“தொலைந்து விடு, கழுதையே. உன்னை இல்லாமல் ஆகிவிடுவேன்” – இவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015-ல், மத்திய வங்கி பிணை மோசடியை விசாரித்த CID இயக்குநர் ஷானி அபேசேகரக்கு கூறிய வார்த்தைகள்.
பின்னால், ஷானி அபேசேகர சில போலிக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, சுமார் ஒரு வருடம் மறியலில் இருந்தார்.
சரியாக 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஓய்வு பெற்ற ஷானி, இன்று CID இயக்குனராக மீண்டும் நியமிக்கப்பட்டு, ரணிலை மறியலுக்கு அனுப்பியுள்ளார்.
கெட்டபய சார் இந்த ஷானி!
ரணிலை கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம் என்பதில் நியாயம் இருந்தாலும், சமயங்களில் சட்டத்தின் ஆட்சியில் ரணில் சதுரங்கம் விளையாடியதை நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது.
1988-களின் “பட்டலந்த” சித்தரவதை முகாம் போன்ற பழைய பைல்களை மறந்தாலும்,
இறுதியாக ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில்:
– உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்காமல் இழுத்தடித்தமை,
– தேர்தல்களை தாமதப்படுத்தியமை அல்லது தடுத்தமை,
– உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பாராளுமன்றத்தில் மறுபரிசீலனை செய்ய முயற்சித்தமை,
என சில உதாரணங்களை கூறலாம்
ரணில் ஒரு சட்டத்தரணியாக இருந்தும் இவ்வாறு செயற்பட்டது கவலைக்குரியது. இன்றும் கூட நீதிமன்றத்தில் காலுக்கு மேல் கால் போட்டு ரணில் இருந்தது, சட்டவாட்சியின் மீதும், நீதித்துறையின் மீதமுள்ள அவரது மனநிலையை வெளிப்படுத்துகிறது.
ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்குச் செய்த சேவையை மதிக்கும் அதேவேளை, இந்த நிகழ்வை, எந்தத் தலைவரும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்பதையும், ஜனநாயகத்தில் சட்டத்தின் ஆட்சியை மதிப்பது கட்டாயம் என்பதையும் வலியுறுத்தும் தருணமாகவே பார்க்கப்பட வேண்டும்.
0 comments:
Post a Comment