Saturday, October 28, 2023
யாழில். வெளிநாடு செல்ல முகவருக்கு பணம் வழங்கி ஏமாந்த இளைஞன் உயிர்மாய்ப்பு!!
வெளிநாடு செல்வதற்காக முகவரிடம் பெரும்தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்து இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில் இருந்தோரால் காப்பாற்றப்பட்டு வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டது. அதன் போது மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையின் போது , வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக முகவர் ஒருவரிடம் பெரும் தொகை பணத்தினை கொடுத்திருந்தார்.
பணத்தினை வாங்கிய நபர் நீண்ட நாட்களாக பயண ஒழுங்குகளை செய்யாது காலம் தாழ்த்தி வந்தமையால் இளைஞன் மன விரக்தியில் இருந்ததாகவும், அதனாலயே தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்ததாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
புடின் ஏற்கனவே மரணமடைந்திருக்கலாம்... விரைவில் தகவல் வெளியாகும்: பிரித்தானிய நிபுணர்!
ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே மரணமடைந்திருக்கக்கூடும் என்றும், அது குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் என்றும் பிரித்தானிய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடின் குறித்து தொடர்ந்து வெளியாகிவரும் தகவல்கள்
உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே, புடினுக்கு புற்றுநோய், பார்க்கின்சன் என தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
கடந்த வாரம் புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.
டெலிகிராம் சேனல் ஒன்று, புடின் நேற்று முன்தினம் உயிரிழந்துவிட்டதாகவே செய்தி வெளியிட்டது.
பிரித்தானிய நிபுணர் கூறும் தகவல்
இந்நிலையில், பக்கிங்காம் பல்கலையின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிபுணரான பேராசிரியர் Anthony Glees, ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே மரணமடைந்திருக்கலாம் என்றும் விரைவில் கிரெம்ளின் வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாகக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
புடின் மரணமடைந்ததால், ரஷ்ய ஆட்சிப் பொறுப்பு கைமாறுவதால், உக்ரைன் போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பேராசிரியர் Anthony.
புடினுக்குப் பின் யார்?
மேலும், புடின் மரணமடைந்தால், அவருக்கு பதிலாக யார் ரஷ்யாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கக்கூடும் என்பதையும் கணித்துள்ளார் பேராசிரியர் Anthony.
அவ்வகையில், இரண்டு பேருடைய பெயர்களை குறிப்பிட்டுள்ளார் அவர். செசன்ய குடியரசின் தலைவரான Ramzan Akhmadovich Kadyrov மற்றும் ரஷ்ய வேளாண்மைத்துறை அமைச்சரான Dmitry Patrushev.
இவர்கள் இருவர் மட்டுமே ரஷ்ய ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியும் என்றும் கூறியுள்ளார் பேராசிரியர் Anthony.
குளிர்சாதனப் பெட்டிக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்: பதைபதைக்கவைக்கும் தகவல்கள்!
அமெரிக்காவில், மொடலாகிய அழகிய இளம்பெண் ஒருவர் மாயமான நிலையில், குளிர்சாதனப் பெட்டி ஒன்றிற்குள் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்ற மாதம், Maleesa Marie Mooney (31) என்னும் இளம்பெண்ணைக் குறித்து தகவல் எதுவும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவலளிக்க, அவரை, லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள அவரது வீட்டுக்குள்ளேயே, குளிர்சாதனப் பெட்டி ஒன்றிற்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடித்தனர் பொலிசார்.
Maleesa Marie MooneyJourdin Pauline Instagram
பதைபதைக்கவைக்கும் தகவல்கள்
உடற்கூறு ஆய்வில் Maleesaவின் மரணம் குறித்து பதைபதைக்கவைக்கும் உண்மைகள் தெரியவந்தன. Maleesa, இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது மணிக்கட்டுகளும் கணுக்கால்களும் கட்டப்பட்டு, அவர் குளிர்சாதனப் பெட்டி ஒன்றிற்குள் திணித்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அத்துடன், அவர் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். Maleesaவை கொடூரமாக தாக்கி கொலை செய்தது யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
Maleesa Marie Mooney
தாயாகும் ஆசையிலிருந்த தங்கள் மகள் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் Maleesaவின் பெற்றோரும், அவரது காதலரும் கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளார்கள்.
பட்டம் முடிக்கவில்லை, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளம்., வாரத்திற்கு 6 மணி நேரம்தான் வேலை!
உலகில் உள்ள அனைவரும் குறைந்த வேலை மற்றும் நல்ல வருமானத்துடன் வேலை பெற விரும்புகிறார்கள். நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று லட்சக்கணக்கில் செலவு செய்து பட்டப் படிப்புகளை படித்து வருகின்றனர். அதன் பிறகும் இன்டர்ன்ஷிப் செய்துவிட்டு எங்காவது சென்று வழக்கமான வேலையில் சேருகிறார்கள். இருப்பினும், பணம் சம்பாதிப்பதற்கு நிறைய நேரமும் அர்ப்பணிப்பும் தேவை. இது தனியாக சாத்தியம், ஆனால் குடும்பத்துடன் வேலை செய்ய எல்லா நேரத்தையும் ஒதுக்குவது கடினம். குறிப்பாக பெண்களுக்கு இது மிகவும் கடினமாகிறது.
ஆனால் பட்டம் கூட படிக்காமல் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். ஆண்டுக்கு 50 லட்சம் மதிப்பிற்குரிய வேலையைச் செய்கிறார். இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், அவள் வாரத்திற்கு 6 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறாள்.
வாரத்திற்கு 6 மணி நேர வேலைக்கு ஆண்டுக்கு 50 லட்சம்
ரோமா நோரிஸ் (Roma Norris) என்ற 40 வயதான பிரித்தானிய பெண் பணம் சம்பாதிக்க ஒரு தனித்துவமான வழியைத் தேர்ந்தெடுத்தார். அவர் தனது புகைப்படங்கள் எதையும் விற்கவில்லை, சமூக ஊடகங்களில் பிரபலமானவர் கூட இல்லை, அவர் வேறு எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை.
ஆனால், வாரத்தில் 6 மணி நேரம் மட்டுமே வேலை செய்வதன் மூலம் ஒரு வருடத்தில் 50 லட்சம் ரூபாய் எளிதாக சம்பாதிக்கிறார். அதே சமயம் முழு நேரத்தையும் தன் குடும்பத்திற்காக ஒதுக்குகிறார்.
பட்டப்படிப்பு இல்லாவிட்டாலும் லட்சக்கணக்கில் சம்பளம்
உண்மையில், ரோமா 17 ஆண்டுகளாக பெற்றோருக்குரிய ஆலோசகராக இருந்து வருகிறார். புதிய பெற்றோருக்கு நல்ல பயிற்சி அளிக்கிறார். அவர் ஒரு மணி நேரத்தில் £290 (ரூ. 29000) வரை சம்பாதிக்கிறார்.
ஒரு பெற்றோருக்குரிய ஆலோசகராக, அவர் புதிய பெற்றோருக்கு தங்கள் குழந்தையை எப்படி தூங்க வைப்பது, நல்ல புத்திசாலித்தனத்துடன் அவர்களை வளர்ப்பது எப்படி, சத்தான உணவை அவர்களுக்கு எப்படி ஊட்டுவது, அவர்களுடன் எப்படி நன்றாக தொடர்புகொள்வது போன்றவற்றை கற்றுக்கொடுக்கிறார்.
இது தவிர தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதிலும் பயிற்சி அளிக்கிறார். புதிதாகப் பெற்றெடுத்த தம்பதிகள் அடிக்கடி பல பிரச்சனைகளுடன் அவர்களிடம் வருகிறார்கள். இன்னும் பலர் அவருடன் ஆன்லைனில் ஆலோசனை செய்கிறார்கள்.
Roma Norris, united Kingdom, parenting consultant for couples, Roma Norris Wild and Well, Hand in hand parenting
இரண்டு முறை பல்கலைகழகம் இடைநிறுத்தம்..
