நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, August 25, 2025

சுவிஸ்லாந்தில் பொலிஸ் துரத்தியதில் 17 வயது இளைஞன் பலி!! பொலிசாருடன் மோதிய இளைஞர்கள்!!


சுவிஸ்லாந்தில் பொலிஸ் துரத்தியதில் 17 வயது இளைஞன் பலி!! பொலிசாருடன் மோதிய இளைஞர்கள்!!

லொசானில்  நேற்று மாலை விபத்து ஒன்றை அடுத்து, இளைஞர்கள் பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

பொலிசாரிடமிருந்து தப்பிச் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில்  17 வயது இளைஞன் இறந்த செய்தியை அறிந்ததும் நேற்று இரவு 9:30 மணி பிரெலாஸ் மாவட்டத்தில் சுமார் நூறு இளைஞர்கள் கூடியிருந்தனர்.

முகமூடி அணிந்த இளைஞர்கள் வாணவேடிக்கை பொருட்களால் பொலிசாரை குறிவைத்தனர். வீதியில் குப்பைக் கொள்கலன்களையும் அவர்கள் தீயிட்டு எரித்தனர்.

 லொசான் போக்குவரத்து நிறுவனமான TL க்கு சொந்தமான பேருந்தும்  சேதமாக்கப்பட்டது. நள்ளிரவுக்குப் பிறகு அமைதி திரும்பியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும் அங்கு தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment