நாடாளுமன்ற தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் நடந்து வரும் நிலையில், யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் மாவட்டத்தின் பெரும்பாலான தேர்தல் தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தியே முன்னிலை வகிப்பதாக வாக்கெண்ணும் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிர்ச்சியளிக்கும் விவகாரமாக- பரபரப்பு விரும்பிகளான ஊசி சுயேச்சைக்குழுவும் ஓரளவு வாக்கை பெற்றுள்ளனர்.
குறிப்பாக சாவகச்சேரி தொகுதியில் ஓரளவு வாக்கை பெற்று, 2 அல்லது 3வது இடத்தில் மாறிமாறி நீடித்து வருகிறது.
மானிப்பாய் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி முதலிடத்திலும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 2வது இடத்திலும் உள்ளன.
0 comments:
Post a Comment