ஒரு வகையில், ரோமா இரண்டு முறை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியவர். வாழ்க்கையில் இரண்டு டிகிரி படிக்க நினைத்தாலும் சில காரணங்களால் அவரால் அதை முடிக்க முடியவில்லை. இப்போது பணம் சம்பாதிக்க எந்த பட்டமும் இல்லை, ஆனால் ரோமா தேர்ந்தெடுத்த பாதையால் மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
இதோ புதிய TVS Ronin ஸ்பெஷல் எடிஷன் பைக்.. ஆச்சரியமான விலையில்.!
முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான TVS, பண்டிகைக் காலத்தில் Ronin பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல், ரோனின் ஸ்டாண்டர்ட் வகைகளில் காஸ்மெட்டிக் மேம்பாடுகளுடன் வருகிறது. இந்த புதிய மாடல் பைக்கின் விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள் ரோனின் டாப்-ஸ்பெக் வேரியண்ட்டைப் போலவே உள்ளது.
TVS Ronin ஸ்பெஷல் எடிஷன் அம்சங்கள்:
இந்த ஸ்பெஷல் எடிஷன் வகை ஸ்டாண்டர்டு வகையுடன் ஒப்பிடும்போது புதிய கிராபிக்ஸ் உடன் வருகிறது. இது டிரிபிள் டோன் ஸ்கீமில் முதன்மை நிறமாக சாம்பல் நிறத்தையும், அதில் வெள்ளை மற்றும் சிவப்பு பட்டையுடன் வழங்குகிறது.
TVS Ronin Special Edition
இந்த மோட்டார்சைக்கிள் 'R' லோகோ பேட்டர்னுடன் கூடிய அம்சங்களுடன் வருகிறது. வீல் ரிம் ' டிவிஎஸ் ரோனின் ' பிராண்டிங்குடன் வருகிறது. இந்த பைக்கின் கீழ் பகுதி கருப்பு நிறத்தில் உள்ளது. ஹெட்லேம்ப் பெசலுக்கு கருப்பு தீம் கொடுக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, இந்த ஸ்பெஷல் எடிஷன் பைக் USB சார்ஜர், ஃப்ளைஸ்கிரீன், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட EFI கவர் உள்ளிட்ட முன் நிறுவப்பட்ட சாதனங்களுடன் வருகிறது. கூடுதலாக, டாப்-ஸ்பெக் Ronin TD இப்போது நிம்பஸ் கிரே உடன் புதிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. டிவிஎஸ் பிரீமியம் ஹெட் பிசினஸ் விமல் சும்ப்லி பேசுகையில், டிவிஎஸ் மோட்டரின் முதல் பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவு மோட்டார்சைக்கிளாக டிவிஎஸ் ரோனின் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வருடத்திற்குப் பிறகு, இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.
டிவிஎஸ் ரோனின்.. அம்சங்கள், விவரக்குறிப்புகள்
அம்சங்களைப் பொறுத்தவரை, ரோனின் முழு-எல்இடி விளக்குகள், TVS SmartXonnect Bluetooth moduleஉடன் கூடிய ஆஃப்-செட் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 2 ABS Mode (Rain and Road), ஸ்லிப்பர் கிளட்ச், Glide Through Technology ஆகியவற்றுடன் வருகிறது.
TVS Ronin Special Edition
டிவிஎஸ் ரோனின் 225.9சிசி சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இது 7,750ஆர்பிஎம்மில் 20.2பிஎச்பி மற்றும் 3,750ஆர்பிஎம்மில் 19.93என்எம் பீக் டார்க்கை உருவாக்குகிறது.
இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஹார்டுவேர் விவரக்குறிப்புகளில் முன் ஃபோர்க்குகள், ஏழு-நிலை ப்ரீலோட்-அட்ஜஸ்டபிள் மோனோஷாக், 300 மிமீ முன் disk, பின்புறத்தில் 240 மிமீ ரோட்டார் ஆகியவை அடங்கும்.
விலை?
