நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, September 21, 2025

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் இன்று | Jaffna Vallipuram Alvar Temple Annual Festival


 யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் இன்று

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின்  2025 ஆம் ஆண்டுக்கான பெருந்திருவிழா இன்று (21) கொடியேற்றதுடன் ஆரம்பமானது.

வருடாந்த பெருந்திருவிழாவானது ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலமையிலான குருமார் திருவிழா கிரியைகளை மேற்கொண்டதுடன் சுப வேளையில் 9.00 மணிக்கு கொடியேற்றும் இடம்பெற்று சிறப்பு பூஜைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

இன்று ஆரம்பமான வருடாந்த பெருந்திருவிழா தொடர்ந்து 17 தினங்கள் நடைபெற உள்ளது.

விசேட திருவிழாக்கள் 

இந்தநிலையில், எதிர்வரும் முதலாம் திகதி பாம்பு திருவிழாவும், இரண்டாம் திகதி கம்சன்போர் திருவிழாவும், மூன்றாம் திகதி வேட்டைத் திருவிழாவும், நான்காம் திகதி சப்பறத் திருவிழாவும், 5ஆம் திகதி தேர்த் திருவிழாவும், ஆறாம் திகதி சமுத்திர தீர்த்த திருவிழாவும், ஏழாம் திகதி  கேணித் தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று மாலை கொடி இறக்கமும் இடம்பெறும்.

திருவிழாவிற்கான சுகாதார வசதிகளையும் ஏனைய பணிகளையும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் பருத்தித்துறை பிரதேச சபையும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் வழங்குகின்றது.

பருத்தித்துறை காவல் நிலையம் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment