காரைநகர் தீபா சங்குப்பிட்டியில் என்ன நடந்தது? கணவனிடம் பொய் சொல்லிச் சென்றது எங்கே? டிப்பர் சாரதி கூறியது என்ன? அந்த பார்மசி ஓனர் பிடிபட்டது ஏன்? யாரால் கொலை செய்யப்பட்டாள்? சிறப்பு புலனாய்வு தகவல்கள்!!
பெண் உரிமை, பெண் சுதந்திரம் என சமூகவலைத்தளங்களில் வீறாப்புக்காட்டும் பெண்ணியவாதிகளே உங்களைச் சூழ காணப்படும் நச்சுவட்டத்தினை அறியாது நீங்கள் செயற்பட்டால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் விபரிக்க முடியாதவாறு அமையலாம். உங்களை உசுப்பேற்றி புகழ்ந்து புகழ்ந்தே உங்களைச் சூறையாடி நடுத்தெருவில் நிற்கவிடுபவர்கள் வேறு யாருமல்ல… உங்களது நெருங்கிய ஆண் துணைகளே… சமூகவலைத்தளங்களில் நீங்கள் போடும் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நேரடியாகவே உங்களைச் சந்திக்கும் போது நல்லவனாக நடித்தும் உங்களின் துணைவனைவிட இவன் எவ்வளவோ மேல் என அபிப்பிராயப்பட வைத்து உங்களை மயக்கி உங்கள் வாழ்க்கையை நரகமாக்கும் பச்சைக் காவாலிக் கூட்டம் தாறுமாறாக தற்போது அலைந்து கொண்டிருக்கின்றது.
பணம், புகழுக்காக உங்களை நீங்களே இழந்து போய் நிற்கும் போது உங்களுக்கு புரியும்.
குலதீபா தொடர்பாக நாம்  தற்போது தெரிவிக்கும் இந்தக் கருத்துக்கு சமூகவலைத்தளங்களில் எதிர்க் கருத்துத் தெரிவிக்கும் கனவான்களில் ஏராளமானவர்கள் உங்களை அடையத்துடிக்கும் காவாலிகள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கொடூரமான முறையில் தீயில் எரிக்கப்பட்டு தலை கொத்தப்பட்டு, கடலில் மூழ்கடிக்கப்பட்டுப் பலியான தீபா தொடர்பாக  கிடைத்த சில புலனாய்வுத்தகவல்களைத் தருகின்றோம்.
தீபாவும் சமூகவலைத்தளங்களில் அதிக நாட்டம் கொண்டவர் என கூறுகின்றார்கள்.
பெயர் – சுரேஸ்குமார் குலதீபா
வயது – 36
பிறந்த இடம் – வேலணை 4ம் வட்டாரம்.
வசிப்பிடம் – காரைப்புரியல் வீதி, முல்லைப்பிளவு. காரைநகர் .
தொழில் – சமூகசேவை என கூறுகின்றார்கள். எப்படியான சமூகசேவை என தெரியவில்லை. சிறிசிதம்பரேஸ்வரா முன்பள்ளி உப செயலாளர் எனவும் தெரியவருகின்றது.
திருமணம் முடித்து 2 குழந்தைகள் உள்ளன.
எமக்கு கிடைத்த தனிப்பட்ட சில தகவல்களை இங்கே தருகிறோம். தீபாவின் கணவர் மேசன் வேலை செய்பவர் என்று பல ஊடகங்கள் குறிப்பிட்ட போதிலும் அவர் ஒரு அரசாங்க போக்குவரத்து பேருந்து நடத்துனராகவே கடமை ஆற்றுகின்றவர் எனவும் தற்போது மேசன் வேலையும் செய்து வருகின்றார் எனவும் தெரியவருகின்றது.
உயிரிழந்த தீபா யாழ்ப்பாணத்தில் உள்ள (கௌரவமான அல்லது அரச எனும் பெயருள்ள) பாமசியில் 6 வருடங்களுக்கு முன் வேலை செய்துள்ளார். அதே பாமசியில் மற்றுமொரு பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். அந்த பெண்ணும் தீபாவும் நெருங்கிய நண்பிகள் என தெரியவருகின்றது. (அந்த பார்மசி ஓனரரும் சந்தேக நபராக உள்ளதாலும் கொலை செய்ததை இதுவரை ஒத்துக்கொள்ளாத காரணத்தாலும் அந்த பார்மசியின் பெயரையும் ஓனரின் பெயரையும் குறித்த பெண்ணின் பெயரையும் தவிர்த்துள்ளோம்)
சம்பவ தினத்திற்கு முதல் நாள் தீபா தனது கணவனிடம் வவுனியாவில் தோழி ஒருவரின் திருமணச் சடங்கிற்கு செல்ல வேண்டும். அத்துடன் தனது நெருங்கிய நண்பியும் வருகிறாள் ( பாமசியில் வேலை செய்தவள்)  அவளிடமும் நகைகள் இல்லை. அதனால் எனது நகைகள் சிலவற்றை  போடத் தருமாறு கேட்கின்றாள். அத்துடன் தன்னோடு வருமாறும் நகைகளை தான் போட்டு விட்டு உடனே தருவதாகவும் சினேகிதி கூறியதாக கணவரிடம் கேட்டிருக்கின்றார்.