டிவிஎஸ் ரோனின் ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 1,72,700 (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கிறது. இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூடிய வேரியண்ட் வாரியான TVS Ronin விலைகள் (எக்ஸ்-ஷோரூம்) பின்வருமாறு.
* TVS Ronin SS : ரூ. 1,49,200
* TVS Ronin DS : ரூ. 1,56,700
* TVS Ronin TD : ரூ. 1,68,950
* TVS Ronin Special Edition : ரூ. 1,72,700
முல்லைத்தீவு முள்ளியவளையில் 14 வயதுச் சிறுமியுடன் பலர் பாலி யலுறவு!! இருவர் கைது! மேலும் பலருக்கு வலை வீச்சு!!
முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் 14 வயது சிறுமியை பாலி யல் துஷ்பி ரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 25 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முதல் சந்தேக நபரை கைது செய்து நேற்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறுமியுடன் தகாத உறவினை மேற்கொண்ட குற்றத்துக்காக மற்றுமொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இவ்வாறு சிறுமையுடன் மூன்று பேர் வரை தகாத உறவில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சிறுமி தொடர்ந்து மாவட்ட மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் காம வலை வீசி கொலை செய்யப்பட்டாரா இளம் குடும்பஸ்தர்!! பெண் உட்பட 3 பேர் கைது!!
கிளிநொச்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் கடந்த 25ம் திகதி இரவு 10 மணியளவில் வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பத்தரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிஸார் ஒரு பெண் உட்பட மூவரை இன்றைய தினம் (27-10-2023) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
உயிரிந்தவரை தொலைபேசி மூலம் அழைத்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேகநபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Friday, October 27, 2023
100 வயது வரை வாழ ஆசையா? இதை மட்டும் செய்தாலே போதும்! | 100 Years Check Longevity Tips In Tamil
பொதுவாகவே அனைவருக்கும் நீண்ட நாட்களுக்கு வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரியாது.
ஆகவே வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து எப்படி நீண்ட நாட்களுக்கு அதாவது 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம் என தெரிந்துக்கொள்வோம்.
1. தாவர உணவுகள்
90 சதவிகித உணவுகள் தாவர வகைகளை சார்ந்த உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். கறி, இறைச்சி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
முழு தானிய வகைகளான கார்ன், அரிசி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், நட்ஸ் வகைகளை ஸ்நாக்ஸாக உட்கொள்க் கொள்ள வேண்டும். இதையடுத்து அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
100 Years Check Longevity Tips In Tamil
2. தூக்கம்
அதிகமாக வாழ விரும்புவர்கள் கண்டிப்பாக 8 மணி நேரம் தூங்க முயற்சி செய்ய வேண்டும். வெளிச்சம் மிகவும் குறைவாக உள்ள அறையில் மிதமான குளிர்ச்சியில் தூங்க வேண்டும்.
3. ஒரே இடத்தில் உட்கார வேண்டாம்
100 வயது வரை வாழ ஆசைப்படுபவர்கள் ஒரே இடத்திர் இருக்காமல் அவர்களின் வேலையை அவர்களே செய்யவது நல்லது.
100 Years Check Longevity Tips In Tamil
உணவுகள்
உடல் சோர்வாக இருந்தால் காலையில் அவித்த முட்டை அல்லது ஆம்லேட் செய்து தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
சமைக்க எளிதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் ஓட்ஸை காலை உணவாக எடுத்துக்கொள்வது நல்லது.
கீரைகள் மற்றும் பிற காய்கறி வகைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
காலை உணவாக தினமும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் உயர் புரதம் அல்லது நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.
காலையில் எளிதாக ஏதாவது உணவை தயாரித்து செய்ய விரும்பினால், சியா விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஸ்மூத்தி, சால்ட் மற்றும் தயிர் போன்ற உணவுகளிலும், வெறும் தண்ணீரிலும் சியா விதைகளை சேர்த்துக்கொள்வது நல்லது.
அவல் அரிசியை உங்களுக்கு பிடித்த காய்கறிகளுடன் மசலாப் பொருட்களுடன் சமைத்து காலை உணவாக எடுத்துக்கொள்ளவும்.
இளவரசி கேட் குடும்பத்தினரால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டேன்: உள்ளாடையுடன் இளம்பெண் வெளியிட்டுள்ள போஸ்டர்
பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவி கேட் மிடில்டனின் குடும்பத்தினரால், தான் ஆபாச இணையதளம் ஒன்றிற்கு போஸ் கொடுக்கும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இளம்பெண் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
இளம்பெண்ணின் போஸ்டரால் சர்ச்சை
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனில் பெற்றோரான கரோல் மற்றும் மைக்கேல் மிடில்டன் ஆகியோர் Bucklebury என்னும் கிராமத்தில் வாழ்ந்துவருகிறார்கள்.
இந்நிலையில், கரோல், மைக்கேல் தம்பதியர், அவர்களுடைய பிள்ளைகளான பிப்பா மிடில்டன் ஆகியோர் வாழும் வீடுகளைச் சுற்றி, மூன்று மைல் சுற்றளவில் ஒரு இளம்பெண், உள்ளாடையுடன் காணப்படும் தனது புகைப்படத்தை வெளியிட்டு, எனது இந்த நிலைக்கு இளவரசி கேட்டின் பெற்றோர்தான் காரணம் என்று கூறும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
பின்னணி
அதாவது, இளவரசி கேட்டுடைய பெற்றோர், Party Pieces firm என்னும் ஒரு நிறுவனத்தை நடத்திவந்தார்கள். அந்த நிறுவனம் நஷ்டத்திற்குள்ளானதால் அவர்கள் அதை விற்றுவிட்டார்கள்.
அந்த நிறுவனத்தை நம்பி பல சிறிய நிறுவனங்கள் இயங்கிவந்துள்ளன. அந்த நிறுவனங்களுக்கு கேட்டுடைய பெற்றோர் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுக்கவில்லை என்றும், அதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே, வருவாய்க்காக ஆபாச இணையதளம் ஒன்றிற்கு போஸ் கொடுத்து வாழவேண்டிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் Molly (23) என்னும் இளம்பெண்.
ஆகவேதான், தான் தனது நண்பர்கள் உதவியுடன் கேட்டுடைய பெற்றோர் வாழும் பகுதியில் இத்தகைய போஸ்டர்களை ஒட்டக் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் Molly.
கேட்டுடைய பெற்றோர் சிறு நிறுவனங்களுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை கொடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் Molly.
இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்கத் துவங்கினாலும் இவர்களுக்கு விசா கிடையாது... | Canada India Visa Issue
இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்கும் பணியை மீண்டும் துவங்கினாலும், கனேடியர்களில் சில தரப்பினருக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடியர்களுக்கு விசா வழங்கும் பணி மீண்டும் துவக்கம்
கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவில் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, கனேடியர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்திவைத்திருந்தது.
இந்நிலையில், நேற்று முதல், இந்தியா மீண்டும் கனேடியர்களுக்கு விசா வழங்கத் துவங்கியுள்ளது. கனேடிய தலைநகர் Ottawaவிலுள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை நேற்று முன்தினம் வெளியிட்டது.
இதனால், இரு நாடுகளுக்கிடையிலான உறவில் சிறிது முன்னேற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனேடியர்களில் சில தரப்பினருக்கு மட்டுமே விசா...
ஆனாலும்,
கனேடியர்களில் சில தரப்பினருக்கு மட்டுமே இப்போதைக்கு விசா வழங்கப்பட உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதாவது, கனடாவிலிருந்து இந்தியா வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கான விசா, வர்த்தகம், மருத்துவம், மாநாடுகளில் கலந்துகொள்வதற்கான விசா, ஆகிய விசாக்கள் வழங்கும் பணி மட்டும் நேற்று முதல் துவங்கியுள்ளது.
Canada India Visa Issue
ஆனால், கனடாவிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வருவோர், மாணவர்களுக்கான விசா, பணி, மற்றும் சினிமா படப்பிடிப்புக்காக வழங்கப்படும் விசா, ஆகியவை வழங்கும் பணி இப்போதைக்கு துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job