மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்து முகப்புத்தகத்தில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் படி, யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் நேற்றையதினம் (29) பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர்
கைதான இரு சந்தேகநபர்களில் ஒருவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என கூறப்படுகிறது.
மற்றையவர் மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்ததாகக் கூறப்படும் முகப்புத்தக கணக்கிற்கு உரித்துடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment