யாழ் நோக்கி வந்த ரயில் மோதி 2 வயது குழந்தை பரிதாபகரமாகப் பலி!! வளர்ப்பு நாயை பிடிக்க ஓடியதால் பயங்கரம்!!
வளர்ப்பு நாயை பின்தொடர்ந்து ஓடிய 2 வயது 2 மாத ஆண் குழந்தையொன்று கல்கமுவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து காங்கசந்துறை நோக்கி சென்ற விரைவு ரயிலில் மோதி துரதிஷ்டவசமாக நேற்று (22) காலை தாய் முன்னிலையில் உயிரிழந்துள்ளது.
கல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்ருவகந்த பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய பிள்ளையான எம்.செஜன் ஹசரங்க என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
இந்த வீட்டில் இருந்து சுமார் 15 மீற்றர் தொலைவில் வடக்கு புகையிரத பாதை அமைந்துள்ளதால், குழந்தை வெளியில் செல்லாதவாறு வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் வேலி அமைக்கப்பட்டிருந்த போதும் குழந்தை அதனை கவிழ்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய் குழந்தையுடன் கடைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்த போது, கவர் கீழே விழும் சத்தம் கேட்டது. குழந்தை ரயில் தண்டவாளத்தை நோக்கிச் செல்வதைக் கண்ட தாயார், ஓடிச்சென்று அதனை காப்பாற்ற முயன்றாலும், வேகமக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் குழந்தை மீது மோதியது.
0 comments:
Post a Comment