நல்லுார் முருகனின் சிவப்புச்சட்டை பரதேசிகளின் ரவுடித்தனம்!! பெண்கள் மீது கொடூர தாக்குதல்!!
இன்று (17) நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா சுவாமி வீதியுலா முடிந்து வசந்த மண்டபத்திற்கு போகும்போது வசந்த மண்டபத்திற்கு முன்பாக சுவாமி கும்பிடுவதற்காக காத்திருந்ந்த பெண்களை விலகிப் போகவில்லை என்று சிவப்புச் சால்வை கட்டிய ரவுடி ஒருவன் தாக்கியுள்ளான்.
இதனால் வசந்த மண்டபத்திற்கு முன்பாக முறுகல் நிலை ஏற்பட்டது. தாக்குதலை நடாத்திய ரவுடியை பாதிக்கப்பட்ட பெண்களும் அங்கிருந்த பலரும் கடிந்தார்கள்.
சிவப்பு சால்வை கட்டிக்கொண்டு நல்லூரில் சுற்றித் திரிபவர்கள் சிலர் அராஜகமான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
நல்லுார் முதலாளியான சயந்தன் செம்மறி குறித்த ரவுடிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றான். பின் வீதியை திறக்காது மூடி வைத்துள்ள சயந்தன் செம்மறி வெளிவீதியில் பெருமளவு மக்கள் திரண்டுள்ள நேரத்தில் சிவப்பு கயிறு கட்டி சுவாமிக்கு அப்பாலும் ஒருவரும் வராதவாறு தடுத்து நிறுத்துவதால் பெரும் சன நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. அத்துடன் சேட்டுடன் வரும் பக்தர்களை சயந்தன் செம்மறியின் சிவப்பு சட்டை ரவுடிகள் மிகக் கேவலமாக ஏசித் துரத்தி வருவதாகவும் சுவாமிக்கு தொலைவில் அவர்கள் நின்றாலும் அவர்களை கலைப்பதாகவும் பக்தர்கள் தரப்பில் கடும் விசனம் தெரிவிக்கப்படுகின்றுது. இன்று சயந்தன் செம்மறியின் ரவுடி ஒன்று ஒலிவாங்கியால் பெண்ணை கடுமையாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.எனவே இந்தப் பிரச்சினையை ஆலய நிர்வாகம் தீர்க்க வேண்டும் எனவும் தீர்க்க தவறும் பட்சத்தில் பக்தர்களுக்கும், அவர்களுக்குமிடையே வீண் முரண்பாடுகள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment