கிளிநொச்சியில் வெளிநாடு செல்ல ஆயத்தமான நிலையில் காணாமல் போன அப்சரன் காட்டுக்குள் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!
கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட யூனியன் குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் வீட்டிலிருந்து 1.5 கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
26 வயதுடைய அப்சரன் எனும் இளைஞனே இவ்வாறு #உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
வெளிநாடு செல்லவிருந்த நிலையில் குறித்த இளைஞன் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்தார்.
இந்நிலையில் இளைஞனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கடந்த 21 ஆம் திகதி கிளி.அக்கராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் இவரது உறவினர்கள் முறைப்பாடு அளித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த இளைஞன் காட்டில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞனின் உயிரிழப்பானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.






0 comments:
Post a Comment