16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், இணைய சேவையைப் பயன்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட தடையை மீறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு, பல மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்படும் என்று அவுஸ்திரேலிய (Australia) அரசாங்கம் எச்சரித்துள்ளது.
நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட் இன்று (21) நாடாளுமன்றத்தில் இணையப் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்.
இது, உலகின் முன்னணி சமூக ஊடக சீர்திருத்தம் என்ற அடிப்படையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இதனை முன்வைத்துள்ளது.
சமூக ஊடகச்சேவை
இதன்படி, சமூக ஊடகங்களை அணுகுவதற்கான குறைந்தபட்ச வயதாக 16 வயதை நிறுவ பிரதமர் அல்பானீஸ் அரசாங்கம், சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது என்று அமைச்சர் ரோலண்ட் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் வயது - கட்டுப்படுத்தப்பட்ட, பயனர்கள் சமூக ஊடகக்கணக்கு வைத்திருப்பதைத் தடுக்க நியாயமான நடவடிக்கைகள் இந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட சமூக ஊடகச் சேவைகளின் பட்டியல் வெளியிடப்படவில்லை என்றாலும், டிக்டோக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னொப்சொட் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகளுக்கு இந்தத் தடை பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்துக்கு பெருமளவான பெற்றோர்களும் நலன் விரும்பிகளும் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment