அணிந்திருந்தால் பிடரியில் அடிபட்டிருக்க மாட்டாது. அவள் உயிருடன் இருந்திருப்பாள்.
0 comments:
Post a Comment