யாழ்ப்பாணம் (Jaffna) சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற மோதலில் காவல்துறையினர் குடும்பம் ஒன்றின் அங்கத்தவர்களை மிலேச்சத்தனமாக தாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவமானது, நேற்று (09.11.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த பிரதேசத்தில் விபத்தொன்று ஏற்பட்டுள்ள நிலையில், காவல்துறையின் தவறை மறைக்க பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான காணொளி
தாக்குதல் நடத்தப்பட்ட குடும்பத்தினர் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
2 மாத குழந்தை மற்றும் பெண்கள் உட்பட குடும்பத்தினர் மீது காவல்துறையினர் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment