2024 நாடாளுமன்றத் தேர்தலின் முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க (saman sri ratnayake) இன்று(14) தெரிவித்தார்.
தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும் உள்ள 13,314 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மாலை 4 மணிக்கு நிறைவடையவுள்ளது.
தபால் மூலமான வாக்குகள் எண்ணும் பணி
முதலில் தபால் மூலமான வாக்குகள் எண்ணும் பணி மாலை 5 மணிக்குத் தொடங்கும், மேலும் வாக்கு எண்ணும் நிலையங்களின் செயல்திறனைப் பொறுத்து வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும்.
இந்தத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், 17,140,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
0 comments:
Post a Comment