மாவனல்ல பொலிஸ் நிலையத்தில் வைத்தே, கணவன், மனைவியின் வாய், கழுத்து மற்றும் பல இடயங்களில் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவனெல்லையில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயே காயமடைந்துள்ளார்.மனைவி செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மனைவியின் நிர்வாண புகைப்படங்களை கைத்தொலைபேசியில் வைத்திருக்கும் கணவன் , மனைவியை பயமுறுத்தி பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 24ம் திகதி, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, இது குறித்து மனைவி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.அதன் பிரகாரம், முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இருவரும் கடந்த 26ஆம் திகதி பொலிஸூக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது மறைத்து வைத்திருந்த பேப்பர் கட்டர் 21 வயதான மனைவியை வெட்டியுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த யுவதி, மாவனல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், 39 வயதுடைய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அதோடு இளம் மனைவி சில காலமாக கணவனால் வெளிதரப்பினருக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.மேலும் இதற்கு முன்னரும் கணவனுக்கு எதிராக மனைவி முறைப்பாடு செய்திருந்ததாகவும், அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் மாவனல்ல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment