ஏ9 வீதி வெள்ளத்தில் மூழ்கியது: யாழ்ப்பாணத்துக்கு மாற்றுப்பாதைகளை பயன்படுத்த அறிவித்தல்!
ஓமந்தையில் ஏ9 யாழ்ப்பாணம் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
வாகன சாரதிகள், கெபிடிக்கொலாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்றுப் பாதைகளில் அல்லது மதவாச்சி, செட்டிக்குளம் மற்றும் மன்னார் ஊடாக யாழ்ப்பாணத்தை அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம்-கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் இன்று (27) காலை பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment