பிரான்ஸ் போய் அங்குள்ள யாராவது ஒரு சாவகச்சேரி பெடியன் ஒருவனை கலியாணம் கட்ட நினைத்தேன்!! செவ்வந்தி பரபரப்பு வாக்குமூலம்!!
யாழ்ப்பாணத்தின் ஒரு பிரிவான தென்மராட்சிப் பகுதியை குறிப்பாக சாவகச்சேரியை குறி வைத்து சமூகவலைத்தளங்களில் நக்கல் நையாண்டியுடன் பதிவுகள் வெளியாகிவருகின்றன. சாவகச்சேரி வைத்தியசாலையில் அர்ச்சுனாவின் அதகளம் தொடங்கி சாவகச்சேரியைச் சேர்ந்த மாலினி என்ற நோர்வேயில் வாழும் விவாகரத்துப் பெற்ற அன்ரி சமூகவலைத்தளங்களில் செய்யும் அட்டகாசங்கள் மற்றும் காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுப்பதற்காக நகைகளைக் கொள்ளையடித்த சாவகச்சேரி யுவதி போன்றவர்களின் பரபரப்பு சமூகவலைத்தளங்களில் அடங்க முதல் நேபாளத்தில் வைத்து செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட சாவகச்சேரி யுவதி தொடர்பான செய்திகள் பரவியவுடன் மீண்டும் சாவகச்சேரி தொடர்பாக சமூகவலைத்தளங்களில் நக்கல் நையாண்டிப் பதிவுகள் வெளியாகி வருகின்றன.
தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு செவ்வந்தி கொடுத்த வாக்குமூலம் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் வந்துள்ள கேலியுடன் கூடிய இந்தப் பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
”நான் நேபாளத்திலிருந்து எப்படியாவது ஐரோப்பாவில் ஏதாவது ஓரு நாட்டுக்கு குறிப்பாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயன்று கொண்டிருந்தேன்.அதற்காக எனது கூட்டாளிகளுக்கு தகவல்களைக் கொடுத்தேன். ஏன் பிரான்ஸ் செல்ல முற்படுகின்றாய்? வேறு நாடுகளுக்கு செல்ல விருப்பமில்லையா? என எனது கூட்டாளிகள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன் ”பிரான்ஸ்சில் தமிழ்பெடியல் இருக்கிறாங்க. அவங்க அழகான பெட்டைகள் என்றால் கொலைகாரி என்றாலும் குடும்பம் நடத்துவாங்கள். அதிலும் சாவகச்சேரிப் பெடியல் என்டால் கொலைகாரி மட்டுமல்ல லுாசுகளைக் கூட கட்டுவாங்கள். எனக்கு அவங்களைப் பற்றி நல்லாத் தெரியும். அதனாலேய நான் எனது கூட்டாளிகளுக்கு என்னை பிரான்ஸ் அனுப்புவதற்கு முயற்சி செய்யுங்கள் என கூறினேன்.”
என சமூகவலைத்தளங்களில் கேலியுடன் கூடிய பதிவு வைரல் ஆகி வருகின்றது.






0 comments:
Post a Comment