ஆனால் கணவன் அதை மறுத்து இருக்கின்றார்.. வேண்டாம் நீ தனியாக அவ்வளவு தூரத்துக்கு நகைகளோடு யாரையும் நம்பி போக வேண்டாம் என்று கூறி இருக்கின்றார்.. ஆனால் சிநேகிதி மீது கொண்ட நம்பிக்கையால் மனைவி இல்லை அவள் என் உயிர் தோழி. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நான் தானே போகின்றேன், நகையை கையோடு கொண்டு வந்து விடுவேன் என்று சொல்லி இருக்கின்றார்.
மனைவி பிடிவாதம் பிடிக்கவே இனி உன் விருப்பம் என்று கணவன் பிரச்சனையை முடித்து விட்டார். அதன் பின் தன் நகைகளை எடுத்துச் சென்றிருக்கிறாள். மறுநாள் யாழ்ப்பாணம் மருந்தகம் ஒன்றில் கடமையாற்றும் தீபாவின் அந்தச் சினேகிதியோடு  வவுனியா என்ற இடத்திற்கு செல்கின்றேன் என கூறி  தீபா கிளம்பிவிட்டார்.
ஆனால் புரட்டாதி மாதம் சைவசயத்தவர்கள் எவருக்கும் திருமணம் நடைபெறுவதில்லை. ஆகவே தீபா கணவனுக்கு திருமணம் என பொய் கூறி நகைகளையுடன் எங்கு சென்றார் என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது.
திருமணத்திற்காக சென்ற தீபா அன்று இரவாகியும் வராத காரணத்தால் அவளது நண்பியிடம் கணவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ”தீபா எங்கே?” என கேட்ட போது தன்னுடன் தீபா தொடர்பு கொள்ளவில்லை எனவும் தான் தீபாவுடன் எங்கும் செல்லவில்லை எனவும் தீபாவின் நண்பி கூறியதால் கணவன் அதிர்ச்சியடைந்துள்ளார்,  அடுத்தநாள் கணவன் பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டுள்ளார், இவ்வாறான நிலையில் சமூகவலைத்தளத்தில் பெண்ணின் சடலம் சங்குப்பிட்டியில் மிதக்கின்றது என்ற பதிவுகள் புகைபடங்களுடன் வந்த போது கணவன் உட்பட்டவர்கள் அங்கு சென்று பார்த்த போது தனது மனைவிதான் சடலமாக மிதக்கின்றார் என்பதை அடையாளப்படுத்தினார்.
இவ்வாறான நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு வந்த ஒரு டிப்பர் சாரதி பொலிசாருக்கு கூறிய தகவல் இது. ”நான் அதிகாலை 3 மணியளவில் சங்குப்பிட்டியால் வந்து கொண்டிருந்த போது ஒரு வெள்ளைநிறக்கார் இதே பகுதியில் இயங்கு நிலையில் நின்றிருந்தது, எனது டிப்பரை துாரக் கண்ட போதே அவசர அவசரமாக வேகமாக செல்லத் தொடங்கியது. நான் அதனை கருத்தில் எடுக்கவில்லை. ஆனால் கொலை நடந்துள்ளது என அறிந்த போது நான் இதை தெரிவிப்பதற்காக வந்தேன் என பொலிசாருக்கு கூறியுள்ளார். பெரும்பாலும் இவ்வாறான சம்பவங்களுக்கு சாட்சிகள் கூற தயங்குநிலையில் இருக்கும் பலருக்கு மத்தியில் டிப்பர் சாரதியின் இவ்வாறான செயற்பாடு பொலிசாருக்கு உற்சாகத்தை அளித்தது.
அதன் பின்னர் பூநகரிப் பொலிசார் உடனடியாகவே யாழ்ப்பாணத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். தீபா முன்னர் வேலை செய்த அந்த பார்மசியில் தீபாவின் நண்பியிடம் விசாரணைகளை ஆரப்பித்தனர். தீபாவுடன் கதைக்கவில்லை என நண்பி கூறியது பொய் என்றும் தீபாவுடன் தொலைபேசியில் கதைத்த ஆதாரங்கள் கிடைத்ததால் தீபாவின் நண்பி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டாள். அதே நேரம் டிப்பர் சாரதி கூறிய கார் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த பார்மசியின் உரிமையாளரும் சில தகவல்களை மாறி மாறிக் கூறியதால் அவரும் சந்தேகத்தில் கைது செய்யப்பாட்டார்.
ஆனால் குறித்த இருவரிடமும் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்கள் தீபாவின் கொலை தொடர்பாக எந்தவொரு முன்னேற்றகரமான தகவல்களையும் வழங்கவில்லை. அதாவது தமக்கும் தீபாவின் கொலைக்கும் தொடர்பில்லை என தொடர்ந்து கூறி வந்துள்ளார்கள். இந் நிலயைில் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். ஆனாலும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட இருவரையும் பொலிசார்  மீண்டு்ம் தமது விசாரணைக்காக 2 நாட்கள் தமது பொறுப்பில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்து.நகைக்காக தீபா கொல்லப்பட்டார் என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் இருவரையும் விசாரித்த போதும் பொலிசாரால் 17.10 2025 வரையான காலப்பகுதியில் அவர்களிடமிருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 17.10 2025யான காலப்பகுதி வரை சமூகவலைத்தளங்களில் வெளியான தகவல்களில் நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது பொய் என தெரியவருகி்ன்றது.
தீபாவுக்கு என்ன நடந்திருக்கலாம்…..
நாம் சிலவற்றை அறிந்திருந்தும் அவற்றை வைத்து விரிவாக  ஊகித்து கூற முற்பட்டால் தீபாவின் குடும்பத்தினர் மற்றும் சுற்றம் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகலாம் என்றதால் ஒரு சிலவற்றை கூறுகின்றோம்.
திருமண நிகழ்வு எனின் நகைகளும் போட்டுச் சென்றால் மா்ததிரமே கணவன் நம்புவான் என நினைத்து கணவனை ஏமாற்றுவதற்காக திருமண நிகழ்வு என கூறி நகைகளை அணிந்து தீபா சென்றிருக்கலாம். கணவனுக்கு திருமண நிகழ்வு என்று கூறிச் சென்ற தீபா  அன்றே வீடு திரும்ப வேண்டும் என்ற நிலையில் தீபா அன்று வீடு திரும்ப முடியாத நிலையில் தனது நெருங்கிய நட்புக்களுடன் காணப்பட்டிருக்கலாம். தீபா மயக்கமடைந்திருதால் அச்சமடைந்த சிலர் அவளை சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகில் கொண்டு வந்து அங்கு காணப்பட்ட கருங்கற்களால் தலையில் குத்திய பின் அவளது முகம் மற்றும் உறுப்புக்கள் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக தீயில் கருக்கிவிட்டு கடலுக்குள் தள்ளிவிடப்பட்டிருக்கலாம்.
தீபா சங்குப்பிட்டி கடலில் பாதையின் மேற்குப்பக்கமே சடலமாக மிதந்தாள். அந்தக் கடல் அலைகடல் அல்ல. ஆகவே அவளது ஆடைகள் கழன்றிருந்தாலும் அவள் அணிந்திருந்த கீழ்ப்பகுதி உள்ளாடை ( ஜங்கி) ஒரு போதும் கழன்றிருக்க வாய்பில்லை. ஆனால் அவள் சடலமாக மீட்கப்பட்ட போது குறித்த உள்ளாடை காணப்படவில்லை. ஆகவே அவளு்ககு ஏற்கனவே கடும்  சித்திரவதை அல்லது அவள் விரும்பாதவாறான வல்லுறவு நடந்திருக்கலாம்.
ஆனால் சடலம் கடலில் மிதந்து கிடந்ததால் சட்டவைத்திய அதிகாரியால் அது உறுதிப்படுத்தப்படவில்லையே தவிர வல்லுறவு நடந்திருகாது என கூற முடியாது, ஆகவே பொலிசார் இது தொடர்பான தீவிர விசாரணைகளை மேற்கொண்டால் மாத்திரமே குற்றவாளிகளை கையும் மெய்யுமாக பிடிக்க முடியும்.






0 comments:
Post a Comment