யாழ் போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு இளம் தாய் டர்சிகா சத்திரசிகிச்சையின் போது பலி!! மருத்துவக் கொலையா?
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாயொருவர் நேற்றைய தினம் (25) உயிரிழந்துள்ளார். டச்சுவீதி, உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த நிருன் டர்சிகா (வயது 29) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு வயிற்றுக்குத்து காரணமாக கடந்த 19.05.2025 அன்று வயிற்றில் சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவருக்கு வயிற்றில் ஒரு குழாய் வைக்கப்பட்டது.
அந்த குழாயினை அகற்றுவதற்காக கடந்த 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சத்திர சிகிச்சை நிறைவில் குறித்த பெண் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டனர். இரத்த நாளங்களுக்குள் இரத்த கசிவு ஏற்பட்டு, இரத்தப் போக்கினால் மரணம் ஏற்பட்டதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment