Tuesday, November 5, 2024
புகையிரத விபத்தில் பலியான இளம் யுவதி !
காலி, மினுவாங்கொட பிரதேசத்தில் தொடருந்தில் மோதுண்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
காலி, மடபதல, இரண்டாவது வீதியில் வசித்து வந்த பாக்யா சுபாஷினி ரத்நாயக்க என்ற 23 வயதுடைய யுவதியே நேற்று உயிரிழந்துள்ளார்.
கடந்த (01) திகதி காலை எட்டு மணியளவில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார். இதன்போது பாதையை கடக்க முயற்சித்த போது தொலைபேசியை பார்த்துக்கொண்டிருந்ததாக தொடருந்து சாரதி தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வயிற்றில் காயங்கள் இருந்தன. அவள் மிகவும் வேதனைப்பட்டு என்னிடம் பேசினாள். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இயந்திரங்கள் சத்தமாக ஒலித்தன. இன்று காலை குழந்தைக்கு போதி பூஜை செய்ய கோவிலுக்கு சென்றபோது, அவள் இறந்துவிட்டதாக கேள்விப்பட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் கணவன், மனைவியையும் கொடூரமாகக் கொன்று கனடா செல்ல முயன்றவருக்கு நீதிபதி இளஞ்செழியன் வைத்த செக்
வவுனியாவில் கணவன், மனைவியையும் கொடூரமாகக் கொன்று கனடா செல்ல முயன்றவருக்கு நீதிபதி இளஞ்செழியன் வைத்த செக்
வவுனியாவில் பிறந்தநாள் விழாவில் மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இரகசியமாக கனடாவுக்குத் தப்பிச் செல்லத் தயாராகி வருவதாக வவுனியா மேல் நீதிமன்றத்துக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, அவரைக் கைது செய்து பிணையின்றி மூன்று மாதங்கள் சிறையில் அடைக்க வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் நேற்று முன்தினம் (3) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், வவுனியா, தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இளம் தம்பதியரை தாக்கி கொலை செய்ததாக ஆறு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்து. தற்போது, இந்த சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு எதிரான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதேவேளை, பிரதிவாதிகளில் ஒருவர் கனடா செல்வதற்கான ஆவணங்களை இரகசியமாக தயாரித்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து, வவுனியா மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், அது தொடர்பான ஆதாரங்களை மேல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
அந்த தகவலை கருத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவையடுத்து, சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், மேல் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து, 3 மாதங்கள் பிணையின்றி விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
திருகோணமலையில் பயங்கரம்!! தன்வந்திரி கொஸ்பிட்டல் முதலாளியான டொக்டரின் மனைவி சுமத்திரா படுகொலை!! மச்சானுடன் கள்ளக் காதலா?
திருகோணமலையில் பயங்கரம்!! தன்வந்திரி கொஸ்பிட்டல் முதலாளியான டொக்டரின் மனைவி சுமத்திரா படுகொலை!! மச்சானுடன் கள்ளக் காதலா?
திருகோணமலை தன்வந்திரி தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர் மருத்துவ நிபுணர் கனேகபாகுவின் மனைவி திருமதி ஏஞ்சலின் சுமித்ரா (வயது 64) இன்று காலை வைத்தியசாலையில் வைத்துக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ்த்தில் மரணமடைந்தவரின் சகோதரியின் கணவரான சுதர்சன் (வயது 59) என்பவரே இவரைக் கொலை செய்துள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இன்று காலை கொலையுண்டவர் கொழும்பில் இருந்து வீடு திரும்பி அறைக்குள் சென்றபோதே கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சடலம் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.
மேலும்கொலை தொடர்பில் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Sunday, November 3, 2024
சுமந்திரனுக்கு எதிராக சால்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்பாணத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ்நிர்மலதான் மன்னார் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக இன்றைய தினம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்
இன்றையதினம் ஞாயிற்றுகிழமை மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
தான் மதுபான சாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புகொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் அவர்கள் கூறியிருந்தார்.
இந்த கருத்தை அவர் கூறிய சமயம் நான் இந்தியாவில் இருந்தமையினால் இன்று நான் மன்னார் வந்தவுடன் உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிட்டமை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.
புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை கோரிய போது அவர்களின் தேவைகளின் நிமித்தம் நான் அந்த சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தேன் அவ்வாறு சந்தித்தவர்களில் தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக யாரும் அந்த வாய்ப்பை பயன்பத்தி மதுபான சாலைகளை அமைப்பதற்கான அனுமதியை பெற்றிருந்தால் நான் அதற்கு பொறுபாக முடியாது.
என்பதை நான் அன்மையில் ஒரு ஊடகவியளாலரின் கேள்விக்கு பதிலாக வழங்கியிருந்தேன் ஆனாலும் சுமந்திரன் அவர்கள் உண்மைக்கு புறம்பாக நான் எழுத்து மூல சிபாரிசு வழங்கியதாகவும் அதை ஒத்துக்கொண்டதாகவும் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு பொலிஸார் குறித்த விடயத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
அதனால் தான் தனக்கு இம்முறை ஆசனம் வழங்கவில்லை என சுமந்திரன் குறிப்பிடுவதாகவும் அது முற்றிலும் பொய் எனவும் 2020 ஆண்டில் இருந்தே கட்சியில் செயற்பாடுகளில் இருந்த அதிருப்திகாரணமாக உளவியல் ரீதியாக கட்சியோடு பயணிப்பதா இல்லையா என்ற மனநிலை இருந்து வந்ததாகவும் அதே நேரம் எனது சுயவிருப்பத்தினாலும் உடல் நல பிரச்சினைகளாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாலும் நானாக மேற்கொண்ட முடிவே அது என அவர் சுட்டிகாட்டினார்
குறிப்பாக சுமந்திரன் 2020 ஆண்டுக்கு பிறகு விடுதலைபுலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் அவருக்கு எதிராக தான் சம்மந்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியதாகவும் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதை ஏற்க்கொள்ள முடியாது எனவும் அவருக்கு எக்காரணம் கொண்டும் கட்சியின் பதவி நிலைகள் வழங்க கூடாது எனவும் எழுத்து மூலமாக சம்மந்தன் ஐயாவுக்கு எழுதியிருதேன்
அத்துடன் கடந்த 2020 ஆண்டு தேர்தலின் போது சுமந்திரன் வன்னியில் ஏறும் எந்த அரசியல் மேடைக்கும் நான் ஏற மாட்டேன் என தெரிவித்திருந்தேன் அதே போன்று எந்த அரசியல் மேடையிலும் ஏறவில்லை அதன் காரணம் என்ன என்றால் சுமந்திரன் பிரச்சாரம் செய்து அதில் ஒரு வாக்கு விழுந்து நான் வெற்றி பெற கூடாது என்பதற்காகவே
அவ்வாறான நிலையில் அவர் எனக்கு எதிராக பல வேலைகள் செய்திருந்தார் இருந்தாலும் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக அதிக வாக்குகளை பெற்று நான் வெற்றி பெற்றேன்
அதே நேரம் அண்மையில் கட்சியின் தலைமைத்துவம் சம்மந்தப்பட்ட விடயத்தில் சுமந்திரன் தலைவராக வந்துவிட கூடாது என்பதற்காக நான் நேரடியாகவே சிறிதரனுக்கு ஆதரவாக செயற்பட்டதுடன் சுமந்திரன் தலைவராக வரமுடியாமைக்கு நான் பெறும் பங்காற்றியிருந்தேன் அதுவும் அவருக்கு நன்றாக தெரியும்
இப்பிடியாக கட்சியில் இருந்த அதிருப்தியான நிலமைகாரணமாகவே இளைஞர்களுக்கு வாய்பு வழங்கு தேர்தலில் போட்டியிடவேண்டாம் என தீர்மானித்திருந்தேன்
சுமந்திரனுடன் 2020 ஆண்டில் இருந்தே முரண்பாடுகளோடுதான் பயணித்தேன் இவ்வாறு இருக்க இந்த தேர்தலில் சுமந்திரனுக்கு அடிமையாக தேர்தல் கேட்க முடியாது
என்னை பொறுத்த வரையில் வன்னி மாவட்டம் திருகோணமலை மாவட்டம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கபடவேண்டும் ஏன் என்றால் இந்த பகுதிகளில் சிங்கள முஸ்லீம் அரசியல் வாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது
ஆனாலும் சுமந்திரனின் இவ்வாறான தொடர்சியான செயற்பாடுகளால் கட்சி அங்கத்தவர்களும் மக்களும் புலம்பெயர் அமைப்புக்களும் மன விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்கின்றேன்
அதே நேரம் சுமந்திரனுக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் ஒன்றை தெரிவித்து கொள்கின்றேன் நான் எந்த ஒரு மதுபான சாலைக்கும் அனுமதி பெறவும் இல்லை யாருக்கும் சிபாரிசும் செய்யவில்லை எனக்கு அறிமுகமானவர்கள் அதை பெற்றிறுந்தால் அது அவர்களின் தனிப்பட்ட விடயம் அதற்கு நான் எந்த சிபாரிசு கடிதம் கொடுக்கவில்லை என்பதை தெரிவிப்பதுடன் அவருடைய கருத்து தொடர்பில் நான் மன்னார் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்
அதே நேரம் தேர்தல் நியமனத்திற்காக நான் தேர்தல் கேட்பதாக விண்ணப்பிக்கவில்லை அதே நேரம் தற்போது இருக்கும் தமிழரசு கட்சி நிர்வாகத்தோடு பயணிக்க முடியாது என்பதுடன் சுமந்திரன் சொல்லும் எல்லாவற்றுக்கும் தலையாட்டி கொண்டு இருக்க முடியாது என்பதால் தேர்தலில் இருந்து நானாக தான் விலகினேன்
சுமந்திரன் தலைவராவதில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் பல்வேறு வன்மத்தை மனதில் வைத்தே முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அவர் சார்ந்தவர்களும் தொடர்ந்து சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் அதே நேரம் சுமந்திரனுக்கு நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன் நான் வழங்கிய சிபாரிசு கடிதத்தை அவர் கொண்டு வந்தால் நான் அவர் சொல்வதை செய்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் சென்றவர் மாடு துரத்தித் துரத்தி மோதியதில் பலி!!
கலேவெல-மாத்தளை வீதியின் தலகிரியாவ பகுதியில் நேற்று (02) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலேவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
தலகிரியாவ சந்தியில் இருந்து மாதிபொல ஊடாக கலேவெல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் குறுக்கே வந்த மாடு மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியில் கவிழ்ந்து அருகில் இருந்த பாலத்தின் தூண் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த நபர் 57 வயதுடைய பெலிகமுவ-கலேவெவ பகுதியைச் சேர்ந்தவராவார்.
மரணித்தவரின் சடலம் தம்புள்ளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் கடைசி வட்ஸ்அப் பதிவு!
பதுளை – துன்ஹிந்தவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 41 பேர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (02-11-2024) இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்தவர்களில் 39 பேர் பதுளை போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் குறித்த விபத்தில் 23 வயதுடைய 2 பல்கலைக்கழக மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.
நிவிதிகல, தொலபுகமுவ, பஹல கந்தவில் வசித்த இசுரி உமயங்கனா மற்றும் குருநாகல், ஹுனுபொலகெதர, அம்பகொட்டே பகுதியில் வசித்து வந்த பூபதி ஹெட்டிமுல்ல ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இவ்வாறான நிலையில், விபத்தில் உயிரிழந்த மாணவிகளில் ஒருவரான இசுரி உமயங்கனா, நேற்று (01) தனது தந்தையின் பிறந்த நாளுக்கு வாட்ஸ்அப்பில் வாழ்த்துச் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதிகாலையில் எழுந்த நிலையில், 05.03 மணிக்கு வட்ஸ்அப்பில் அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்த இரு மாணவிகளின் சடலங்களும் பிரேத பரிசோதனையின் பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Friday, November 1, 2024
தண்ணீரென நினைத்து அசிட் அருந்திய நகை கடைக்காரரின் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
கண்டி – கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை, பியசேனபுர பகுதியில் தண்ணீர் என நினைத்து அமிலத்தை (ஆசீட்) அருந்தியதில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களேயான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
தனது குழந்தையுடன் தந்தையொருவர், தெல்தோட்டை நகரிலுள்ள தங்க வியாபார நிலையமொன்றுக்கு சென்றுள்ளார்.அங்கு பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அமிலத்தையே குழந்தை அருந்தியுள்ளது என தெரியவருகின்றது.
இதனையடுத்து குழந்தை தெல்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தது.சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பெண் விவகாரத்தில் உருட்டல்…. கண்ணடிப்பின் பின்னணி… மான் மார்க் பியர் மான் குட்டிகளின் உலகமகா உருட்டல்!
க.வி.விக்னேஸ்வரன் தரப்பு மதுபானச்சாலை அனுமதிப்பத்திரத்துடன் தொடர்புடையது என்பதை சூசமாக ஏற்றுக்கொண்டுள்ள அந்த தரப்பின் வேட்பாளர் வி.மணிவண்ணன், இலங்கை தமிழ் அரசு கட்சியும் மதுபானச்சாலை அனுமதிப்பத்திரத்துடன் தொடர்புடையது என குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று (1) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், அண்மையில் நீர்வேலியில் அவர்களின் பிரச்சாரக்குழு தாக்கப்பட்டது தொடர்பில் திரிவுபடுத்தப்பட்ட தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
மணிவண்ணன் தரப்பினால் சம்பளத்துக்கு அமர்த்தப்பட்ட 17 வயது சிறுமி உள்ளிட்ட நாள் சம்பள பணியாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, வீதியால் சென்ற இளைஞர் குழுவினர், அந்த குழுவிலிருந்த யுவதிகளுடன் சேட்டை விட்டனர். அந்த குழுவினர் தகராற்றில் ஈடுபட்ட போது, மணிவண்ணன் தரப்பினர் அவர்களை தாக்க, இளைஞர்கள் திரண்டு வந்து, மணிவண்ணன் தரப்பினரை நையப்புடைத்தனர்.
பொலிஸ் விசாரணையின் பின்னர் மணிவண்ணன் தரப்பின் 4 பேரும், இளைஞர் குழுவில் 4 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பெண் விவகாரத்தை, தனது கட்சிக்கு அனுதாபம் தேடும் நோக்கத்துடன், அரசியல் அர்த்தம் கற்பிக்க மணிவண்ணன் முயன்றிருக்கிறார்.
அத்துடன், மதுபானச்சாலை அனுமதிப்பத்திரம் தொடர்பாக செய்தியாளர் தரப்பிலிருந்து ஒருவர் கேள்வியெழுப்பும் போது, மணிவண்ணன் அவரை நோக்கி கண்ணசைவில் சைகை செய்யும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மணிவண்ணன் தரப்பினரை சங்கடப்படுத்தாமல் இந்த விவகாரத்தை அவர்கள் சுலபமாக கடந்து செல்லும் விதமாக, திட்டமிடப்பட்ட நாடகமாக இந்த கேள்வி பதில் அமைந்ததா என்ற சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job