க.வி.விக்னேஸ்வரன் தரப்பு மதுபானச்சாலை அனுமதிப்பத்திரத்துடன் தொடர்புடையது என்பதை சூசமாக ஏற்றுக்கொண்டுள்ள அந்த தரப்பின் வேட்பாளர் வி.மணிவண்ணன், இலங்கை தமிழ் அரசு கட்சியும் மதுபானச்சாலை அனுமதிப்பத்திரத்துடன் தொடர்புடையது என குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று (1) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், அண்மையில் நீர்வேலியில் அவர்களின் பிரச்சாரக்குழு தாக்கப்பட்டது தொடர்பில் திரிவுபடுத்தப்பட்ட தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
மணிவண்ணன் தரப்பினால் சம்பளத்துக்கு அமர்த்தப்பட்ட 17 வயது சிறுமி உள்ளிட்ட நாள் சம்பள பணியாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, வீதியால் சென்ற இளைஞர் குழுவினர், அந்த குழுவிலிருந்த யுவதிகளுடன் சேட்டை விட்டனர். அந்த குழுவினர் தகராற்றில் ஈடுபட்ட போது, மணிவண்ணன் தரப்பினர் அவர்களை தாக்க, இளைஞர்கள் திரண்டு வந்து, மணிவண்ணன் தரப்பினரை நையப்புடைத்தனர்.
பொலிஸ் விசாரணையின் பின்னர் மணிவண்ணன் தரப்பின் 4 பேரும், இளைஞர் குழுவில் 4 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பெண் விவகாரத்தை, தனது கட்சிக்கு அனுதாபம் தேடும் நோக்கத்துடன், அரசியல் அர்த்தம் கற்பிக்க மணிவண்ணன் முயன்றிருக்கிறார்.
அத்துடன், மதுபானச்சாலை அனுமதிப்பத்திரம் தொடர்பாக செய்தியாளர் தரப்பிலிருந்து ஒருவர் கேள்வியெழுப்பும் போது, மணிவண்ணன் அவரை நோக்கி கண்ணசைவில் சைகை செய்யும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மணிவண்ணன் தரப்பினரை சங்கடப்படுத்தாமல் இந்த விவகாரத்தை அவர்கள் சுலபமாக கடந்து செல்லும் விதமாக, திட்டமிடப்பட்ட நாடகமாக இந்த கேள்வி பதில் அமைந்ததா என்ற சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது.
0 comments:
Post a Comment