நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, September 7, 2025

இத்தாலியிலிருந்த வந்த தனபாலசுந்தரம் யாழில் பற்றைக்குள் சடலமாக மீட்பு!!

 


இத்தாலியிலிருந்த வந்த தனபாலசுந்தரம் யாழில் பற்றைக்குள் சடலமாக மீட்பு!!

யாழில் நடை உடற்பயிற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர் பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இத்தாலியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடை உடற்பயிற்சிக்கு சென்றவேளை காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (05) கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள பற்றைக்குள் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இடம் தெரியாமல் அந்தப் பகுதிக்கு சென்றவேளை குருதியமுக்கம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

0 comments:

Post a Comment