ரணில் விக்ரமசிங்க கைது!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று அவர் முன்னிலையாகியிருந்தார்.
ஜனாதிபதியாக இருந்த காலத்தில்உத்தியோகபூர்வ அழைப்பின்றி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்தபோது, 16.9 மில்லியன் ரூபா அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக குறித்த விசாரணை இடம்பெற்றது.
முன்னதாகவே அரசாங்கத்துக்கு மிகவும் நெருக்கமான யூடியூபர் ஒருவர் இன்றைய தினம் (22) ரணில் கைது செய்யப்படுவது உறுதி என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment