பத்மேவை டுபாயில் இரவில் சந்தித்த பியமி!! பத்மே அழகாக தெரிய காரணம் இதுதானாம்!!
நடிகையும், அழகுசாதன உற்பத்தி விற்பனையாளருமான பியூமி ஹன்சமாலி, அண்மையில் கைது செய்யப்பட்ட “கெஹெல்பத்தர பத்மே” உடன் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என மறுத்துள்ளார்.
இன்று வெளியான ஊடக செய்திகளின்படி, பத்மேவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் விவகாரத்தில் குற்றவியல் விசாரணைத் திணைக்களம் (CID) பியூமி ஹன்சமாலியை விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பியூமி ஹன்சமாலி தனது பேஸ்புக் பதிவில், 2022 மார்ச் மாதம் துபாயில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் பத்மேவை ஒருமுறை மட்டுமே சந்தித்ததாகவும், அந்த சந்திப்பு சாதாரணமானதாக இருந்ததாகவும் விளக்கியுள்ளார்.
“அந்த நிகழ்வில் அவரை முதன்முறையாக அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பார்த்தேன். அவர்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அவர் வெள்ளையாகவும் அழகாகவும் மாற விரும்புவதாக சொன்னதால், என் ‘Piumi Skin’ தயாரிப்புகளை பயன்படுத்தச் சொன்னேன்,” என அவர் எழுதியுள்ளார். பத்மே தற்போது அழகாகத் தெரிகிறார் என்பதால், அவர் அந்த தயாரிப்புகளை பயன்படுத்தியிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
பத்மேவுடன் எந்தவிதமான நிதி தொடர்பும் இல்லையென பியூமி ஹன்சமாலி குறிப்பிட்டுள்ளதுடன்,
“CID என்னிடம் பண பரிவர்த்தனை குறித்து கேட்டது — ஒருபோதும் இல்லை! எனக்கு போதைப் பொருள் பணம், சட்டவிரோத பணம், அல்லது கருப்பு பணம் தேவையில்லை. நான் என் சொந்த முயற்சியால் ‘Piumi Skin Private Limited’ என்ற நிறுவனத்தை உருவாக்கிய சுயாதீனமான பெண்,” என அவர் தெரிவித்துள்ளார்.
பாதாள உலக குற்றவாளிகளுடன் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என அவர் நகைச்சுவையாக தெரிவித்துள்ளதுடன், அந்த விடயங்களை கண்டு நான் பயப்படுகிறேன் – வீணாக துப்பாக்கி சூட்டில் இறக்க விரும்பவில்லையென்றுள்ளார்.
அவரது தோல் பராமரிப்பு தயாரிப்புகளை “வெள்ளையாகவும் அழகாகவும் மாற” யாரும் பயன்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






0 comments:
Post a Comment