லண்டனிலிருந்து பிரான்ஸ் வந்த பாடசாலை நண்பனுடன் புங்குடுதீவு சியாமளா உல்லாசம்!! நகைகளை நண்பனுக்கு கொடுத்து விட்டு களவு போய்விட்டது என நடித்து பிடிபட்டது எப்படி?
பிரான்ஸ் றேம்ஸ் பகுதியில் வசிக்கும் யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 41 வயதான சர்மிளா என்பவரை பிரான்ஸ் பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. அவருடன் அவரது வீட்டில் தங்கியிருந்த லண்டனைச் சேர்ந்த யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 41 வயதான சுரேஸ்குமார் என்பவரும் பொலிசாரால் தேடப்படுகி்ன்றார்.
நடந்தது என்ன?
வர்ணகுலன் சியாமளா என்ற 41 வயதான குடும்பப் பெண், கணவன் வியாபார தேவை கருதி இந்தியா சென்ற நிலையிலும், 17 வயதான மகன் நண்பர்களுடன் வேறு நாடு ஒன்றுக்கு சுற்றுலாவுக்கு சென்ற நிலையில் லண்டனில் வசிக்கும் குடும்பஸ்தரான தனது பாடசாலை நண்பனான சுரேஸ்குமார் என்பவரை தனது வீட்டுக்கு வரவழைத்து சில நாட்கள் இருவரும் வீ்ட்டில் தனிமையில் இருந்துள்ளனர். சுரேஸ்குார் மீண்டும் லண்டன் சென்ற பின் சியாமளா வீட்டில் வைத்திருந்த தனது 50 பவுண் நகைகளைக் காணவில்லை என பொலிசாருக்கு முறையிட்டுள்ளார், பொலிசார் தீவிர விசாரணைகளில் இறங்கிய போது சியாமளாவின் வீட்டு CCTV சில நாட்கள் செயலிழந்துள்ளதை அவதானித்ததுடன் அது வேண்டுமென்றே நிறுத்தப்பட்டதையும் கண்டு பிடித்துள்ளனர். அத்துடன் அருகில் உள்ள பகுதிகளின் காணப்பட்ட CCTV பதிவுகளின் படி சியாமளாவுடன் கணவர் அல்லாத ஒருவர் உள்ளே சென்று வருவதையும் கண்டு பிடித்துள்ளனர். அயலவர்களை விசாரித்த போது அவர்களும் சந்தேகப்படும்படியான நடமாட்டாங்கள காணப்படவில்லை என கூறியிருந்தனர். அத்துடன் சியாமளா வீட்டின் வெளிக் கதவு திருடன் உடைப்பது போல் உடைக்கபடாது வித்தியாசமான முறையில் சேதப்படுத்தப்பட்டிருந்ததையும் அலுமாரியும் அதே போல் உடைக்கப்பட்டிருந்ததையும் அவதானித்து விசாரணைகளைத் தொடங்கிய போதே சியாமளா தனது கள்ளக்காதலனுக்கு நகைகளைக் கொடுத்த பின்னர் காப்புறுதி பெறுவதற்காக நாடகமாடியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சியாமளா பொலிசாரால் கைது செய்யப்பட்டு்ள்ளதாகவும் அவருடன் தங்கியிருந்த லண்டன் சுரேஸ்குமாரும் பொலிசாரால் தேடப்படுவதாகவும் பிரான்ஸ் தமிழ் ஊடகத்தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
0 comments:
Post a Comment