புங்குடுதீவில் தேசித்தலைவரின் துணைவியார் வீட்டுக்கு முன் அகிலனை வெட்டிக் கொன்ற ஆவா குழு டினோ உட்பட்ட கொலைகாரர்கள் இவர்கள்தான்!!
புங்குடுதீவு பிரதேசத்தில் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் துணைவியார் திருமதி. மதிவதனி பிரபாகரன் அவர்களின் இல்லத்தின் முன்பாகவே நடைபெற்ற படுகொலை தொடர்பாக பொலிசாரால் தேடப்படும் நபர்கள்
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த ஓகஸ்ட் பத்தாம் திகதி மிகவும் கோரமான முறையில் தனியார் பேருந்து உரிமையாளர் ஐயாத்துரை அற்புதராசா என்கிற அகிலன் வாளால் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தார்.
இப்படுகொலை தொடர்பில் அனலைதீவு கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்கிற நபரை யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் துணுக்காய் தென்னியங்குளம் காட்டு பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் பத்தாம் திகதி கைது செய்திருந்தனர்.
குறித்த செல்வக்குமார் எனும் நபர் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து வழங்கப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் இப்படுகொலை மேற்கொள்ளப்பட்டதாகவும் இப்படுகொலையின் பிரதான சூத்திரதாரியாக ஆவா வன்முறை கும்பலோடு தொடர்புடைய டினோ என்றழைக்கப்படும் செல்லத்துரை டினேஷ்குமார் ( ஏழாம் வட்டாரம் ஊரதீவு, புங்குடுதீவு ) விளங்குவதாகவும் அவரே அகிலனை மோசமான முறையில் வாளால் வெட்டியதாகவும் அவரது நெருங்கிய நண்பரான புங்குடுதீவு ஐந்தாம் வட்டாரம் கேரதீவினைச் சேர்ந்த சிவலிங்கம் நருமதன் ( 952453912v ) என்பவரும் தம்மோடு இணைந்து அகிலனை வெட்டிக்கொன்று விட்டு தப்பிச் சென்றதாகவும் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
கொக்குவில் பிரதேசத்தினை தற்காலிக முகவரியாக கொண்ட டினோ என்கிற டினேஷ்குமார் அகிலனை வெட்டிய பின்னர் தப்பிச்செல்லும்போது அப்பகுதி மக்களின் கல்லெறி தாக்குதலில் தலையில் காயமடைந்ததால் யாழ்ப்பாணம் கந்தர்மடம் பலாலி வீதியில் அமைந்துள்ள வீனஸ் என்கிற தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த இரு நபர்களும் புங்குடுதீவு ஊரதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற வீடு எரிப்பு சம்பவம், புங்குடுதீவு நாலாம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல், புங்குடுதீவு ஆலடி சந்தியில் உள்ள வீடொன்றில் புகுந்து வாள் வெட்டில் ஈடுபட்டமை , கால்நடைகளை இறைச்சியாக்கி கடத்தல் போன்ற குற்றச்செயல்களோடும் , யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பல குற்றச்செயல்கள் , போதைப்பொருள் விற்பனை , போதைப்பொருள் கடத்தலோடும் தொடர்புடைய நபர்கள் என்றும் இவர்களை காண்கிற இடத்திலிருந்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment