யாழில் 2ம் மாடியிலிருந்து குதித்த உடுவில் மகளீர் கல்லுாரி மாணவி!! இதுக்கெல்லாம் போய் இப்படி குதிக்கலாமா விசரி!!
யாழ்ப்பாணம் – உடுவில் மகளீர் கல்லுாரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2வது மாடியில் இருந்து குதித்த நிலையில் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்றையதினம் (02) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவி அந்த கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கி நின்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் அவர் விளையாட்டு ஒன்றில் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளார். இதனால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிடம் இருந்து விலகி இருந்தனர். இதன் காரணமாக மனமுடைந்த மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததால் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது வாக்குமூலத்தில் குறித்த மாணவி இதனை தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை குறித்த மாணவி வேறு ஒரு சம்பவம் அல்லது சிக்கலுக்காக தற்கொலை செய்ய முற்பட்டிருக்கலாம் எனவும் அது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த பாடசாலை பழைய மாணவிகள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
0 comments:
Post a Comment