யாழ் வடமராட்சியைச் சேர்ந்த வனிதா பலியாகியது ஏன்? ஒருவர் கைது!! நடந்தது என்ன?
யாழ்ப்பாணம் வடமராட்சிகிழக்கு வத்திராயன் வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு விசுவமடு கண்ணகிநகர் வீதி 12ம் கட்டையை தற்காலிக முகவரியாக கொண்ட மோகனபவன் வனிதா என்னும் இளம் குடும்ப பெண் இந்த வாரத்தின் முற்பகுதியில் வீதி விபத்தில் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் மரணமாகியுள்ளார்.
கடந்த 09.09.2025 அன்றைய தினம் உறவினருடன் உந்துருளியில் வைத்தியசாலைக்கு சென்ற பொழுது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உந்துருளியில் இருந்து தவறி விழுந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த பெண் நேற்றையதினம் (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் மோகனபவன் வனிதா எனும் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் ஆவார். இவர் பல மேடைகளில் நடனமாடி பாராட்டுப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய உந்துருளியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment